எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, மே 28- ஜாதி, மத மறுப்பு திருமணத்தை திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் நடத்தி வைத்தார். திருச்சி, உய்யக்கொண்டான் திரு மலை, கூலையன் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் - பேபி ஆகியோரின் மகள் பி.மேனகா,  சண்முகாநகரைச் சேர்ந்த கிறிஸ்டி சூசை ரெக்ஸ் - சகாயராணி ஆகியோரின் மகன் இம்மானுவேல் ரூபன் ஆகியோரின் ஜாதி, மதம் மறுப்பு திருமணம் நேற்று 25.5.2018 அன்று காலை 10 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஞா.ஆரோக் கியராஜ் வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த உறுதிமொழியை கூறி ஜாதி, மத மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், இரா.கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணமக்கள் பி.மேனகா - சி.இம் மானுவேல்  சுயமரியாதை திருமண முறைப்படி வாழ்க்கை இணை ஏற்பு உறுதி மொழியை கூறி  மாலை மாற்றி கொண்டனர். முன்னதாக மணமகன் தந்தை கிறிஸ்டி சூசை ரெக்ஸ் தந்தை பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்ட எரிப்பு போராட்ட வீரர் மாவடியான், ராஜ சேகர், மகாமணி,  காட்டூர் கனகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் மா. செந்தமிழினியன்,  பிச்சை,  மற்றும் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner