எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூவாலை, மே 28- தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோர்களின் பிறந்த நாள் விழாவும், பகுத்தறிவு பிரச்சார கூட்டம் சிதம்பரம் கழக மாவட்டம், பூவாலை கிராமத்தில் 23.5.2018 அன்று மாலை 6.30 மணியளவில் மாவட்ட மாணவரணி செயலாளர் சா.உன்னிகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், மாவட்ட துணைத் தலைவர் மழவை கோவி.பெரியார்தாசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை வாசுதேவன் வரவேற்றார்.

கூட்டத்தில் பரங்கிபேட்டை ஒன்றிய கழகத் தலைவர் மஞ்சை அழகரசன், புவனை நகர கழக தலைவர் பெரியவர் ஆசிர்வாதம், சிதம்பரம் நகர கழக அமைப்பாளர் இரா.செல்வரத்தினம் ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து விடுதலை வாசகர் வட்ட தலைவர் நெடுமாறன் பேசியதை அடுத்து நிறைவாக திராவிடர் கழக தலைமை கழக சொற் பெருக்காளர் கி.யாழ்திலீபன் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் செயல் பாடுகள் பற்றியும், இன்றைய மதவாத அரசியல் நிலைபாடுகள் பற்றியும் சிறப்புரையாற்றினார். முடிவில் மண்டல மாணவரணி செயலாளர் ச.வீரமணி நன்றி கூறினார்.

கூட்டத்தில் புதிய வரவுகளாக 15க்கும் மேற்பட்ட இளை ஞர்களும், பொதுமக்களும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டம் துவங்குவதற்கு முன் தூத் துக்குடி ஸ்டெர்லைட் அமைதி வழி போராட்ட துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட 13 நபர்களுக்கு வீரவணக் கம் செலுத்தப்பட்டது.

ஆவடியில் பெரியார் திரைப்படம்!

ஆவடி, மே  28- ஆவடியில் பொதுமக்களுக்காக பெரியார் திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. திரையிடலை அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். கொரட்டூரில் இயங்கி வருகிற கலைஞர் பகுத்தறிவு பாசறை வாரம் தவறாமல் சனிக்கிழமைகளில் பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி, பெண்ணுரிமை, நடப்பு அரசியல் நிகழ்வுகள் போன்ற தலைப்புகளில் மாவட்ட திராவிடர் கழகத்துடன் இணைந்து நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 19-.05.2018 (சனிக்கிழமை) அன்று  பெரியார் திரைப்படத்தை திரையிட்டுக்காட்டியது. இந்நிகழ்ச்சி பாடி பிரிட்டானியா கம்பெனியின் எதிரில், ராதா திரையரங்கத்தின் அருகிலுள்ள விநாயகன் தெருவில் நடைபெற்றது. கலைஞர் பகுத்தறிவு பாசறையுடன் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை இணைந்து இப்பணிகளை மேற்கொண்டது. மாவட்டத் தலைவர் பா.தென்னரசு முன்னிலையில் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் 7 மணிக்குத் தொடங்கி வைத்த இத்திரையிடல் இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்தது. இதில் அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள், கலைஞர் பகுத்தறிவு பாசறையின் ஒருங்கிணைப்பாளர் இரா. கோபால், அதன் பொறுப்பாளர்கள், பாசறையின் மாணவர்கள், திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், துணைச்செயலாளர் இளவரசு, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் கொரட்டுர் பன்னீர் செல்வம், சோபன்பாபு, ஜெயந்தி, அறிவுமணி ஆகியோர் வருகை தந்திருந்து பெரியார் திரைப்படத்தைக் கண்டுகளித்தனர். ஊடகத்துறையின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் உடுமலை வடிவேல் மற்றும் பெரியார் வலைக்காட்சி அருள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner