எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கரூர், மே 28- கரூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் 22.5.2018 அன்று உதயம் தங்கும் விடுதியில் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா செந்தூரபாண்டி தலைமையில் நடைபெற்றது.

கழக  அமைப்பு செயலாளர் உரத்த நாடு இரா குணசேகரன் ,மற்றும் திருச்சி மண்டல செயலாளர் ஆல்பர்ட் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது.

எதிர் வரும் ஜூலை மாதம் எட்டாம் தேதி குடந்தையில் திராவிட  மாணவர் கழகம் சார்பில் பவள விழா மாநாடு நடைபெறுவதையெட்டி மாநாட்டில் அதிகமாக மாணவர்கள் பங்கேற்கவும், அதிகப்படியான நன்கொடை வசூலித்து மாநாட்டை வெற்றி பெறச்செய்யவும் கரூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம்

1) ஜூலை மாதம் எட்டாம் தேதி குடந்தையில் திராவிட கழக மாணவர் அணி சார்பில் "'பெரியரை சுவாசிப் போம், பெரியரால் பெரு வாழ்வு பெறு வோம்" என்ற தலைப்பில் நடைபெற வுள்ள திராவிட மாணவர் கழகம் சார் பில் பவள விழா மாநாட்டில் அதிகமாக மாணவர்களைப் பங்கேற்பு செய்வதும் எனவும் தலைமை கழகம் அறிவிக்கப் பட்ட நன்கொடை தொகையை வசூ லித்து தருவது எனவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மகளிர் அணி தலைவர் சி.ராஜாமணி ரூ. 1000, மாவட்ட தலை வர் ப.குமாரசாமி ரூ. 1000 ஆகியோர் மாநாட்டு நூற்றாண்டு நிதி வழங் கினார்கள்.நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா குணசேக ரன், மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா செந்தூரபாண்டி, திருச்சி மண்டல செயலாளர் ஆல்பர்ட், கரூர் மாவட்ட தலைவர் ப.குமாரசாமி, மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்ட துணை செயலாளர் வே.ராஜூ, நகர தலைவர் க.நா.சதாசிவம், நகர செயலாளர் ம.சதாசிவம், மகளிர் அணி தலைவர் சி ராஜாமணி, இளைஞர் அணி தலைவர் தே அலெக்ஸ், செயலாளர் ம சதாசிவம், அமைப்பாளர் காந்தி கிராமம் ச.இராஜா, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், செயலாளர் கட்டளை உ உ.வைரவன், மாணவர் அணி தலைவர் பெ.பெரியார் செல்வம், அமைப்பாளர் கட்டளை உ.ரூசோ, கடவூர் ஒன்றிய செயலாளர் இரா.கார்த்திக், முனீஸ் வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். நன்றியுரை நகர தலைவர் க.நா.சதாசிவம் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner