எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார்

தஞ்சை, மே 31- உரத்தநாடு - நெடுவாக் கோட்டை மறைந்த பெரியார் பெருந் தொண்டர்கள் வை.குப்புசாமி - குஞ்சம்மாள் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

30.5.2018 அன்று தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு வட்டம் நெடுவாக்கோட்டை வை.குப்புசாமி - குஞ்சம்மாள் ஆகியோரது பேரனும், ஓய்வு பெற்ற கனிம வளத்துறை உதவி இயக்குநர் கு.அய்யாத்துரை - சித்ராதேவி ஆகியோரது மகனுமான அ.சி.பொழிலனுக்கும், தஞ்சாவூர் மாவட்டம், குடந்தை திருநகர் காலனி மறைந்த து.உலகநாதன் - சரசுவதி அம்மாள் பெயர்த்தியும் உ.சம்பந்தம் - பத்மாவதி ஆகியோரது மகளுமான ச.ப.இளவரசிக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையிலும், நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர்கள் ஆ.நட ராசன், மு.முருகையன், உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் மா.இராசப்பன், செயலாளர் ஆ.உத்திராபதி ஆகியோர் முன்னிலையிலும் மிகச்சிறப்பாக நடை பெற்றது.

முன்னதாக திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அனைவரையும் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். தொடர்ந்து வருகை தந்த பெருமக்களுக்கு மணமக்கள் வீட்டார் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பிக் கப்பட்டது.

தமிழர் தலைவருக்கு சிறப்பு

இணையேற்புவிழாவினைநடத்தி வைக்க வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கும், மோகனா அம்மையார் அவர்களுக்கும் மணமக்கள் அ.சி.பொழி லன் - ச.ப.இளவரசி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேடையில் தொடர்ந்து தமிழர் தலைவர் அவர்களுக்கு மணமகளின் தந்தையார் உ.சம்பந்தம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொரு ளாளர் தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.ரெங்கசாமி, ஒன்றிய செயலாளர் செந்தில்வேலன், தஞ்சை மாவட்ட மேனாள் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வலங்கைமான் இராசா, அருண்மொழிவர்மன் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

மணமக்கள் பெற்றோர் கு.அய்யாத்துரை - சித்ராதேவி, உ.சம்பந்தம் - பத்மாவதி ஆகியோருக்கு தமிழர் தலைவர் அவர்கள் சால்வை அணிவித்தார்.

தொடர்ந்து தலைமை கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராஜகிரி கோ.தங்கராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழர் தலைவர் மணவிழாவை நடத்தி வைத்தார்

தமிழர் தலைவர் அவர்கள், நெடுவை குப்புசாமி, கு.அய்யாத்துரை ஆகியோரின் சிறப்புகளையும், மணமக்களை வாழ்த்தியும், அறிவுரை கூறியும் சிறப்புரையாற்றியபின் நெடுவாக்கோட்டை கு.அய்யாத்துரை - சித்ராதேவி, கும்பகோணம் உ.சம்பந்தம் - பத்மாவதி ஆகியோரின் மகன், மகள் அ.சி.பொழிலன் - ச.ப.இளவரசிக்கு உறுதி மொழி கூறி மாலை அணிவிக்கச் சொல்லி டாலர்  அணிவிக்கக்கூறி வாழ்க்கை இணை யேற்பினை நடத்தி வைத்தார்.

மணவிழாவில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் ஆ.நடராசன், மு.முருகையன், தொ.தம்பிக்கண்ணு ஆகி யோருக்கு பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் அவர்கள் பாராட்டினார்.

கலந்து கொண்டோர்

இணையேற்பு விழாவில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், சென்னை தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன், மருத்துவர் மா.செல்வராசு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளர் ஆர்.ரெங்கசாமி, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், நடிகர் மயில்சாமி, இந்திய அணியின் பயிற்சியாளர் சூழியக்கோட்டை பாஸ்கரன், கனிம வளத்துறை இணை இயக்குநர்கள் டி.ஏ.சுப்பையா, வீர.ரகு, செல்வராசு, தஞ்சை மண்டல தலைவர் வெ.செயராமன், செயலாளர் மு.அய்யனார், பெரியார் வீரவிளையாட்டுக் கழக தலைவர் பேரா. ப.சுப்பிரமணியன், செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாவட்டச் செய லாளர் அ.அருணகிரி, பொதுக்குழு உறுப்பினர்கள் கை.முகிலன், ச.மணியன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மேட்டூர் மாவட்டச் செயலாளர் க.நா.பாலு, மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர் கோபு.பழனிவேல், தஞ்சை ஒன்றிய தலைவர் இரா.சேகர், செயலாளர் செ.ஏகாம்பரம், நகரத் தலைவர் ப.நரேந்திரன், செயலாளர் சு.முருகேசன், த.செகநாதன், சென்னை ஆர்.டி.வீரபத்திரன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், ஒன்றிய திமுக செயலாளர் மு.காந்தி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், அனைத்துக்கட்சி தோழர்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.

முடிவில் கு.அய்யாத்துரை அனை வருக்கும் நன்றி கூறினார்.

வருகைதந்த அனைவருக்கும் தேக்கம் பட்டி சிவக்குமார் அவர்களின் விருந்து அளிக்கப்பட்டது.

வருகை தந்த அனைவருக்கும் சுய மரியாதை திருமணம் ஏன்?, திருக்குறள் ஆகிய புத்தகங்களும், மரக்கன்றும் வழங் கப்பட்டன.

பல்வேறு மாவட்டங்களில் இயக்க களப்பணியாற்றிய செயல்வீரர் வன்னிப் பட்டு செ.தமிழ்ச்செல்வன் - க.அம்பிகா இணையரின் ஒன்பதாம் ஆண்டு திருமண நாளையொட்டி (30.5.2018) தமிழர் தலைவர் அவர்கள் இணையருக்கு சால்வை அணி வித்து வாழ்த்தினார். தமிழ்ச்செல்வன் அவர்கள் தமிழர் தலைவர் அவர்களிடம் ரூ. 500 நன்கொடை வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner