எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி கலந்துரையாடலில் தீர்மானம்

ஜூலை 8: குடந்தை மாணவர் கழக மாநாட்டிற்கு திரள்வோம் புதுச்சேரி கலந்துரையாடலில் தீர்மானம்

புதுச்சேரி, ஜூன் 1 புதுச்சேரி மண்டல திராவிட மாணவர் கழக கலந்துரையடல் கூட்டம் 26.5.2018 அன்று காலை 11 மணிக்கு பெரியார் படிப்பகத்தில் எழுச்சி யோடு நடைபெற்றது.

கூட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் தலைமை வகித்தார். திராவி டர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் கலந்து கொண்டு அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள வரவேற் பையும் தமிழர் தலைவர் தலைமையேற்று மாணவர்கள் செயலாற்ற வேண்டிய கட் டாயத்தையும் விளக்கி சிறப்புரையாற் றினார்.

மாநில ப.க. துணைத் தலைவர் மு.ந. நடராசன், மண்டல தலைவர் இர.இராசு, மண்டல செயலாளர் கி.அறிவழகன், மண்டல இளைஞரணி செயலாளர் தி.இராசு, மண்டல அமைப்பாளர் கே.குமார், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், மாவட்ட ப.க. தலைவர் கு.இரஞ்சித்குமார், மாவட்ட ப.க. செயலாளர் ஆ.சிவராசன், பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கே.வி. இராசன், புதுவை ப.க. தலைவர் கோ.கிருட்டிணராஜ், அரியாங்குப்பம் கழக செயலாளர், இரா.ஆதிநாராயணன், ப.தேவகி, கா.சி.தனுசு, செ.தர்மலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

ஜூலை எட்டாம் தேதி கும்பகோணத் தில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டிற்கு 150 மாணவர்கள் தனி பேருந்துகளில் பங்கேற்பது எனவும், மாநாட்டிற்கான நன்கொடையினை திரட்டித் தருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாநில திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு கீழ்க்கண்ட பெருந்தகையாளரின் நன்கொடை வழங்கி சிறப்பித்தார்கள்

இரா.சடகோபன் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) - ரூ. 1,000, மு.ந. நடராசன் (மாநில ப.க. துணைத் தலை வர்)  - ரூ. 500, கே.குமார் (மண்டல அமைப்பாளர்) - ரூ. 500, கே.வி.இராசன் (மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர்) - ரூ. 500, கு.இரஞ்சித்குமார் (மாவட்ட ப.க. தலைவர்) -ரூ. 500, கண்ணன் (புதுச் சேரி செயலாளர்) - ரூ. 600, இரா.ஆதி நாராயணன் (அரியாங்குப்பம் கழக தலை வர்) - ரூ. 500, ப.தமிழ்ப்பிரியன் (பொதுக் குழு உறுப்பினர் லோ.பழனி - தேவகி சார்பாக) - ரூ. 200, தி.இராசா (மண்டல இளைஞரணி செயலாளர்) -ரூ. 200

புதுச்சேரி மண்டல மாணவர் கழக பொறுப்பாளர்கள்

தலைவர்: சு.மணிபாரதி, துணைத் தலைவர்: கு.இனியவன், செயலாளர்: ஏழுமலை, துணை செயலாளர்: ஆ.காவி யன், அமைப்பாளர்: சூரியா, வில்லியனூர் அமைப்பாளர்: அமர்நாத், சேதுராப்பட்டு அமைப்பாளர்: தமிழரசன், செயற்குழு உறுப்பினர்: மகேசுபூபதி, ப.தமிழ்

பிரியன், கு.ஈழவன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner