எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜூன் 1 புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தையின் இராவண காவிய நூல் குறித்து 4ஆம் சிறப்பு சொற்பொழிவு புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் 27.5.2018 அன்று ஞாயிறு மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.

புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத் தறிவாளர் கழகதுணைத் தலைவர் புதுவை மு.ந.நடராசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். புதுச்சேரி பகுத் தறிவாளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன் நிகழ்ச்சியை ஒருங் கிணைப்பு செய்தார். புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராமாயணத்துக்கு எதிராக இராவணகாவிய நூல் பற்றிய சிறப்பு களை இராமனைவிட இராவணன் தென்னிலங்கை வேந்தன், இராவணன் தமிழ்ப்பற்றுள்ளவன், தன்னுடைய மனைவி, தங்கை தமிழ் பெயரு டையவர்கள் என்பது மாத்திரமல்லாது தமிழினத்திற்கே பெருமை சேர்த்தவன் மாவீரன் இராவணன் என்று இராவண காவியத்தில் புலவர் குழந்தை குறிப் பிட்டு இருப்பதை மேற்கோள் காட்டி வெல்லும் தூய தமிழ் இதழாசிரியரும், புதுச்சேரியின் புகழ்மிக்க எழுத்தாளரும் கவிஞரும் ஆகிய மேனாள் சார்பு செயலர் முனைவர் க.தமிழ்மல்லன் அவர்கள் பட்டியலிட்டு பல்வேறு செய் திகளை நகைச்சுவையுடன் எடுத்தியம்பி சிறப்பான ஆய்வுரையை இரத்தின சுருக்கமாக எடுத்தியம்பினார். இராவண காவிய தொடர் சொற்பொழிவு 4ஆம் அரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், புதுச்சேரி திராவிடர் கழக மண்டல தலைவர் இர.இராசு, பொதுக் குழு உறுப்பினர் விலாசினி ராசு, எழுத்தாளர் பைரவி (எ) இரமேசு, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.கிருட்டிணராசு, பொறுப்பாளர் இரா.வெற்றிவேல், உழவர்கரை நக ராட்சி கழக தலைவர் சு.துளசிராமன், மகளிரணி பொறுப்பாளர் கல்பனா துளசிராமன், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர் யேசுராஜ் (எ) யாழ் தமிழன், மருத்துவர் அரிமா மகிழ்கோ, கதிர்காமம் காசி.தனுசு, ஓவியர் செ.தர்மலிங்கம், மேனாள் புதுச்சேரி பகுத் தறிவாளர் கழக செயலாளர் கோ.மு. தமிழ்செல்வன், இரா.சாம்பசிவம், உழ வர்கரை தெ.குப்புசாமி, இரா.பாரதி ராசா, கவிஞர் இரா.கலியபெருமாள், சி.குமார், இரத்தின இரகுராஜ், திருச்சி வீ.பிரகாஷ், பி.சுபத்ரா, பி.பிருந்தா, பி.வெண்முகில், சிவலிங்கபுரம் சு.நாராயணசாமி, காமராஜ் நகர் ஆ.அருள், புதுச்சேரி சி.குமார், இரத்தின குகராஜ், இர.கார்த்திகேயன், பெ.மகாதேவன், இரகுராமன், ராஜ்முகில், புதுவை தமிழ் சங்கம், விஜயா ராமலிங்கம், ப.தமிழ்ச்செல்வன், மு.ந.ந.தாமரைச் செல்வன், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைவர் தந்தை பெரியார் குறித்து பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுதிய கவிதை வரிகள் நகல் எடுத்து அனை வருக்கும் வழங்கப்பட்டது.  இதனூடே இராவணன் யார்? என்ற வினாவுடன் விடையளிக்கும் புதுவை மு.ந.நட ராசனின் கவிதை நகல் எடுத்து அனை வருக்கும் வழங்கப்பட்டது. கருத்தரங்க முடிவில் இராவண காவிய தொடர் சொற்பொழிவை புதுச்சேரியின் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளுமுகமாக பரப்புரை செய்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner