எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்லக்குறிச்சி, ஜூன் 1 தமிழக அரசின் 2016-2017 ஆம் ஆண்டுக் களுக்குரிய தமிழ்ச்செம்மல் விருது அண்மையில் அறிவிக்கப் பட்டது.

2016 ஆம் ஆண்டுக்குரிய தமிழ்ச்செம்மல் விருதினை மாவட்ட கழக இலக்கிய அணித்தலைவர் புலவர் பெ.சயராமன் பெற்றார்.

அவருக்கு கல்லக்குறிச்சி கழக மாவட்டம் சார்பில் 16.5.2018 அன்று செல்வி உதயகுமார் இல்லத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தின்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, மாவட்ட கழக தலைவர் ம.சுப்பராயன், செயலாளர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், மண்டல செய லாளர் குழ.செல்வராசு, மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை விடுதியில்

தந்தை பெரியார் சிலை புதுப்பிக்கப்பட்டது

புதுக்கோட்டை, ஜூன் 1 அறந்தாங்கி மாவட்டம் ஆலங்குடி புதுக் கோட்டை விடுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை துரோகியால் சேதப்படுத்தப் பட்டபின் சரி செய்து புதிதாக வர்ணம் பூசப்பட்ட நிலையில் 22.5.2018 அன்று காலை 7 மணியளவில் புதுக்கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன் பெரிய அளவிலான மலர் மாலையினை அணிவித்தார். அப்போது தந்தை பெரியார் வாழ்க, சாதியை ஒழித்த பெரியார் வாழ்க, பெண்ணடிமையை ஒழித்த பெரியார் வாழ்க, மனிதநேய மாண்பாளர் பெரியார் வாழ்க வாழ்க என முழக்கமிடப்பட்டது. கிளை கழகத் தலைவர் க.இராமசாமி, நகர கழக வீ.கருப்பையா, கிளை கழக செயலாளர் வீ.தங்கவேல், கிளை கழக திமுக செயலாளர் க.முத்துவீர், க.ந.வீரமணி (திமுக), இரா.மே.அருண் குமார், கருப்பையா, தங்கராசு மற்றும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள்.

"பெரியார் பேசுகிறார்" - தொடர் கூட்டங்கள்

கடலூர், ஜூன் 1 கடலூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் கடலூர் புதுப்பாளையம் திருப்பு முனை பயிற்சி மய்யத்தில் 27.5.2018 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழன்பன் (எ) இரா.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ப.க. செயலாளர் கவிஞர் க.எழிலேந்தி வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் ப.சிவக்குமரன், சு.அய்ங்கரன், மாவட்ட மகளிரணி தலைவர் செ.முனியம்மாள், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளரும், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இள.புகழேந்தி, மாவட்ட தலை வர் தென்.சிவக்குமார், மாவட்ட செயலாளர் நா.தாமோதரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

கூட்டத்தில் பெரியார் நூலக நூலகர் தி.மாதவன், முத்தமிழ் சங்க தலைவர் காரை பழ.ஆறுமுகம், நகர கழக செயலாளர் இரா.சின்னதுரை, ப.சதீஷ்குமார், ச.தேஜோன்பதி, தோழர் பால்கி, விஜயலட்சுமி, பெ.நல்லதம்பி, து.துரைவேலு, வ.இராமலிங்கம், கோவி.சுப்பிரமணியன், கோவி.குணசேகரன், வடக்குத்து டிஜிட்டல் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் முன்னாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வழக்குரைஞர் கோ.வனராசு நன்றி கூறினார்.

இயற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்

1) மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 250 மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கான சந்தாக்கள் வசூலிப்பது எனவும்

2) செப்டம்பர் 2018இல் நடைபெற உள்ள பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டில் கடலூர் கழக மாவட்டத்தின் சார்பில் திரளான தோழர்கள் பங்கேற்பது எனவும்

3) பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்கள் சேர்ப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவது எனவும்

4) பெரியார் பேசுகிறார்' தொடர் கூட்டங்களை வாய்ப்புள்ள இடங்களில் நடத்துவது எனவும்

5) பெரியாரால் வாழ்கிறோம்' பொதுக்கூட்டங்கள் ப.க. சார்பில் நடத்துவது எனவும்

6) ஆகஸ்டு 2018இல் நடைபெறும் பெரியார் பிஞ்சு' மாநாட்டில் ப.க. அமைப்பு சார்பில் குடும்பத்தோடு கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner