எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவருக்குத் தீப்பந்த வரவேற்பு!

மாநாட்டு மேடைக்கு வருகை தந்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நூற்றுக்கணக்கான இருபால் இளைஞர்களும் கரங்களில் தீப்பந்தம் ஏந்தி எழுச்சி முழக்கமிட்டு வீர வரவேற்பு அளித்தனர். "தமிழர் தலைவர் தலைமை யில் தந்தை பெரியார் பணிமுடிப்போம்!" என்ற முழக்கம் மண்ணையும், விண்ணை யும் அதிர வைத்தது.

பட்டுக்கோட்டை, ஜூன் 1  சுயமரியாதைச் சுட ரொளிகள் புலவஞ்சி ரெ. இராமையன், புதுக்கோட்டை உள்ளூர் எம்.எஸ். முத்துக் குமாரசாமி ஆகியோரின் பெயரில் பட்டுக்கோட்டை மாநாட்டு மேடையும், அரங் கமும் எழிலாக அமைக்கப் பட்டு இருந்தன. மாநாட்டுக்கு தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. வெற்றிக்குமார் தலைமை வகித்தார்.

அவர் தனது தலைமை உரையில் குறிப்பிட்டதாவது:

சூத்திரர்கள் படிக்கக் கூடாது; தாழ்த்தப்பட்டவர்கள் பொது வீதிகளில் நடக்கக் கூடாது என்ற ஒரு நிலை ஒரு கால கட்டத்தில் இருந்ததுண்டு. அந்த வேற்றுமையை இனத்தின் மீதான இழிவை ஒழித்துக் கட்டியவர்தான் அறிவாசான் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் தமிழ்நாட்டில் உயிரோடு இல்லை. மறுபடியும் பழைய நிலைக்கே நாட்டைக் கொண்டு சென்று விடலாம் என்று ஆரிய ஆர்.எஸ்.எஸ். சக்திகள் மனப்பால் குடிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். - பிஜேபி கூட்டம் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் காலூன்றப் பார்க்கிறது. நமது தமிழர் தலைவர் தலைமையிலே அவர்களின் சூழ்ச்சிகளையும், திட்டங்களையும் முறியடிப்போம் என்று சூளுரைத்தார் மாநாட்டுத் தலைவர் தஞ்சை இரா. வெற்றிக்குமார்.

மாநாட்டு வரவேற்புரையை பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் சோம. நீலகண்டன் ஆற்றினார். மாநாட்டுக்கு முன்னிலை வகித்த தோழர்கள்:

அ.தனபால் (தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர்), க.சிவக்குமார் (கும்பகோணம் மாவட்ட இளைஞரணி தலைவர்), கோரா.வீரத்தமிழன்  (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர்), வே.இராஜவேல் (தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர்), க.திராவிடன் கார்த்தி  (குடந்தை மாவட்ட இளைஞரணி செயலாளர்), சு.வீரக் குமார் (பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞரணி தலைவர்).

கழகக் கொடி ஏற்றல்

திராவிடர் கழகக் கொடியை பெரியார் பிஞ்சு, பட்டுக் கோட்டை நகர திராவிடர் கழகச் செயலாளர் வழக்குரைஞர் அண்ணாதுரை அவர்களின் மகன் திருவள்ளுவன் ஏற்றினார்.

திராவிடர் கழகக் கொடி பிறந்த வரலாற்றை வரிசைப்படி எடுத்துக் கூறினார்.

மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் தனது உரையில் - இந்தி திணிப்பு , சமஸ்கிருதத் திணிப்பு, நீட் திணிப்பு, கடைசியாக குரு குலக் கல்வி திணிப்பு ஆகிய திணிப்பு நடவடிக்கைகளை ஆரிய பிஜேபி அரசு ஆர்.எஸ்.எஸின்  ஆலோசனை பெயரில் செய்து வருகிறது.

தந்தை பெரியார் தந்து சென்ற குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததற்கான தீப்பந்தம். எங்கள் கைகளில் இன்னும் இருந்து கொண்டுதான் உள்ளது. தமிழர் தலைவர் ஆணையிட்டால் ஆரிய சூழ்ச்சிகளை, திட்டங்களைத் தரை மட்டமாக்கிட இளைஞர்கள் தயார் தயார் என்று குறிப்பிட்டார்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்

இராஜகிரி கோ. தங்கராசு

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் மறைவிற்குப் பிறகு நமது தமிழர் தலைவர் ஆசிரியர்  தலைமையில் கழகம் சுவடு மாறாமல், இலட்சியப் பாதையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனர். அதற்கு இங்கு நடக்கும் மாநாடே சாட்சி. அடுத்த ஜூலை 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு நடைபெற உள்ளது. அம்மாநாட்டின் வெற்றிக்கு இம்மாநாடு அச்சாரமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்

மாநாட்டில் உரையாற்றிய பொதுச் செயலாளர்

வீ. அன்புராஜ் - இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து கொண்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக 65 தொடர் கூட் டங்களை சிறப்பாக நடத்தியிருக்கின்றனர்.

நமது மாநாட்டுத் தீர்மானங்கள் காகிதத்தில் அச்சிடப் பட்ட வெறும் எழுத்துகள் அல்ல. அரசின் சட்டங்களாக வருங்காலத்தில் வரக் கூடியவையாகும் என்று குறிப் பிட்டார்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

மாநாட்டின் பேரணியைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்ன துணைத் தலைவர்  கவிஞர் கலி. பூங்குன்றன் - வடக்கே பிஜேபி ஆட்சியில் நடக்கும் அவலங்களை எடுத்துக்காட்டி இந்த மாநாட்டின் வெற்றி என்பது  - இந்தப் பகுதியிலே நமது இயக்கத் தோழர்களின் தொடர் நடவடிக் கைகளைப் பொறுத்து இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஜூலையில் குடந்தையில் மாணவர் மாநில மாநாடு -2019 ஜனவரியில் தஞ்சையில் கழக மாநில மாநாடுகள் நடக்கவிருப்பதையும் விளக்கிப் பேசினார்.

சிற்பி பில்டர்ஸ்

பட்டுக்கோட்டை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவரும், மாநாட்டுப் பொருளாளருமான வை.சேகர் அவர்களின் தொழிற்சாலையில் பணியாற்றும் தோழர்கள் மாநாட்டு மேடையில் தமிழர் தலைவரிடம் அறிமுகப் படுத்தப்பட்டனர்.

பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழக இளைஞரணி தலைவர் எஸ். மாதவன் நன்றி கூற  இரவு 10 மணிக்கு மாநாடு வரலாற்றுச் சிறப்புடன் நிறைவுற்றது.

மாநாட்டின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டும் - சிறப்பும்

மண்டல இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு அயராது  உழைத்த தோழர்களுக்குப் பாராட்டும், சிறப்பும் செய்யப்பட்டது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தோழர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பு செய்தார். தோழர்கள் வருமாறு: இரா.வெற்றிக்குமார், பேராவூரணி சிதம்பரம், சோம.நீலகண்டன், வெ.கா.நீலகண்டன், கி.குண சேகரன், சு.வசி, இரா.நீலகண்டன், சிராஜ், பிரகாசு, குமார், சேகர், பட்டுக்கோட்டைத் தோழர்கள் ஆரோக்கி யராஜ், டேனியல், ஆனந்த், ஏனாதி அரங்கசாமி, தென்னரசு, மாதவன், தென்னவன், வீரக்குமார், பழனி, பாலையன், இராசா, வை.சேகர், விடுதலை வேந்தன், போட்டோ அருளானந்து, வழக்குரைஞர் அண்ணாதுரை, தென்னவன், திராவிடன், ஜோதி இராதாகிருஷ்ணன், மணி முத்து, சிற்றரசு, மலையரசன்.

தீப்பந்த வரவேற்பு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner