எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பண்ணந்தூர், ஜூன் 2- கிருட்டின கிரி மாவட்டம் காவேரிப்பட் டணம் ஒன்றியம் பண்ணந்தூரில் அம்பேத்கர் பொதுநல நற் பணி மன்றம், ஊர் பொது மக்கள் சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 127ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி மாபெரும் கைப்பந்து போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, அரசு பள்ளி யில் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிச ளிப்பு மற்றும் பண்ணந்தூர் காலணியிலிருந்து முதல் தலை முறையாக மருத்துவக் கல்லூ ரியில் இட ஒதுக்கீட்டின் அடிப் படையில் பயின்று வருகின்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பொதுக்கூட்டம் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊர்மணியக் காரர் பி.ஆதிமணி தலைமை வகித்தார். அம்பேத்கர் பொதுநல நற் பணிமன்ற நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலை வகித்தனர். அம்பேத்கர் பொது நல நற்பணிமன்ற கவுரவ தலைவர் எம்.தென்னரசு அனைவரையும் வரவேற்றார். நற்பணி மன்ற தலைவர் ஆர். கணேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தருமபுரி அம்பேத்கர் அறக்கட் டளை தலைவரும் மேனாள் மாவட்ட கல்வி அலுவலரு மான இராஜசேகர், திராவிடர் கழக கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர் கோ.திராவிடமணி,  மாவட்டத் துணைத் தலைவர் த.அறிவரசன் ஆகியோர் கலநது கொண்டு கருத்துரையாற்றினர்.

அரசு ஊழியர் அய்க்கிய பேரவை தருமபுரி மாவட்டத் தலைவர் உரைவாள் எ.கொ. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக் களின் விடுதலையும் அம்பேத் கரின் களப்பணியும் என்ற தலைப் பில் சிறப்புரையாற்றினார்.

கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல் வன் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வில் தந்தை பெரியாரின் பங்கு என்ற தலைப்பில் சிறப் புரையாற்றி மருந்துவ கல்லூரி யில் முதல் தலைமுறையாக பயின்றுவரும் அய்ந்து பண் ணந்தூர் காலனி மாணவ, மாண விகளுக்கு பாராட்டி நினைவு பரிசினை வழங்கினார். மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை முதல், இரண்டாம் இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் தருமபுரி மண் டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் தி.கதி ரவன், தலைவர் இல.ஆறு முகம், மாவட்ட ப.க. தலைவர் இ.லூயிசுராசு, அமைப்பாளர்  மு.வேடியப்பன், கிருட்டினகிரி நகர ம.க. தலைவர் எல்.அய்.சி. சி.சுப்பிரமணி, காவேரிப்பட் டணம் ஒன்றியச் செயலாளர் சிவ.மனோகர், மேனாள் மாவட்ட இளைஞரணி க.பழ னிசாமி, அரசம்பட்டி கிளைத் தலைவர் த.சக்திவேல், அகரம் நா.சதீஷ்குமார் உள்பட கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner