எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரியலூர், ஜூன் 4- அரியலூர் ஒன்றிய அமைப்பாளர் ந.செல் லமுத்து அவர்களின் பவள விழா நிகழ்வு 30.5.2018 அன்று காலை 11 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

செல்லமுத்து அவர்களின் மகன் ந.செ.வீரமணி வரவேற்க, மண்டல தலைவர் சி.காமராஜ் தலைமையேற்க ஒன்றிய தலை வர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருட் டிணன், பகுத்தறிவாளர் அப் துல்மஜீத் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

செல்லமுத்துவின் தொண்ட றத்தைப் பாராட்டி பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கலியமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் இரத் தின.இராமச்சந்திரன், மேனாள் மாவட்ட செயலாளர் சா.இரா சேந்திரன், விடுதலை சிறுத் தைகள் கட்சி மதி, பெரம்பலூர் மாவட்ட ப.க.செயலாளர் பெ. நடராசன், நகர செயலாளர் சித் தார்த்தன், செந்துறை ஒன்றிய திமுக செயலாளர் மு.ஞான மூர்த்தி, மாவட்ட செயலாளர் சு.சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை.நீலமேகன், மதிமுக மாவட்ட செயலாளர் கு.சின்னப்பா, தி.மு.க. பெரம்பலூர் நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் முகுந்தன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, கழக செயல வைத்தலைவர் சு.அறிவுக்கரசு, அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங் கர், கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகி யோர் பெரியார் பெருந்தொண் டர் ந.செல்லமுத்துவின் தொண் டறத்தைப் பாராட்டி, பெரியார் கொள்கைகளின் சிறப்பை எடுத்துக்கூறி வாழ்த்துரை வழங் கினார்கள். செல்லமுத்து அவர் களுக்கு ஏராளமானவர்கள் பய னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

பங்கேற்றோர்

திமுக மாவட்ட இ.அ. துணை அமைப்பாளர் லூயி. கதிரவன், பொதுக்குழு உறுப் பினர் இரா.பாலு, பெரம்பலூர் மாவட்ட கழக நிருவாகிகள் ப.ஆறுமுகம், பெ.துரைசாமி, பச்சமுத்து, மு.விஜயேந்திரன், அக்ரி ஆறுமுகம், அரியலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் கள் இரா.திலீபன், சோ.க.சேகர், சொ.மகாலிங்கம், பெ.கோபி நாதன், மா.சங்கர், லெட்சும ணன், புலவர் அரங்கநாதன், சி.தமிழ்சேகரன், துரை.பிரபா கரன், இரா.தமிழரசன், கோ.பாண்டியன், லெ.தமிழரசன், அறிவு ஜீவா அச்சகம் செல்ல பாண்டியன், கரூர் மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, பெண்ணாடம் சுப்பிரமணியன், புள்ளம்பாடி பொற்செழியன் உள்ளிட்ட ஏராளமான தோழர் களும், உறவினர்களும் சிறப் பாக பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner