எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எரிச்சி, ஜூன் 6- அறந்தாங்கி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 24.5.2018 அன்று இரவு ஏழு மணிக்கு எரிச்சியில் நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் மாநாட் டிற்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க இருப்ப தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேரு ழைப்பில் இயக்கம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருப்பதை யும் சுட்டிக்காட்டி சிறப்புரை யாற்றினார்.

மண்டல தலைவர் பெ.இராவணன், மாவட்ட தலை வர் க.மாரிமுத்து, மாவட்ட துணைத் தலைவர் க.முத்து, மாவட்ட ப.க. தலைவர் ஆசிரியர் அ.தர்மசேகர், கழகப் பேச்சாளர் சு.ப.மணியரசன், மண்டல இளைஞரணி செய லாளர் க.வீரையன், அறந்தாங்கி நகர செயலாளர் இரா.யோகராசு, வழக்குரைஞர் இரா.குமார் ஆகியோர் கருத்துரை வழங்கி னார்கள்.

ஜூலை எட்டாம் தேதி குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு தனி வாக னத்தில் செல்வது எனவும் நன் கொடை திரட்டித் தருவது என வும் தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டி நன்கொடையாக, மண்டல இளைஞரணி செய லாளர் க.வீரையன் ரூ. 1000 நன்கொடை வழங்கினார்.

புதிய பொறுப்பாளர்கள்

மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர்: வழக்குரை ஞர் இரா.குமார், மாவட்ட தலைவர்: சதீசு, மாவட்ட செய லாளர்: சரவணன், மாவட்ட அமைப்பாளர்: அகிலன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner