எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருத்தணி, ஜூன் 9- திருவள்ளூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.6.2018 அன்று காலை 11 மணிக்கு திருத்தணியில் நடை பெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் பங் கேற்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கொள்கைக ளுக்கு மாணவர்கள், இளைஞர் கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரவேற்பையும், தமிழர் தலை வரின் ஓய்வறியா உழைப்பா லும், பேச்சாலும் உலகம் முழு வதும் அறிவாசான் தந்தை பெரியாருக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பையும் விளக்கி உரை யாற்றினார். பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற பொறுப்பாளர் கவிஞர் பொதட்டூர் புவியர சன், மாவட்ட தலைவர் வழக் குரைஞர் மா.மணி, மாவட்ட செயலாளர் அறிவுச்செல்வன், மண்டல தலைவர் பு.எல்லப் பன், மாவட்ட துணைச் செய லாளர் இரா.ஸ்டாலின், மேனாள் மண்டல செயலாளர் கா.ஏ. மோகனவேலு, பெரியார் பெருந்தொண்டர்கள் கணேசன், து.இரா.முருகேசன், பள்ளிப் பட்டு ஒன்றிய தலைவர் கர்லிம் பாசிகம் பெருமாள், தும்பிக் குளம் கிளைக் கழகத் தலைவர் ந.சிவமணி, சத்துரஞ்சபுரம் மணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்முரசு, பகுத் தறிவாளர் கழக பொறுப்பாளர் வீரமணி, பெரியார் திடல் யுவ ராசு, சென்னை சட்டக்கல்லூரி மாணவர் கழக செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் கருத் துரை வழங்கினர்.

திராவிட மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள்

தலைவர்: மு.வானவராயன், துணைத் தலைவர்: கெ.இராசு குட்டி, செயலாளர்: ப.பெரியார் செல்வம், துணைச் செயலாளர்: கே.முகிலன், அமைப்பாளர்: பி.விசால், திருத்தணி நகர அமைப்பாளர்: செ.பிரசாந்த், பள்ளி மாணவர் கழக அமைப் பாளர்: கு.தமிழரசு, திருத்தணி நகர திராவிடர் கழக செயலா ளர்: கோ.கிருட்டிணமூர்த்தி.

திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு நன்கொடை வழங்கியவர்கள்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் கவிஞர் பொதட்டூர் புவியரசன் ரூ. 1000, மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா. மணி ரூ. 2000, பெரியார் பெருந் தொண்டர் கணேசன் ரூ. 500, மாவட்ட துணைச் செயலாளர் இரா.ஸ்டாலின்  ரூ. 500, மாவட்ட மாணவர் கழக செய லாளர் ப.பெரியார் செல்வம் ரூ. 500, மேனாள் மண்டல செயலாளர் மோகனவேலு ரூ. 500, மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்முரசு ரூ. 100, தும்பிக்குளம் தலைவர்: ந.சிவ மணி ரூ. 500

சூலை எட்டாம் தேதி குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக மாநாட்டிற்கு தனி பேருந்தில் அதிகமான மாணவர்களை பங் கேற்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner