எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை மாணவர் கழக மாநாட்டில் அதிகளவில் மாணவர்கள் பங்கேற்க

புதுக்கோட்டை ஜூன் 14- புதுக் கோட்டை மாவட்டத் திராவி டர் கழக அலுவலகத்தில் திராவிடர் கழக மாணவர் அணி கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது.

இந்நிகழ்வுக்கு மாநில திராவிடர் கழக அமைப்பாளர் இரா.குணசேகரன் தலைமை வகித்தார். மாநில திராவிடர் கழக மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு, பெரியார் மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் பெ. இராவணன், மாவட்டத் தலைவர் மு. அறி வொளி, மாவட்டச் செயலாளர் பவீரப்பன், மாநில இளைஞ ரணித் துணைச் செயலாளர் வெஆசைத்தம்பி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் பெ.அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் மேலும் மாவட் டத் துணைத் தலைவர் செ. இராசேந்திரன், மண்டல மாண வர் கழக செயலாளர் இரா. குமார், நகரச் செயலாளர் ரெ. மு.தருமராசு, திருச்சி சட்டக் கல்லூரி திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர் சங்கவி தர்மா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் அமைப்பின் சார்பில் புதுக்கோட்டை நகர மாணவர் கழக தலைவராக மு.சண்முகசுந்தரம், மாணவர் கழக செயலாளராக உசரத் குமார், மாவட்ட மாணவர் கழக தலைவராக பெ.அன்பர சன், செயலாளராக ஆறுபாலச் சந்தர், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளராக ஆச தென்றல், துணைத்தலைவராக ஆசண்முக நாதன், துணைச் செயலாளராக சி.பொன்னுச்சாமி, உறுப்பினர் களாக கார்த்திகேயன், வெ.பொன்னுசாமி கனிமொழி எழி லரசன், பள்ளி மாணவர் கழக பொறுப்பாளர்களாக ஆ.ச.இனி யவன், சு.க இயல், மாகதிரவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர்.

குடந்தையில் எதிர்வரும் 8.7.2018 அன்று நடைபெறவிருக் கும் மாநில மாணவர் கழக மாநாட்டிற்காக மாவட்டத் தலை வர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் பவீரப்பன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி ஆகியோர் தலா ரூபாய் 500 வீதம் ரூபாய் 1500 மாநில அமைப் பாளர் இராகுணசேகரன் அவர் களிடம் வழங்கினார்கள்.

மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் பிரின்சு என் னாரெசு பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன் அவர்கள் பய னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்.

மேலும் மாநாட்டின் நோக் கம் குறித்தும் இன்றைய அர சியல் சூழலில் மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டிய பாதை குறித்து விளக்கிப் பேசினார்.

இந்நிகழ்வின் தீர்மானமாக கும்பகோணம் மாநில மாண வர் கழக மாநாட்டுக்காக அதி களவில் கழகத் தோழர்களுடன் மாணவர்களை வாகனங்களில் அழைத்துச் சென்று சிறப்பிப் பது என்று தீர்மானம் இயற்றப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner