எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஜூன் 16- 09.06.2018 அன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் அரங்கத்தில் மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 65வது நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தங்கினார்.

விடுதலை வாசகர் வட்டத் தின் செயலாளர் பணி நிறைவு பெற்ற கல்வி அதிகாரி. ச. பால் ராசு, வரவேற்புரை நிகழ்த்திய தோடு விடுதலையின் 84ஆவது ஆண்டுகால சாதனையை விவ ரித்து உரையாற்றினார். நிகழ்ச் சிக்கு முன்னிலை வகித்த பேராசிரியர் இ.கே. ராமசாமி அவர்கள் சிறப்பு பேச்சாளரை அறிமுகப்படுத்தி உரையாற்றும் போது கவிஞர் இரா.இரவி அவர்கள் அரசு ஊழியராக பணியாற்றினாலும் பல சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் தனது பங்களிப்பை தருவதில் தயங்குவதில்லை என்பதும் அவர் "அய்க்கூ திலகம்" என்று போற்றப்படுவதோடு 16 விருதுகள் பெற்றவர் என்றும் இவரது கவிதைகள் பாரதிதா சன் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரியில் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கிறது என்ப தோடு லண்டன் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து இருக்கிறது என்பதை கூறினார். இறுதியில் சிறப்பு பேச்சாளர் கவிஞர் இரா.இரவி அவர்கள் உரையாற்றுகையில், மத வெறிக் கும்பல் இந்த நாட்டில் மத நெறியை பரப்புவதாக சொல்லி மத வெறியை பரப்பு கிறார்கள் என்றும், அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாக சொல்லி வன் முறையில் ஈடுபட்டதையும், கோத்ரா ரயில் நிலைய சம்பவத் தில் அவர்கள் ஆடிய கொலை வெறி ஆட்டத்தையும் மற்றும் நாட்டில் பல வன்முறைச் சம் பவங்களுக்கு அவர்களே கார ணமாக இருந்து வருகிறார்கள் என்பதை பட்டியலிட்டு விளக் கினார். சமீபத்தில் குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்ட அவமரி யாதையை நாட்டுக்கு முதன் முதலில் வெளிப்படுத்தியது விடுதலை நாளேடுதான் என் பதையும் நினைவுபடுத்தினார். சிறையில் இருக்கும் கைதிக ளில் யாரும் நாத்திகர்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். இறுதியில் பெரியார் பற்றிய தமது நீண்ட கவிதையை வாசித் தார். நிறைவாக விடுதலை வாசகர் வட்டத்தின் ஒருங் கிணைப்பாளர் மா.பவுன்ராசு நன்றியுரை ஆற்றியதோடு விடு தலை வாசகர் வட்டத்தின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner