எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கபிஸ்தலம், ஜூன் 16- 9.6.2018 சனி மாலை 6.00 மணிக்கு குடந்தை கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் ஜூலை 8 திராவிட மாணவர் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சரியாக 6.30 மணியிலிருந்து மந்திரமா? தந்திரமா? நிகழ்வு குடந்தை ஜெயமணிகுமார் அவர்களால் நடத்தப்பட்டது.     கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வால் பொதுமக்கள் ஆங் காங்கே நின்றுகொண்டு கூட்டத்தினை கண்டனர். மந்தி ரமா? தந்திரமா? நிகழ்வு நடை பெற்றபோது மக்கள் நெருங்கி கவனித்தனர்.

தொடர்ந்து 7.30 மணிக்கு கபிஸ்தலம் தி.கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில் ஏ.கைலாசம் வரவேற்புரையாற்றினார். அனைத்து ஒன்றிய, நகர, மாவட்ட பொறுப்பாளர்களின் சார்பாக மாவட்ட செயலாளர் சு.துரைராசு பேசினார்.

தொடர்ந்து கழக சொற்பொ ழிவாளர் பெரியார்செல்வன் பல்வேறு விளக்கங்களோடு உரையாற்றினார். இறுதியில் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம் நன்றி கூறினார். ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி அனைவருக்கும் சிறப்பு செய்தார்.

கூட்டத்தில் இயக்க பொறுப் பாளர்களும், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களும் மக ளிரணியினரும் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner