எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஜூன் 16- காரைக்குடி பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பில் 09.06.2018 அன்று சனிக் கிழமை 5 மணி அளவில்  சிந்த னைக்களம் என்ற பெயரில் ஆய்வரங்க அமர்வு தொடங்கப் பட்டது. நிகழ்வுக்கு மண்டல தலைவர் சாமி திராவிடமணி தலைமை வகித்தார். பேராசி ரியர் அ.மார்கஸ் தொகுத்த 'கல்விச் சிந்தனைகள் -பெரியார் என்ற நூலினை தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை தலைவரும், தேவகோட்டை ஒன்றிய ப .க. தலைவருமான அ.அரவரசன் திறனாய்வு உரை ஆற்றினார். தொடர்ந்து நூல் குறித்த விவாதமும் நடைபெற் றது. நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் முனைவர் மு.சு.கண்மணி (பக மாநில துணை தலைவர், சு.முழுமதி (மாவட்ட பக தலைவர்), ச.அரங்கசாமி, (மாவட்ட கழக தலைவர்), ம.கு.வைகறை (மாவட்ட கழக செயலாளர்), தி.என்னாரசு பிராட்லா (தலை மைக் கழக சொற் பொழிவா ளர்), ந.தம்பிராஜா (பக மாவட்ட து.தலைவர்), வி.முருகப்பன் (பக தேவகோட்டை),  ப.சுந்த ரம் (பக), ஜெ.அருண் பிர காஷ் (பக), தி.கலைமணி (நகர கழக செயலாளர்), ந ஜெகதீசன் (நகர திக தலைவர்), கி.மணிவண்ணன் (நகர பக தலைவர்), இ.ப. பழனிவேல் (மாவட்ட கழக துணை செயலாளர்), கொ.தினேஷ்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்), மூ. நலன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner