எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்லக்குறிச்சி, ஜூன் 16- வருகிற ஆகஸ்டு 1ஆம் தேதி நடை பெறவுள்ள திராவிடர் எழுச்சி மாநாடு தொடர்பாக மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 11.6.2018 கல் லக்குறிச்சி நெற்காடு எலக்ட் ரிக்கல் மாடியில் மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலை மையில் நடைபெற்றது.

மண்டல செயலாளர் குழ. செல்வராசு வரவேற்புரையாற் றினார். மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் மாநாடு சிறப்பாக நடைபெற தோழர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி கருத்துரை வழங்கினார். இதில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்

1) திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும் ஆகஸ்டு 1ஆம் தேதி திராவிடர் எழுச்சி மாநாட்டை ஒரு மிகச் சிறப் பாக நடத்துவது எனத் தீர் மானம் நிறைவேற்றப்படுகிறது.

2) திராவிடர் எழுச்சி மாநாட்டை, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடனும், மந் திரமா? தந்திரமா? நிகழ்ச்சி யுடனும் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்படு கிறது.

3) திராவிடர் எழுச்சி மாநாட்டை ஒட்டி சுவர் எழுத்து விளம்பரங்களை கல்லக்குறிச்சி யிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் செய்வதென தீர் மானம் நிறைவேற்றப்படுகிறது.

இக்கலந்துரையாடல் கூட் டத்தில் மாவட்ட கழக இலக் கிய அணித்தலைவர் பெ.சய ராமன், மாவட்ட பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் சி. முருகன், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் பெரியார், மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் முத்து வேல், அப்துல்மாலிக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லை நகர தலைவர் ச.சுந்தரராசன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner