எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

ஈரோடு, ஜூன் 17 திராவிட மாணவர் கழகத் தின் ஈரோடு மாவட்ட  கலந்துரையாடல் கூட்டம் 9.6.2018 அன்று காலை 10.30 மணியவில் ஈரோடு பெரியார் மன்றத்திலும், நீலமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாலை 6 மணியளவில் குன்னூர் ஆசியன் சுற்றுலா தங்கும் விடுதியிலும் துவங்கி நடைபெற்றது.

நிகழ்வுகளில் எதிர்வரும் சூலை 8ஆம் தேதியன்று கும்பகோணத்தில் நடைபெறும் திராவிடர் மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இவ்விரு கூட்டங்களுக்கும்  திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை தாங்கி மாநாட்டை பேரெழுச்சியோடு நடத்துவது குறித்த யுக்திகளை விவரித்தார்.

திராவிடர் கழகத்தின் மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், திராவிட மாணவர் கழகத்தின் மாநில அமைப்பாளர் செந்தூரபாண்டி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ஆ.பிரபாகரன் ஆகியோர் மாணவர் கழக மாநாட்டின் நோக்கம் குறித்தும், மாநாட் டிற்கு மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்யும் வகையிலும், கழகத் தோழர்கள் எழுச்சியோடு பணியாற்றவேண்டும் என் பதை வலியுறுத்தியும் உரை நிகழ்த்தி னார்கள்.

கழகப் பொருளாளர் உரை

நீலமலை மாவட்ட திராவிட  மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் சிறப்போடு பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கழகப் பொரு ளாளர் மருத்துவர் சு.பிறைநுதல்செல்வி அவர்கள் பேசியதாவது;

வருங்கால தூண்களாக இருக்கக்கூடிய மாணவர்கள் அறிவியல் ரீதியாகச் சிந்திக்க வேண்டும்! ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும்! பகுத்தறிவுக் கொள்கைகளை தெரிந்து கொள்ள வேண்டும்! "நீட்" தேர்வு ஏன் வேண்டாம்?  அது நம் அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கிறது? என்பதை  புரிந்து கொள்ள வேண்டும்! கல்வியை மத்திய பட்டிய லிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும், குலக்கல்வித் திட்டத்தை அமல் படுத்தும் மத்திய பிஜேபி அரசின் சூழ்ச்சிகளை வீழ்த்தவும் நமக்கு செயல் திட்டத்தை வகுத்துத் தரக்கூடிய வகையில் வருகிற சூலை 8 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டில் இருபால் மாணவர்கள் திரளாகப் பங் கேற்கவேண்டும்.இவ்வாறு அவர் உரை யாற்றினார்.

மாநாட்டு நிதி (ஈரோடு மாவட்டம்)

பேராசிரியர் ப.காளிமுத்து ரூ.1000, மாவட்ட துணைச் செயலாளர் மணி மாறன் ரூ.1000-, கால்நடை மருத்துவர் மோகனசுந்தரம் ரு. 1000, விடியல் பதிப்பகம் ராமச்சந்திரன் ரு.500-, பவானி அசோக் ரு.500, பி.என்.எம்.பெரியசாமி மதிவாணன் ரு.500- ஆக ரு.4500- கழக அமைப்பாளரிடம் வழங்கப்பட்டது.

தீர்மானங்கள்

குடந்தை மாநாட்டில் ஈரோடு,நீலமலை மாவட்டங்களின் சார்பில் ஏராளமான மாணவர்களை திரட்டி தனி வாகனங்களில் சென்று பங்கேற்பது, மாநாடு பற்றி பலமுனைகளில் விளம்பரங்கள் செய்வது, மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநாட்டு நிதி இலக்கினை முடித்துத் தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்: (ஈரோடு மாவட்டம்)

திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் ஜெயசூர்யா, செயலாளர் மதி வாணன், அமைப்பாளர் மதியரசு, ஈரோடு மாநகர தலைவர் கவுதமன்,துணைத் தலைவர் மாதேஸ்வரன், செயலாளர் சஞ்சய், துணைச் செயலாளர் கவின்குமார், அமைப்பாளர் சிதம்பரம், பள்ளி மாணவர் கழக தலைவர் அருந்தமிழ், செயலாளர் ஆழி இளம்பரிதி

நீலமலை மாவட்டம்

திராவிட மாணவர் கழகத் தலைவர் ராம்குமார், செயலாளர் புஷ்பலதா, அமைப்பாளர் நவீன் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

பங்கேற்றோர் (ஈரோடு மாவட்டம்)

பேராசிரியர் ப.காளிமுத்து, கோ.பால கிருஷ்ணன், ப..பிரகலாதன், ப.சத்தியமூர்த்தி, தே.காமராஜ், ப.வெற்றிவேல், பி.என்.எம்.பெரியசாமி,   அசோக்குமார், தேவேந்திரன், "விடியல்" ராமச்சந்திரன், ச.பிரபு, மருத்துவர் மோகன சுந்தர்ராஜ், த.வினோத், ஜெயராணி, சஞ்சய் ஆகியோர் பங்கேற்றனர்.

நீலமலை மாவட்டம்: மருத்துவர் இரா.கவுதமன், நாகேந்திரன், வேணுகோபால், ரா.சி.பிரபாகரன், ச.மணிகண்டன், பா.சத்தியநாதன், இரா.வாசுதேவன், சண் முகசுந்தரி, பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இராவண காவிய தொடர் சொற்பொழிவு

புதுச்சேரி, ஜூன் 17 இராமனை விட தமிழ்மன்னன் இராவ ணனே சிறந்த ஆட்சி புரிந்தவன் என பறை சாற்றும் திராவிட இயக்க எழுத்தாளர் புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம் எனும் நூல் ஆய்வுரை தொடர் சொற்பொழிவு அய்ந் தாவது அமர்வு புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் 9.6.2018 அன்று மாலை 6 மணியளவில் எழுச்சி யுடன் நடைபெற்றது.

கருத்தரங்க நிகழ்விற்கு புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி முன்னிலை வகித்தார். புதுச்சேரி வெல்லும் தூயதமிழ் இதழாசிரியர் கவிஞர் முனைவர் க.தமிழமல்லன் இராவண காவியத்தில் உள்ள விருத்தபடலம், ஆரிய படலம், மனையர படலம் பற்றியவை களை எடுத்துக்கூறி மனையர படலத்தில் செந்தமிழ் மொழியை வளர்க்க புலவர் களுக்கு இராவண அரசன் பெரும் பொருளையும், பொன் னையும் கொடுத்து உதவி செய் ததையும், உழவுத் தொழிலை தமிழர்கள் சிறப்பாக செய்ய வேண்டி ஊக்குவித்ததையும், உழவுத்தொழிலை கண்ணென கருதி நாட்டு மக்கள் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத் தை யும், கல்வியை அனைவரும் கற்க வேண்டும் என்றும் எதிரி களும் புறமுதுகிட்டு ஓட வைக்கும் ஆற்றல் கல்விக்கே உண்டு என்றும், அனைவரும் கல்வி கற்பதன் அவசியத்தை இராவணன் சிறப்பாக செய்தான் என்றும் இராவண காவிய நூலில் புலவர் குழந்தை குறிப் பிட்டுள்ளதை சுவைபட எடுத் துக்கூறி சிறப்பான ஆய்வுரையை நிகழ்த்தினார். இறுதியாக புதுவை மு.க.நடராசன் நன்றி கூறினார். வழக்கம்போல் சிந்த னையை தூண்டக்கூடிய கருத் துகள் அடங்கிய துண்டறிக் கைகளை வந்திருந்த அனைவ ருக்கும் புதுவை மு.நடராசன் வழங்கினார்.

கருத்தரங்கில் புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர.இராசு, செயலாளர் கி.அறிவழ கன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் கோ.கிருட்டிணராசு, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் டிஜிட்டல் லோ.பழனி, புலவர் ஆ.இராம கிருட்டிணன், புதுச்சேரி நக ராட்சி கழகத் தலைவர்

மு.ஆறுமுகம், அமைப்பாளர் மு. குப்புசாமி, பேராசிரியர் மு.இளங்கோ, பகுத்தறிவாளர் கழக மேனாள் செயலாளர் கோ.மு. தமிழ்ச்செல்வன், வாணரப் பேட்டை பெ.ஆதிநாராயணன், இந்தியன் வங்கி மேனாள் மேலாளர் சி.எம்.பிள்ளை, பத்மா பிள்ளை, பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் கி.வ.இராசன், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், வி.துரைக்கண்ணு, இர.இராமன், வி.குணா, கி.கலியபெருமாள், இரத்தின குகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வருகிற 24.6.2018 அன்று மாலை 5 மணியளவில் இராவண காவிய தொடர் சொற் பொழிவு 6. தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. அனைவருக்கும் பகுத் தறிவாளர் கழக தோழர் இரா.வெற்றிவேல் தேநீர் அளித்து மகிழ்ந்தார்.

தந்தை பெரியார் பார்வையில் அரசியல்  - கருத்தரங்கம்

பெரம்பலூர், ஜூன் 17 பெரம்பலூர், குணகோமதி மருத்துவமனை யில் 2.6.2018 அன்று மாலை 5.30 மணிக்கு விடுதலை வாசகர் வட்டம் 11 ஆவது கூட்டம் திராவிடர் கழக நகர அமைப் பாளர் அ.ஆதிசிவம் தலை மையில் நடைபெற்றது.

பெ.நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். அ.ஆதிசிவம்  தலைமை உரையாற்றினார். "பெரியார் பார்வையில் அரசி யல்" என்ற தலைப்பில் திருச்சி காட்டாறு இதழ் குழு பொறுப் பாளர் தி.தாமரைக் கண்ணன் உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பேராசிரியர் சா.தங்கப்பிரகாசம், மருத்துவர் குணகோமதி, நகரத் தலைவர் ந.ஆறுமுகம், மாவட்டத் தலை வர் சி.தங்கராசு, மாவட்டச் செயலாளர் பெ.அண்ணாதுரை, மாவட்ட அமைப்பாளர் பெ.துரைசாமி, ஆலத்தூர் ஒன் றிய செயலாளர் ரெ.வேலாயுதம், மருந்தியல் கல்லூரி விரிவுரை யாளர் ஆ.புரட்சிக்கொடி, ஆசி ரிய பெருமக்கள் ஜெயா, சுந்தர வடிவேல், ஆ.துரைசாமி, நா. அரங்கசாமி, சுந்தராஜ், அம்பேத் கர் மக்கள் மன்ற அமைப்பாளர் இரா.கிருஷ்ணசாமி. மற்றும் புலவர் இராசு, சா.கோவிந்தசாமி, ரெ.செல்வக்குமார், ம.கலைச் செல்வி, சின்னசாமி, மக்கள் அதிகார அமைப்பு கு.சுமதி, தேவகி, யாழினி, முகிலி ஆகி யோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner