எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொகுப்பு: மயிலாடன்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் குருதிக் குடும்பத்தில் நடைபெற்ற அவரது பெயரன் கபிலனின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா - அது கடந்த 17 ஆம் தேதி ஞாயிறு அன்று முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி சுருக்கமாக ஒரு மணிநேரத்தில் முடிவுற்றது.

இதற்குரிய சிறப்பு என்பது அழைப்பிதழ் அச்சிடப்பட வில்லை. விரிவாக எல்லோருக்கும் அழைப்புக் கொடுத் தும் நடத்தப்படவில்லை.

பெரியார்திடல்,‘விடுதலை'பணிமனைகுழுமத் தினர், மணமகன் நடத்தும் தொழிலகத்தில் பணியாற்று வோர் மற்றபடி அன்றாடம் சந்திக்கும் தோழர்கள், சென்னையில்பலவகைகளிலும்தொடர்ந்துகொண் டிருக்கிற பெருமக்கள், கழகத்தின் மாநிலப் பொறுப் பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், அறக்கட்டளைக்குரியவர்கள், கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் என்கிற அளவில் தொலைப்பேசி வழியாகவும், நேரில் சந்திக்கும் வாய்ப்புகளில் கொடுத்த அழைப்பால் வந்தவர்கள் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் கூடினர்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேரில் பங்கு கொண்டது ஒரு மகிழ்ச் சிக்குரிய தகவலாகும். ஒரே இடத்தில் இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து சில நாள்கள் மகிழும் வாய்ப்பினை இத்திருமணம் தந்தது என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

இளமை வளமையை விரும்பும் என்பர்.

இளமை எளிமையை விரும்பிய புதுமையை

வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஆசிரியர் அவர்களின் திருமணத்தில் (1958) குறிப்பிட்ட வாழ்த்துக் கவிதை வரிகளின் வடிவமாக இந்தத் திருமணம் அமைந்திருந்தது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

திராவிடர்கழகத்தலைவர்ஆசிரியர்கி.வீரமணி - மோகனா ஆகியோரின் பெயரனும், கழகப் பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் - சுதா ஆகியோரின் செல்வனுமான கபிலன் - சென்னை ம.கோபாலகிருஷ்ணன் - சுகுணா ஆகியோரின் செல்வி மகாலட்சுமி ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்தம் அது.

இந்தத் திருமணத்திற்கு மற்றொரு முத்திரை சிறப்பு மூவர் வரவேற்புரை ஆற்றியதாகும்.

புதுக்கவிதையோ!

மணமகன் கபிலனின் மூத்த சகோதரி பொறியாளர் கவின் தூவிய வர வேற்புப் பூக்கள் புதுக்கவிதை போல குழைந்தது; குருதிக் குடும்ப உறவுகள் சார்பாக அந்த வரவேற்புத் தேன்குழலி!

அனைவருக்கும் வணக்கம். எங்கள் இல்ல மண விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஒரு பெரிய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அய்யாவுடைய பேத்தி; மணமகன் கபிலன் அவர்களுடைய அக்கா. நான் ஒரு சுறுசுறுப்பு. நான் எங்கள் அய்யாவைப் பார்த்தே வளர்ந்திருந்தாலும், என்னுடைய தமிழாற்றல் அவருக்குப் பக்கத்தில் நிற்க முடியாது. அதனால், நான் பேசுவதில் தவறு ஏற்பட்டால் மன்னித்துக் கொள்ளவும். நான் இயல்பான தமிழில்தான் உரையாற்றப் போகிறேன்.

நான் இந்த மணவிழாவில் வரவேற்புரையாற்றுவது, எனக்கு இன்றைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, குடும்பம் சார்பாக. குடும்பம் என்று சொன்னாலே, அய்யாவிற்கு இயக்கக் குடும்பம்தான் ஞாபகத்திற்கு வரும். கொஞ்சம் மாறுதலாக, அவருடைய சொந்தக் குடும்பத்திலிருந்து உங்களையெல்லாம் வரவேற்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

தொடங்கும்பொழுதே, வித்தியாசமாக இருக்கும் என்று சொன்னதில், எப்பொழுதுமே நம்மூர் நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றும்பொழுது, ‘‘திராவிடர் கழகத் தலைவரே வருக! வருக!’’ என்று ஆரம்பிப்பார்கள்.

எங்கள் குடும்பத்தினுடைய தலைவர்களான இரண்டு தூண்கள்

நான் கொஞ்சம் வித்தியாசமாக, எங்கள் குடும்பத்தி னுடைய தலைவர்களான இரண்டு தூண்களான அவர் களே, வருக! வருக! என்று வரவேற்கலாம் என்று இருக் கிறேன். அவர்கள்தான் எங்களுடைய பாட்டியும் - அய்யாவும்!

பாட்டி - அய்யா, வாங்க! வாங்க! உங்களுடைய பேரனு டைய மணவிழாவிற்கு!

அடுத்து இந்தத் தூண்கள் பல ஊர்களில் இருக்கிறது. சென்னையில், கடலூரில்,  திருவண்ணாமலையில், சிங்கப்பூரில், அமெரிக்காவில். அத்தனைக் குடும்பத்தி னரும் தம்பியின் மணவிழாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் வாங்க! வாங்க! என்று நான் வரவேற்கிறேன்.

இப்பொழுது இந்த நிகழ்ச்சியில், நம்மோடு இணை வதற்காக மணமகள் மகாலட்சுமி, அவர்களுடைய அப்பா, அம்மா, உற்றார், உறவினர், நண்பர்கள் அவ்வளவு பேரும் இங்கே வந்திருக்கிறார்கள். உங்களுடைய சார்பாக, அவர்களை நம் குடும்பத்தில் இணைத்துக் கொள் வதற்காக அவர்கள் அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்.

நான் முன்பே சொன்னதுபோல, நம் குடும்பம் என்று சொன்னாலே, அய்யாவிற்கு இயக்கக் குடும்பம்தான் ஞாபகத்திற்கு வரும். அதனால், நம் இயக்கத்திலிருந்து வந்திருக்கின்ற நம் தோழர்கள் அனைவரையும் வாங்க! வாங்க! என இருகை கூப்பி வரவேற்கிறேன்!

அனைவரையும் நன்றி கலந்த உணர்வுடன்

வாங்க! வாங்க!

நம்முடைய நண்பர்களும் நமக்கு முக்கியம். அந்த விதத்தில், எங்கள் அய்யாவுடைய நண்பர்கள், டாக்டர்கள், எங்களுக்குத் தூண் போல பல விஷயங்களில் பக்கபலமாக இருந்த அனைவரையும் நன்றி கலந்த உணர்வுடன் வாங்க! வாங்க! என்று வரவேற்கிறேன்.

அடுத்ததாக, நம் கழகம் மட்டுமல்லாமல், நம்முடைய கல்வி நிறுவனங்கள், பெரியார் திடலில் இருப்பவர்கள், பணியாற்றுபவர்கள், பெரியார் குடும்பத்தோடு எல்லா விதத்திலும் சம்மந்தப்பட்ட அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்.

அனைவருக்கும் நன்றி

என்னுடைய அப்பாவும், என் தம்பியும் அதிக நேரம் செலவழிப்பது சூர்யா டிரேடிங் அலுவலகத்தில்தான். (இப்பொழுது பெரும்பாலும் கபிலனே கவனித்துக் கொள்கிறார்) அந்த அலுவலக சகோதர, சகோதரிகளையும், எங்களை சிறிய வயதிலிருந்து எங்களைப் பார்த்த அந்த அண்ணன்கள், அக்காக்கள் எல்லோரையும் வாங்க! வாங்க! நம்முடைய தம்பி கல்யாணத்தைப் பாருங்கள் என்று சொல்லி வரவேற்கிறேன்.

இங்கே வந்திருக்கின்ற அனைவரையும், வர முடியாமல், தூரத்திலிருந்தே வாழ்த்துகிற அனைவருக்கும் நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு மணமகன் கபிலன் அவர்களின் சகோதரி கவின் வரவேற்புரையாற்றினார்.

கலி.பூங்குன்றன் வரவேற்புரை

கழகக் குடும்பங்களின் சார்பில், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றி னார்.

பாராட்டுதலுக்கும், வாழ்த்துதலுக்கும் உரிய மண மக்களே,மணமக்களின்பெற்றோர்களே,இந்தக்குடும் பத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கக் கூடிய இயக்கக் குடும்பங்களுக்கும், மனித உரிமையாளர் களுக்கும் தந்தை பெரியார் வாழ்வியல் நெறியைக் கொண்டவர்களுக்கும், மரியாதைக்குரிய தலைவராக வழி காட்டியாக இருக்கக்கூடிய கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களே,

அவர்களை இந்த 85 ஆம் ஆண்டிலும், அனைத்து வகையிலும் பாதுகாத்து, ஓயாப் பொதுத் தொண் டாற்றுவதற்குப் பாதுகாப்புச் செவிலியராக இருக்கக் கூடிய அவர்களின் வாழ்விணையர் என்னுடைய ஆருயிர் சகோதரியார் மோகனா அம்மையார் அவர்களே!

முதல் வரவேற்புரை குருதி உறவுகளுக்காக.

இது இரண்டாவது வரவேற்புரை - எனக்கு தலைவர் அவர்கள் இட்டிருக்கின்ற கட்டளை - இயக்க ரீதியாக கொள்கை உறவுகளுக்கான வரவேற்புரையாகும்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அச்சிட்ட அழைப்பு இல்லாமலேயே வந்திருக்கின்ற உங்களை எந்த வகையில் வரவேற்பது என்பது தெரியாமல் தவிக்கின்றோம்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த  பெருமக்கள்

பல்வேறு துறையைச் சார்ந்த பெருமக்கள் இங்கே வந்திருக்கிறார்கள். நம்முடைய ஆசிரியருடைய மருத் துவர்கள், அய்யா எம்.எஸ்.ஆர்.,  ராஜசேகரன் போன்றோர் ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுக்காக சொல்கிறேன். நீதி பதிகள் அய்யா ஏ.கே.ராஜன், சிங்காரவேலு போன்றவர்கள்.  நமது மதியுரைஞர் ராஜரத்தினம் போன்றவர்கள், பல்வேறு துணைவேந்தர்கள் அய்யா இராமசாமி, என்.ஆர்.சி. போன்றவர்கள். அதேபோல, பல்வேறு துறைகளைச் சார்ந்த பெருமக்கள் இம்மணவிழாற்கு வருகை புரிந்தி  ருக்கிறார்கள்.

இயக்கத்தைப் பொறுத்தவரையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இங்கே வருகை தந்திருக் கிறார்கள். மாநில பொறுப்பிலுள்ளவர்கள் இங்கே வந் திருக்கிறார்கள். அமைப்புச் செயலாளர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள். மண்டல தலைவர்கள், செய லாளர்கள்,  மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் வந்திருக்கிறார்கள். நகர, ஒன்றிய, கிளைக் கழகத் தோழர்கள் கேள்விப்பட்ட அளவில் வந்திருக்கிறார்கள். அறக்கட்டளை நிர்வாகிகள் வந்துள்ளனர். (அறக் கட்டளைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் ஆசிரியரின் திருமணத்துக்கே வந்திருந்தவர்).

உங்கள் அத்துணைப் பேரையும் கழகக் குடும்பத்தின் சார்பாக அன்புடன் வருக! வருக!! என வரவேற்கிறோம்.

இன்றைக்கு ஆசிரியர் அவர்களைக்கூட நாம்தான் வரவேற்க வேண்டும்.

இன்று காலையில்கூட ஒரு மணவிழாவில் பங்கேற்றுவிட்டுத்தான்...

ஒரு உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நேற்று முதல் நாள் வெள்ளியன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சி. நேற்று மாலை மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களால் எழுதப் பெற்ற ஒரு ஆங்கில நூல், அதன் மொழி பெயர்ப்பு நூல் ‘‘வாய்மையே வெல்லும்’’ - அந்த நூல் வெளியிட்டு விழாவில், நூலை வெளியிட்டு, இரவு 9 மணிவரை நேற்று அந்த நிகழ்ச்சியில் இருந்தார்கள்.

அதைவிட இன்னொன்றை சொன்னால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். யாரும் நம்பமாட்டார்கள். இன்றைக்குக் காலையில்கூட, செங்குன்றத்திற்குச் சென்று, ஒரு மணவிழாவினை நடத்தி வைத்துவிட்டுத்தான், தன்னு டைய பேரன் மணவிழாவிற்கு இங்கே வந்திருக்கிறார்கள்.

இதுதான் தந்தை பெரியார் சொல்லிக் கொடுத்த தொண்டறம். இங்கே கவின் சொன்னதுபோல, குடும்ப உறவுகள் என்று சொல்லக்கூடிய அந்த ரத்த உறவைவிட, இயக்க உறவுதான் எங்கள் தாத்தாவுக்கு முக்கியம் என்று சொன்னார்களே, அது எவ்வளவு உண்மை என்பதற்கு அடையாளமாக இன்று காலையில்கூட ஒரு மணவிழாவினை நடத்தி வைத்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறார்கள் என்பதை இந்த அரங்கத்திற்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் (பலத்த கரவொலி!).

76 ஆண்டுகால

பொதுவாழ்க்கை!

இயக்க வரலாற்றில் மட்டுமல்ல, இயக்க வரலாறு என்றால், இன்றைக்கு 93 ஆண்டுகள் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு - அந்த 93 ஆண்டுகளில், 76 ஆண்டுகால பங்களிப்பு நம்முடைய தலைவருக்கு உண்டு.

85 முடிந்து 86 வயதில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்கள். இதில் 76 ஆண்டுகால பொதுவாழ்க்கை என்பது அவர்களுடைய தனிச்சிறப்பு.

உலகிலேயே ஒரு பத்திரிகைக்கு 56 ஆண்டுகாலம் ஆசிரியராக இருந்த பெருமை நமது தலைவருக்கு மட் டுமே உண்டு.

அந்தக் குடும்பத்தில் நடைபெறுகின்ற இந்தத் திரு மணத்தைப் பொருத்தவரையில், எவ்வளவு எளிமை யாக நடத்த முடியுமோ, அவ்வளவு எளிமையாக நடத்த வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம்- கட்டளை!

அழைப்பிதழ் இல்லாமலேயே

இவ்வளவு பெரிய திரள்!

ஊருக்கெல்லாம் சென்று பேசுகிறோம்; அதுபோல, நாம் நடத்திக் காட்ட வேண்டாமா? என்பதுதான்ஆசிரி யரின் அடிமனக் கருத்து. அழைப்பு இல்லாமல், வாயளவில் சொல்லியே இவ்வளவு பெரிய திரள் இங்கே வந்திருக்கிறது என்றால், அழைப்பிதழ் அச்சிட்டு அழைத்திருந்தால், அது மாலை நேர மாநாடாகத்தான் இந்தத் திருமணம் நடந்திருக்க முடியும்.

சுயமரியாதைத் திருமணம் என்று சொல்கின்றபொழுது, இந்தக் குடும்பத்திற்கும், சுயமரியாதைத் திருமணத்திற் கும்கூட ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. 1928 இல் தந்தை பெரியார் அவர்கள் சுக்கிலநத்தத்தில் திருமணம் நடத்தினார். எப்படி தெரியுமா? ஒரு மணமகன்; இரண்டு மணமகள்கள். பார்ப்பனர் இல்லாத புரோகிதமற்ற திருமணமா? சரி, வந்த அளவிற்கு அந்தக் காலகட்டத்தில் இலாபம் என்று தொடங்கப்பட்ட அந்த சுயமரியாதை திருமண இயக்க வரலாறு இன்றைக்கு எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், எல்லோருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

இன்று உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளிலும், சிங்கப் பூர், மலேசியா, லண்டன் போன்ற நாடுகளில் இந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகி இருக்கிறது.

1934 ஆம் ஆண்டு திருச்சியில்!

அந்த வகையில், 1934 ஆம் ஆண்டு நம்முடைய கழகத் தலைவர் அவர்களுடைய மாமனார் -மாமி யார் திருமணம்; அம்மா மோகனா அம்மையார் அவர் களுடைய பெற்றோர்களான கோட்டையூர் சிதம்பரம் - ரெங்கம்மாள் திருமணம். 1934 ஆம் ஆண்டு திருச்சியில், கருணாநிதி பூங்காவில் நடைபெற்றது.

அதிலுள்ள புரட்சி என்னவென்றால், மணமகள் இணையரை இழந்தவர்; மணமகன் துணைவரை இழந் தவர்.

1934 இல் அப்படியொரு புரட்சிகரமான திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் நடத்தி வைத்தார்கள். இந்தக் குடும்பத்திற்கும் சுயமரியாதை திருமணத்திற்கும் இடையே உள்ள உன்னத வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

அதில் என்ன வேடிக்கை என்னவென்றால், 1953 இல் அவர்களுடைய சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது (26.8.1953). ஆனால், அவர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், சட்டம் என்ன சொல்கிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல; எங்கள் தலைவர் பெரியார் என்ன சொல்கிறார் என்பதுதான் முக்கியமென்று, நாட்டில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன. அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில்தான் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது (1968).

தனிப்பட்ட வாழ்க்கையில்கூட தந்தை பெரியார் இட்ட கட்டளையைப் பின்பற்றியவர் நமது தமிழர் தலைவர்

நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு, மணமகளை தேர்வு செய்தது தந்தை பெரியாரும், அன்னை மணி யம்மையார் அவர்களும்தான்.

ஆசிரியர் அவர்களுக்கு 25 வயது. தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் அவர்களை அழைத்து, திருமணத்தைப்பற்றி சொன்னபொழுது,

இப்பொழுது தேவையில்லை என்றுதான் சொன்னார்.

இல்லை, இல்லை நான் ஏற்பாடு செய்துவிட்டேன் என்று அய்யா சொன்ன பிறகு,

‘‘நீங்கள் சொன்னதற்குப் பின்னர் வேறு என்ன இருக்கிறது’’ என்று ஆசிரியர் அவர்கள் ஒப்புக்கொண்டார்.

மணமக்களைப் பார்க்கவேண்டும் என்று அய்யாவும் - அம்மாவும் சொன்னபொழுது,

‘‘நீங்கள் பார்த்ததற்குப் பின்னால், நான் பார்க்கத் தேவையில்லை’’ என்று தனிப்பட்ட வாழ்க்கையில்கூட தந்தை பெரியார் இட்ட கட்டளையைப் பின்பற்றியவர் நமது தமிழர் தலைவர்  அவர்கள்.

‘‘தமிழ்நாட்டுத் திருநாள்’’

1958 ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள், திருச்சியில், பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார், தந்தை பெரியார் ஆகியோர் கையொப்பமிட்டு, அச் சிட்டு, அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, நடந்தேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க திருமணம் அது. அந்தத் திருமணத்தை புரட்சிக்கவிஞர் அவர்கள், ‘‘தமிழ்நாட்டுத் திருநாள்’’ என்று கவிதையாக வடித்து வாழ்த்தினார்.

தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் முன்னின்று அந்தத் திருமணத்தை நடத்தினார்கள்.

அந்தத் திருமணத்தில் ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கும் முறையை மாற்றி, ‘‘வாழ்க்கைத் துணைநலம்’’ என்ற ஒரு புத்தகம் வந்தவர்களுக்கு எல்லாம் கொடுக்கப்பட்டது - அந்த புத்தகத்தைத் தொகுத்ததும் நம்முடைய ஆசிரி யர்தான்.

அந்தத் திருமணத்தில் ஆசிரியர் அவர்கள் சொன் னார், ‘‘அய்யா அவர்களே, எனக்குத் திருமணம் செய்து வைத்தீர்கள். அடுத்து நான் மாமியார் வீட்டுக்குப் போகத் தயாராக இருக்கிறேன்’’ என்று சொன்னதும், எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் ஒரு போராட்டத்தை அறிவித்திருந்தார். அந்தப் போராட் டத்தில் ஈடுபட்டு நாங்கள் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம் என்பதைத்தான் மாமியார் வீட்டுக்குச் செல்ல தயாராக இருக்கிறோம் என்று சொன்னார் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்டப்பட வேண்டும்.

மேலும் மேலும் புரட்சி மெருகேறி நடந்துகொண்டிருக்கிறது

அந்த வகையில், வாழையடி வாழையாக ஆசிரியர் இல்லத் திருமணங்கள் எல்லாம் மேலும் மேலும் புரட்சி மெருகேறி நடந்துகொண்டிருக்கின்றன.

அவருடைய மூத்த மகன் அசோகராஜ் அவர் களுடைய திருமணம் 1984 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைக்கும் அழைப்பு இல்லை. திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, அந்தத் திருமணம் நடைபெறவிருக்கிறது என்றே பலருக்குத் தெரியாது. திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்ட முடிவிற்குப் பின், அய்யாவினுடைய நினைவிடத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட திருமணம் அசோக்ராஜ் - சுபிதா திருமணம்.

அதிலென்ன சிறப்பு என்று நீங்கள் கருதலாம். ஒரு நினைவிடத்தில் திருமணம் நடத்துவதற்கு, மகத்தான ஒரு புரட்சி எண்ணம், தந்தை பெரியாருடைய சிந் தனை எண்ணம் வந்திருக்கவேண்டும். அதைத் தொடக்கி வைத்தது அசோக்ராஜ் - சுபிதா திருமணம். இப்பொழுதோ தொடர்ந்து என்னாயிற்று என்றால், நம்முடைய சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பாக நடைபெறுகின்ற திருமணம் எல்லாம், நாங்கள் அய்யாவின் நினைவிடத்தில் மணவிழாவினை நடத் திக் கொள்கிறோம் என்று சொல்கின்ற அளவிற்கு வந்தி ருக்கிறது என்று சொன்னால், எந்த அளவிற்குத் தந்தை பெரியாரின் சிந்தனையும், துணிவும் வளர்ந்திருக்கின்றன என்பதை எண்ணி மகிழ்கிறோம்.

அமெரிக்காவில் நடைபெற்ற

முதல் சுயமரியாதைத் திருமணம்

அடுத்து மணமகனுடைய பெற்றோர் வீ.அன்புராஜ் - சுதா திருமணம். 1985 ஆம் ஆண்டில், பதிவுத் திருமணம். அதற்குப் பின், நம்முடைய அருட்செல்வி - பாலு ஆகியோரின் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றது (1990). அது அமெரிக்காவில் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம் (பலத்த கைதட்டல்). மணமகன் பாலு என்ற பாலகுரு மலேசியாவைச் சேர்ந்தவர்.

அவர்களைத் தொடர்ந்து, நமது கவிதா - மாறன் திருமணம். அந்தத் திருமணம், சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவராக இருந்த பெரியார் பெருந்தொண்டர் நாகரெத்தினம் அவருடைய மகன் மாறனுக்கும், நம் முடைய ஆசிரியருடைய மகள் கவிதாவிற்கும் திருமணம் நடைபெற்றது 1995 ஆம் ஆண்டில் - தஞ்சை வல்லத்தில்.

அதற்குப்பின் கவின்- ரோகித் தரேஜா திருமணம். இது புரட்சிகரமான திருமணமாகும். மணமகனுடைய தந்தை பஞ்சாப்காரர்; தாயார் ஆந்திராவைச் சேர்ந்தவர். அந்தக் காலத்திலேயே அவர்கள் புரட்சி செய்திருக்கிறார்கள். கவின்- ரோகித் தரேஜா திருமணம் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் பதிவாளர் முன்னிலையில் நடைபெற்றது (2015, ஜூன்) மிகவும் குறிப்பிடத்தகுந்தது என்னவென்றால், அந்தத் திருமணத்திற்கு மணமகள் பெற்றோர்களும் செல்லவில்லை; பாட்டனார், பாட்டியும் செல்லவில்லை. இங்கிருந்தே வாழ்த்தினார்கள்.

நினைத்துப் பாருங்கள், இந்தக் குடும்பத்தில் திரு மணங்கள் எப்படியெல்லாம் நடைபெற்று இருக்கின்றன என்பதை. இப்பொழுது இன்னொரு மணவிழா தற்போது நடைபெற்று வருகிறது.

அதற்குப் பின் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவரான ஆசிரியருடைய இணையரின் தங்கை சூர்யா - சா.கு.சம்பந்தம் அவர்களின் மகன்  ராஜராஜன் அவர் களுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம்தான். மணமகள் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்பொழுது சிங்கப்பூரில் வாழ்கிறார்கள்.

இப்படி இந்தக் குடும்பத்தில், அத்தனைத் திரு மணங்களும் தந்தை பெரியார் கொள்கை நெறிப்படி, செழிப்புற, மேலும் மேலும் மெருகேற்றத்துடன் நடை பெற்றுக் கொண்டிருப்பதை வரலாறு பேசும் - வாழ்த்தும்!

மற்றவர்களுக்கும் இப்படி நடத்தவேண்டும் என்கிற உந்துதலைக் கொடுக்கவேண்டும்!

இந்தத் திருமணத்தை நடத்தவேண்டும் என்று ஆசிரியர் அவர்கள் சொன்னது என்னவென்றால், நாம் எந்த அளவிற்கு எளிமையாக நடத்திக் காட்டுகின்றோமோ, அதுதான் நம்முடைய தோழர்களைச் சென்றடையும். மற்றவர்களுக்கும் இப்படி நடத்தவேண்டும் என்கிற உந்துதலைக் கொடுக்கவேண்டும்.

எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்கூட நாம் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. கொடுக்கக்கூடாது என்பதற்காக அல்ல - இந்த மணவிழா எந்த அளவிற்கு எளிமையாக நடத்தப்பட முடியுமோ, அந்த அளவிற்கு எளிமையாக நடத்தப்படவேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில்தான் - இந்தத் திருமண நிகழ்ச்சி.

ஜாதி மறுப்புத் திருமணம் -  மத மறுப்புத் திருமணம் - மாநிலம் கடந்த திருமணம் - நாடு தாண்டிய திருமணம் - காதல் திருமணம் - இன்னும் என்னென்ன சிறப்புகள் உண்டோ அத்தனை சிறப்புகளும் அடங்கிய ஒரு இயக்க குடும்பம் - உலகம் ஒரு குடும்பம் என்பதை செயலில் காட்டும் குடும்பம் இது - தந்தை பெரியார் வாழ்வியல் தத்துவத்தின் அசல்தான் இந்தக் குடும்பம்.

நமக்குள் எப்படிப்பட்ட போட்டி நடைபெறவேண்டும் என்றால், நம்முடைய தலைவர் அவர்கள் வழிகாட்டியது போல, எந்த அளவிற்கு எளிமையாக நடத்த வேண்டுமோ அந்த அளவிற்கு நடத்தவேண்டும் என்கிற போட்டி எண்ணத்தை உருவாக்குவதுதான் இந்தத் திருமண ஏற்பாட்டின் விழுமிய நோக்கமாகும்.

1970 ஆம் ஆண்டு தந்தை பெரியார் சொன்னது

தந்தை பெரியார் அவர்கள், 1970 ஆம் ஆண்டில் ஒன்றை சொல்கிறார்

‘‘வீட்டில் உள்ளவர்களை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் நடத்தும் பழக்கம் விரைவில் வரும். முன்கூட்டி அழைப்பு இருக்காது. பின்னால் அறிவிப்பு மட்டும் இருக்கும்.’’ (‘விடுதலை’, 20.10.1970).

அய்யாவின் இந்தக் கருத்து அகிலத்திற்கே ஒளி யூட்டக் கூடியது.

இனி நடக்கின்ற திருமணங்கள் எவ்வளவுக்கெவ்வளவு எளிமையாக நடக்கிறதோ, அதுதான் புரட்சி!

ஆசிரியர் அவர்கள் நினைத்திருந்தால், இந்தத் திரு மணத்தை பெரிய அளவில் நடத்தியிருக்கலாம். ஆனால், தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்ற நாம், முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற அடிப் படையில்தான், இந்த எளிமையான முறையில் திருமணம் நடைபெறுகின்றது என்பதை எடுத்துச்சொல்லி,

இந்த அரிய வாய்ப்பை இயக்கத்தின் சார்பாக வர வேற்பை அளிக்கக்கூடிய பெரும் பேற்றை எனக்கு அளித்த ஆசிரியரின் குடும்பத்தாருக்கும் நன்றி கூறி, மீண்டும் அனைவரையும் வருக! வருக! என வரவேற்கின்றேன்.

இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.

குவைத் செல்லப்பெருமாள், முனைவர் மறைமலை இலக்குவனார், முருகன் அய்.ஏ.எஸ்., (ஓய்வு) பலரும் பிறகு ஆசிரியரிடம் வாழ்த்துக் கூறினர்.

தமிழர் தலைவரும் வரவேற்றார்

எங்களோடு இணையக்கூடிய புதிய வரவுகளான நல்ல குடும்பத்தவர்களே!

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய கழக இயக்கக் குடும்பத்தின் சார்பில் வரவேற்புரையில், ஒரு பெரிய வரலாற்றையே உள்ளடக்கி சொன்ன கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

மன்றல் சூடிடும் மணமக்களே, மணமக்களது பெற்றோர்களே, எங்களது அன்பான அழைப்பினை ஏற்று, இங்கு எங்களையெல்லாம் சிறப்பிக்கவேண்டும் என்பதற்காக வந்திருக்கின்ற சான்றோர் பெருமக்களே, இயக்கக் குடும்பத்தவர்களே, குருதிக் குடும்பத்தவர்களே, புதிதாக எங்களோடு இணையக்கூடிய புதிய வரவுகளான மணமகளின் பெற்றோரான நல்ல குடும்பத்தவர்களே,

ஒருமுறைதான் வரவேற்கவேண்டும் என்ப தல்ல. நம்முடைய பண்பாடு, எத்தனை முறை வேண்டு மானாலும் வருக! வருக! வருக!! என்று வரவேற்றே பழக்கப்பட்டவர்கள் நாம். ஆகவேதான், மூன்றாவது முறையாக நான் உங்கள் அனைவரையும் வருக! வருக!! வருக!!! என்று உளப்பூர்வமாக வரவேற்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

It is our proud privilege to welcome all our present elders who grace this occasion and thereby they bless the couple. It is our proud privilege and honor. We welcome all of you sir.

இந்த நேரத்தில், மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்லவேண்டும்.

This is a very pleasant surprise this function. It was not in the agenda, I just inspected this agenda, so that Bride Groom, often beard groom – bride groom as well as beard groom. Nowadays all the youngsters are very happy, very fond of having a beard, the light beard or strong beard whatever. So, my grandson, happen to be not only a bride groom but also beard groom come. So, happily we welcome them also. So, instead of  telling more about them, it is better we could request some of the closest friends tell us what is the impression about the bride and bride groom. So I chosen two persons, which is very very extraordinary and more or less interpolation for this programme also. So, now I request Mr. Joshi. who happened to be closest friend to talk about few minutes about the couple. As well as next  miss. Rathna. Both of them will come and address for few minutes and explain about their relationship, about the qualities of the bride and bridegroom.

மணமக்களின் தோழி ரத்னா மனம் மணக்க வாழ்த்து!

அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் ரத்னா. நான் கபிலன் மகாவின் நெருங்கிய தோழி. முதலில் என் அன்பிற்குரிய கபிலன் மகாவிற்கு திருமண வாழ்த்துகள்.

இங்கே மணவிழா காணும் மணமக்கள் எனது மிக நெருங்கிய நண்பர்கள். கபிலன் எனது பால்ய சிநேகிதன்.

என் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் எதையும், எப்பொழுதும் சமாளிக்கலாம் என்று கூறி, என்னை ஊக்குவிக்கும் நண்பன். இந்தப் பண்புதான் அவனை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காண்பிக்கும்.

எல்லோரிடமும் அன்பாகவும், மரியாதையாகவும், பாசமாகவும் இருப்பார். மணமகள் மகாலெட்சுமி அவர்கள்,எனக்கு வெகு சில நாள்களிலேயே மிகவும் நெருங்கிய தோழியாகி விட்டார்.

எதையும் நம்மால் சாதிக்க முடியும்; எல்லாம் நன் மைக்கே என்று எப்பொழுதும் கூறும் ஒரு நல்ல உள்ளம்.

இவ்வளவு நல்ல உள்ளங்கள் கொண்ட இரு நண்பர்கள் வாழ்வில் ஒன்றாக இணையும்பொழுது, அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் எனக்கு அய்யமில்லை.

மீண்டும் உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

- இவ்வாறு மணமகன் கபிலன் அவர்களின் தோழி ரத்னா வாழ்த்துரை வழங்கினார்.

சிங்கப்பூரிலிருந்து....

அன்புள்ள அய்யா, அம்மா அவர்களுக்கு

வணக்கம்! மகிழ்ச்சி!

தங்களின் அன்பு பேரன் அ.கபிலன்-கோ.மகா லட்சுமி  வாழ்க்கை இணை ஏற்பு விழா இன்று பெரியார் திடலில் தங்களின் தலைமையில் சிறப்பாக எளிமையாக நடைபெற்றதை படத்துடன் விடுதலையில் பார்த்து மகிழ்ந்தோம்! அத்துடன் தங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தியையும் படித்து மகிழ்ந்தோம்.  நன்றி. உலகம் முழுவதும் பெரியாரின் கொள்கையை பரப்பும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேரனின் வாழ்க்கை இணை ஏற்பு விழா பெரியாரின் கொள்கையின் வழி சிக்க னத்தை போற்றும் விழாவாக நடைபெற்றது மிகவும் சிறப்பு. எங்களைப் போன்ற கொள்கை உறவு களுக்கு குடும்பவிழாவினை எப்படி எளிமை யாக நடத்தவேண்டும் என்பதை ஆசிரியர் அய்யா அவர்கள் தன்னுடைய பேரனின் இணை ஏற்பு விழாவை பெரியாரின் கொள்கைபடி நடத்தி காட்டியது மிகவும் சிறப்பு (தன்னுடைய திரு மணம் முதல்.. தொடர்ந்து தன்னுடைய மகன், மகள், பேரப்பிள்ளைகள் என்று அனைவரின் திருமணத்தையும் எளிமையாக சிக்கனமாக நடத்தி வருவது மிக மிக சிறப்பு) இது தங்களை தலைவராக ஏற்று செயல்படும் எங்களை போன்ற பெரியார் தொண்டர்களை  மேலும் பெருமை கொள்ள செய்கிறது.

இம்மகிழ்வான நிகழ்வினை இணைந்து ஏற்ற இருமனங்களும்! இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்ந்து வாழ்வியலில் வெல்லட்டும்.

வாழ்க மணமக்கள்! வாழ்க பெரியாரியல்!

அன்புடன்

கதிராமங்கலம் ந.கலியபெருமாள்-கஸ்தூரிபாய்

க.சித்ரா-பார்த்திபன், ஆதித்யா & கபிலன். க.பூபாலன்-பர்வீன்பானு, பூ.ஆதவன்.

நாள்: 17.06.2018                   இடம்: சிங்கப்பூர்.

கபிலனின் தோழன் ஜோஷியின் வாழ்த்து!

 

அனைவருக்கும் வணக்கம். என்னுடைய தமிழ் உச் சரிப்பு சரியில்லாத காரணத்தால் நான் ஆங்கிலத்தில் பேசு கிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள்/ தப்பாக இருந்தால்.

Ayya He asked me two weeks back whether I want to talk about kabi, I readily agree. Partly because I wanted to talk about this markable young man, who has have the good wish made in my life.
Kabi I met ten years ago in our college. college put new to me. I didn’t have much pain. I din’t have any agenda  what to talk. He is very compassionate. Kabi one of the those were individual know who always puts other people in front of him. and then he think we should be more. He inspires us to be more sympathically can more human to others. to my knowledge he is profoundly influence last people’s life, that most important thing is not taking credit of him.

கபிலனுடைய ஒரு நல்ல பண்பாடு அடுத்தவர்களின் தனித்துவத்துக்கு ரொம்ப மதிப்பு கொடுப்பார். மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அனைத்துக்கும் உடனுக் குடன் பதில் வைத்திருப்பார். நாங்கள் எல்லோருமே அவருடன் இருப்பதையே விரும்புவோம்.

கபிலன் இப்படி இருப்பதற்குக் காரணம் அவர் வாழ்வில் இரண்டு பெண்கள்தான். முதலாமவர் மோகனா பாட்டி. இரண்டாமவர் சுதா அம்மா. இப்போது நீங்கள் பார்க்கின்ற கபிலன் என்பவர் ஆள் அவர்கள் இரண்டு பேரால்தான் உருவானவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் பார்த்துக் கொண்டதிலிருந்து இன்று வரைக்கும் எப்போது என்ன செய்ய வேண்டும், எப்போது என்ன சாப்பிட வேண்டும்,  வேலைவாய்ப்பில் என்ன செய்ய வேண்டும் என்பது மாதிரி சின்ன விஷயம் கூட கபிலனுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பிள்ளைகளுக்கும் பாட்டி, அம்மா அப்பா, அய்யா அவர்கள்தான்.

பாட்டி எப்பவும் கேட்பார்கள் இரண்டு கேள்வி. கபிலன் என்ன செய்யப் போகிறார்? கல்யாணம் எப்போது பண்ணப்போகிறார்? என்று கேட்பார்கள். அந்த இரண்டு கேள்விகளுக்கும் இப்போது விடை கிடைத்துவிட்டது.  இப்போது மூன்றாவது பெண் கபிலனின் வாழ்க்கையில் வந்துள்ளார். மகாலட்சுமி கபிலனைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். கபிலன் அமைதியானவர், புதிரான வர். உங்களின் அற்புதமான வாழ்க்கையில் உங்களுக்குள் புதிரை நீங்கள் விடுவித்துக் கொள்ள வேண்டும். அவர் களுக்குள் ஏற்படுகின்ற நட்புணர்வு பணத்தால் பெற்றிட முடியாது. உணரத்தான் முடியும் என்று வாழ்த்தினார்.

ஒரு கடிதம்

17.6.2018 அன்று காலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் இல்ல மணவிழா நடைபெற்றது.

அது மணவிழா போன்று அல்லாமல் கழகப் பொதுக்கூட்டம் போல மிக எளிமையாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஒரு அரசியல் கட்சியில் சிறிய பொறுப்பில் உள்ளவர்களின் வீட்டு மணவிழா என்றாலே ஒரு வாரத்திற்கு முன்பே நாளிதழ்களிலும், வீதிகளிலும் விளம்பரப்படுத்தப்பட்டு அமர்க்களப்படுத்தப்பட்டு நடக்கும் காலம் இது.

ஆனால், திராவிடர் கழகத்தின் தலைவராக உள்ள தமிழகம் மற்றும் இந்தியாவில் மட்டுமல்ல பல வெளிநாடுகளிலும் அறியப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இல்லத் திருமணம் அழைப்பிதழ் இன்றி, ஆடம்பரமின்றி எளிமையாக நடைபெற்றதைக் கண்டு நான் வியந்தேன்.

பொதுவாக எல்லோரும் சொல்வார்கள், ‘‘அவர் கள் வீட்டில் சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் செய்துதான் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்'' என்று வாய்க்கு வந்தவாறு போகிற போக்கில் சொல்லி விட்டுப் போவார்கள்.

17.6.2018 அன்று காலை கண்ட அந்தக் காட்சி அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போன்று இருந்தது.

மணமேடையில் மணமக்கள் மற்றும் மணமக் களின் பெற்றோர் உள்பட   மணவிழாவினை நடத்தி வைத்த தமிழர் தலைவரும், கழக துணைத் தலைவர் மட்டுமே!

மோதிரங்கள் இரண்டு, மலர்மாலை இரண்டு என்று மிக எளிமையாக அந்த மணவிழா நடை பெற்றது.

வாழ்க்கை இணையேற்பு விழா உறுதிமொழியை தமிழர் தலைவர் கூற, அதனை அப்படியே மண மகளும், மணமகனும் திரும்பக் கூறி, சிறப்பாக அந்த மணவிழா நடந்தேறியது.

ஒரு கழகத்தின் தலைவருடைய பேரன் மணவிழா போன்றோ, ஒரு கழகத்தின் பொதுச்செயலாளரின் மகனுடைய மணவிழா போன்றோ, அந்த மண விழாவைப் பார்த்தால் தெரியவில்லை. ஒரு எளிய பெரியார் தொண்டரின் இல்ல மணவிழா எப்படி இருக்குமோ அதுபோன்ற இருந்தது.

ஆடம்பரமின்றி, அமைதியாக நடைபெற்ற ஒரு அமைதிப் புரட்சி விழா போன்றே எனக்குத் தோன்றியது!

நன்றி!

ச. பாஸ்கர், சென்னை-18

இனமுரசு சத்யராஜ் பாராட்டு

கபிலன்-மகாலட்சுமி திருமண நிகழ்வு பற்றி 'விடுதலை'யில் திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை யினைப் படித்த இனமுரசு சத்யராஜ் அவர்கள் தொலைப்பேசி மூலம் கழகத் தலைவரிடம் தமது பாராட்டைத் தெரிவித்தார். “தலைவர்கள் என்பவர்கள் இப்படித்தான் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், எங்க வீட்டுத் திருமணத்தையும் எளிமையாக நடத்த வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன் - முடியவில்லை. ஆனால் அய்யாவின் கருத்தை நிறைவேற்றிக் காட்டிவிட்டீர்கள். மணமக்களுக்கு எங்கள் வாழ்த்து!” என்று கூறினார் இனமுரசு சத்யராஜ்.

ஆசிரியர் குடும்பத்தின் சார்பில் நன்கொடை

சிறுகனூர் பெரியார் உலகிற்கு ரூபாய் ஒரு லட்சம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.20 ஆயிரம் நன்கொடையை கபிலன் - மகாலட்சுமி திருமண மகிழ்வாக ஆசிரியர் குடும்பத்தினர் வழங்கினர்.

தாம்பூலம் அல்ல நூல்!

பொதுவாக திருமணத்திற்கு வருகிறவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பார்கள். கபிலன் - மகாலட்சுமி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ‘‘பெரியார் அறிவுரை'' நூல் அளிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner