எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழகத் தோழர்களின் உற்சாக வெள்ளம்!

குடந்தை, ஜூன் 21- குடந்தையில் ஜூலை 8ஆம் தேதி நடைபெற வுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட் டிற்கு சுவரெழுத்து பணிகள், கடைகள் தோறும் வசூல், முக்கிய பிரமுகர்களிடம் நன் கொடை வாங்குதல் உள்ளிட்ட பணிகளை கழகத் தோழர்கள் உற்சாகமாக செய்து வருகின் றனர்.

பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்! என்ற தலைப்பில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு வெற்றிகரமாக நடத் தும் முயற்சியில் தமிழகமெங் கும் கழகத் தோழர்கள் வசூல் பணியை செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் ஓவியர் புகழேந்தியின் கைவண்ணத்தில் தஞ்சை, குடந்தை மாநகரம், பாபநாசம், வலங்கைமான், சோழபுரம் என அனைத்துப் பகுதிகளிலும், சுவரெழுத்துக ளும், கொள்கை முழக்கங்களும் பார்ப்போர் வியக்கும் வண் ணம் மின்னுகின்றன. பணிகளை மாணவர் கழக மாநில அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டி யன், மாநில துணைச் செயலா ளர் ச.அஜிதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் திராவிட கார்த்திக், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நாக.செந்தமிழன், செயலாளர் அர விந்தன், தஞ்சை மாவட்ட மாணவர் கழக துணைச் செய லாளர் ச.சற்குணன், உரத்தநாடு இரா.அரவிந்த், தமிழ்செல்வன், அருள்செல்வன், பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் க.வீரமணி, பெரு நகரச் செயலாளர் ந.காமராசு, இளைஞரணி தலைவர் பா. மனோகரன், சாக்கோட்டை விஜி, ஒன்றிய தலைவர் த.ஜில்ராஜ், செயலாளர் கோவி.மகாலிங்கம், மருதம் சக்திவேல் ஆகியோர் குடந்தை நகரங் களில் வீதிவீதியாகச் சென்று நன்கொடை திரட்டி வருகின்றனர்.

மாவட்டத் தலைவர் கு. கவுதமன், மாவட்டச் செய லாளர் அ.துரைராசு, துணைச் செயலாளர் வழக்குரைஞர் கு. நிம்மதி, குடந்தை பெருநகரத் தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேசு, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.குருசாமி, மாவட்ட இளைஞரணித் தலை வர் க.சிவக்குமார், மேனாள் மாவட்டத் தலைவர் வை.இளங்கோவன் ஆகியோர் வணிக பிரமுகர்களையும், தொழிலதி பர்களையும் சந்தித்து நன்கொடை திரட்டி வருகின்றனர்.

குடந்தை மாவட்டக் கழகம் சார்பில் குடந்தை, திருவிடை மருதூர், திருப்பனந்தாள், வலங் கைமான், பாபநாசம் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் தங் கள் பகுதிகளில் நன்கொடை திரட்டும் பணியில், மாணவர் களை பங்கேற்க செய்யும் முயற் சிகளில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner