எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆத்தூர், ஜூன் 23 ஆத்தூரில் கடந்த மே 19, 20 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான பெரியாரியல் பயிற்சி பட்டறை வெகு சிறப்பாக நடைபெற்று இயக்க வரலாற்றில் முத்திரை பதித்தது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர்  பெ.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் பயிற்சிக்கு  உழைத்த தோழர்களைப் பாராட்டி களப்பணியாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியரணி பயிற்சி பட்டறைக்கு  பெரியார் பெருந்தொண்டர் பெ.சோமசுந்தரம் அவர்கள் ரூ.2500 மகிழ்வுடன் வழங்கினார். மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அழகிரிசாமி சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பகுத்தறிவு ஆசிரியரணிக்கும், பகுத்தறிவாளர் கழகத்திற்கும், அதிகப்படியான  உறுப்பினர் சேர்ப்பது என்றும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்  வா.தமிழ் பிரபாகரன்,  மாவட்ட தலைவர் த.வானவில், மாவட்ட செயலாளர் நீ.சேகர், பொதுக்குழு உறுப்பினர் விடுதலை சந்திரன், கோபி இமயவரம்பன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ், மண்டல இளைஞரணி தலைவர் செல்வம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் முருகானந்தம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அறிவுச்செல்வம், பகுத்தறிவு ஆசிரியரணி தோழர்கள் பெரியசாமி, மாயக்கண்ணன், வினோத்குமார், பட்டுத்துறை ராஜா, ஆனந்த திராவிடன், வழக்குரைஞர் சத்யா, பெரியசாமி  இளைஞரனி தோழர்கள் குமார், கார்முகில், லட்சுமணன், அகல்யன், பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் அழகிரிசாமி  ஆலோசனைபடி பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்களாக மாவட்ட தலைவர் மாயக்கண்ணன், மாவட்ட செயலாளர் வினோத்குமார், மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். நன்றியுரை ஆசிரியர் வினோத்குமார் கூற நிகழ்வு சிறப்புடன் முடிவுற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner