எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் சிலை திறப்பு- இளைஞர் எழுச்சி மாநாட்டில்

1000 உண்மை' சந்தாக்கள் வழங்க முடிவு

தருமபுரி மண்டல கலந்துரையாடலில் தீர்மானம்

மத்தூர், ஜூன் 27  மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் பள்ளி பெரியார் அரங்கத்தில் 23.6.2018 அன்று தருமபுரி மண்டலத் தலைவர் பெ.மதிமணியன் தலைமையில்  மண்டல கழக  கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் அகிலா எழிலரசன், தருமபுரி மாவட்டத் தலைவர் இ.மாதன், கிருட்டினகிரி மாவட்ட தலைவர் மு.துக்காராம், மத்தூர் கலைமகள் கலாலயா தாளாளர் சிந்தை மு.இராசேந்திரன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ, கிருட்டினகிரி மாவட்ட செயலாளர் கோ.திராவிடமணி, தருமபுரி மாவட்ட செயலாளர் சி.காமராசு, பகுத்தறிவாளர் கழக அரூர் ஒன்றியத் தலைவர் சா.இராசேந்திரன், தருமபுரி மாவட்ட அமைப்பாளர் பெ.கோவிந்தராசு, திருப்பத்தூர்    மாவட்ட இணைச் செயலாளர் அரங்க.இரவி, திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன், கிருட்டினகிரி மாவட்ட இணை செயலாளர் சு.வனவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்துரையாடலில் ஜூலை 8 குடந்தை மாணவர் கழக பவள விழா மாநாடு, ஜூலை 28 மத்தூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு, தருமபுரி மண்டல இளைஞரணி மாநாடு தமிழர் தலைவர் வருகைகுறித்து  ஆலோசிக்கப்பட்டது. மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன்  தொடக்கவுரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்    பேசு கையில், தந்தை பெரியார் சிலை திறப்பு, மண்டல இளை ஞரணி மாநாடு குறித்து விளக்கினார்  மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர்  த.யாழ் திலீபன் தீர்மானங்களை படித்தார்கள்.

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, மகளிரணி- மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன் கருத்துரை வழங்கினர்.

தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர்  வ.ஆறு முகம் கலந்துரையாடல் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

தீர்மானங்கள்

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மத்தூர் கலைமகள் கலாலயா  பள்ளியில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலையை அமைத்து அதன் திறப்பு விழாவிற்கு வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து பெருமைப்படுத்தக்கூடிய பள்ளியின் தாளாளர்  முனைவர் சிந்தை மு.இராசேந்திரன் அவர்களுக்கு இக் கூட்டம்  பாராட்டுதல்களையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறது. தந்தை பெரியார் சிலை திறப்புக்கு குடும்பம்  குடும்பாக பங்கேற்று சிறப்பு செய்வதென முடிவு செய்யப்பட்டது

ஜூலை 28 அன்று திருப்பத்தூர் கழக மாவட்டம் மத்தூரில் திக்கெட்டும் பாய்வோம்; திராவிடத்தை காப்போம் என்னும் முழக்கத்துடன் தருமபுரி மண்டல இளைஞர் எழுச்சி மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறது. மேலும் இளைஞர் எழுச்சி மாநாட்டை மிகவும் சிறப்புடன் நடத்துவது, மாநாட்டை விளக்கி சுவரெழுத்து மற்றும் பதாகைகள் அமைத்து விளம்பரங்கள் செய்வது, நிதி வசூலிப்பது உள்பட அனைத்து பணிகளையும் மிகச்சிறப்பாக செய்வதுடன், அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவது என முடிவு செய்யப்படுகிறது

ஜூலை 28 மத்தூரில் நடைபெறும் இளைஞர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தருமபுரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 1000 உண்மை' சந்தாக்களை  வழங்குவது என முடிசெய்யப்படுகிறது.

ஜூலை 28 அன்று மத்தூரில் கலைமகள் கலாலயா பள்ளியில் நடைபெறும் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிற்கும், மாலையில் இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கும் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தருமபுரி மண்டல கழகத்தின் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

ஜூலை 8 அன்று குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டுக்கு தருமபுரி மண்டலத்திலிருந்து தனி வாகனத்தில் சென்று பெருவாரியாக மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது

தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம் நன்றி கூறினார்.

புதிய பொறுப்பாளர்கள்

தருமபுரி மாவட்ட இளைஞரணித்தலைவராக காமலாபுரம் இரா.கிருட்டினன், மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், ஒன்றிய செயலாளர் வி.திருமாறன், ஒன்றிய அமைப்பாளர் பொடார் பு.கணேசன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் சா.அரசுகுமார், ஒன்றிய இளை ஞரணித் துணைத்தலைவர் கோ.குமரேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சே.இராமஜெயம், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் சு.பிரபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நா.சிலம்பரசன் ஜூலை 28 ஆம் தேதி மத்தூரில் நடைபெறும் மாநாடு குறித்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் 1.7.2018 அன்று காலை 10 மணிக்கு கிருட்டினகிரியிலும், 3.7.2018 அன்று மாலை 4 மணிக்கு திருப்பத்தூரிலும், 5.7.2018 அன்று மாலை 4 மணிக்கு தருமபுரியிலும் நடத்துதென முடிவு செய்யப்பட்டது

மண்டல இளைஞரணி மாநாட்டிற்கு நிதி வழங்கியவர்கள்

மாநாட்டு நன்கொடையாக கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ரூ.5000 வழங்கினார்

மத்தூர் மு.இந்திரா காந்தி  ரூ.7000, திருப்பத்தூர் வி.ஜி.இளங்கோ ரூ.7000, மத்தூர் இரா.பழனி ரூ 1000, ஓசூர் சு.வனவேந்தன் ரூ.1000, தருமபுரி இர.கிருட்டினமூர்த்தி ரூ.2000, பாண்டவர்குட்டை இரா.பழனி ரூ.2000, திருப் பத்தூர் எம்.கே.எஸ்.இளங்கோவன் ரூ.2000, ஓசூர் அ.செ.செல்வம் ரூ.2000, பாண்டவர்குட்டை அ.சவுந்தரி ரூ.500, கிருட்டினகிரி கதிரவன் ரூ.500, மத்தூர் திருமாறன் ரூ.1000, கிருட்டினகிரி கா.மாணிக்கம் ரூ.1000, ஓசூர் பால கிருட்டிணன் ரூ.1000, ஓசூர் மணி ரூ.1000, தருமபுரி இ.மாதன் ரூ.5000, திருப்பத்தூர் தே.பழனிசாமி ரூ.1000,  தகடூர் தமிழ்ச்செல்வி ரூ.2000, தருமபுரி ஊமை ஜெயராமன் ரூ.5000, ஓசூர் மு.துக்காராம் ரூ.5000, மத்தூர் அரங்க.இரவி ரூ.2000, சூளகரை இரு.கிருட்டிணன் ரூ.5000, தருமபுரி கதிர் செந்தில் ரூ.2000, கிருட்டினகிரி ஈ.லூயிஸ்ராஜ் ரூ.2000,  அரூர் சா.இராஜேந்திரன் ரூ.20,000, சே.ஜானகிராமன் 2,000 ஆக மொத்தம்  நன்கொடை ரூ.80,000/- கலந்துரையாடலில் வழங்கினார்கள்.

கலந்து கொண்டவர்கள்

இளைஞரணி  மாநில துணைத்தலைவர் அ.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் விடுதலை அ.தமிழ்ச்செல்வம், தா.சுப்பிரமணியன், க.வசந்தி, கோ.திருப்பதி, மாவட்ட ப.க. அமைப்பாளர் இரா.பழனி,   பகுத்தறிவு ஆசிரியரணித் தலைவர் செ.சிவராசு, மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் இரா. கார்த்திகேயன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சா.சத்தீஷ், ஒன்றிய செயலாளர் சிவ.மனோகர்  காவேரிப்பட்டிணம் ஒன்றியம் தே.பழனிசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் திருப்பத்தூர் க.வெங்கடேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கே.இராஜேந்திரன், மு.சிலம்பரசன், க.மணியம்மை, டி.பால கிருட்டிணன், ஓசூர் மணி, ஓசூர் அ.செ.செல்வம், மா.இரேஷ்,  செ.திருநாவுக்கரசு, புளியாண்டப்பட்டி  பி.அருண்குமார், எஸ்.பாலசுப்பிரமணியன், பெ.கோவிந்தராசு, மா.செல்ல துரை, மனோ கதிரவன், சி.அஜித்குமார், மனோ நிலவன், மு.வீரமணி, மா.திருநாவுக்கரசு, எஸ்.சுரேஷ்குமார், இரா.கதிரவன், கா.மாணிக்கம், மு.சாது, கார்த்திக், வி.திருமாறன், ப.சுதா, சி.முருகம்மாள், நா.சுப்புலட்சுமி, காளிதாஸ், கோ.குமரேசன், சு.இன்பத்தமிழன், கு.தமிழ்க் குடிமகன், கா.ஞானசேகரன், சி.பகத்சிங், சிலம்பரசன், ஜெ.திருநாவுக்கரசு,இரா.கிருட்டினமூர்த்தி,கதிர்செந்தில், ஈ.லூயிஸ்ராசு மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டிற்காக தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இ.மாதன் ரூ.5000; திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ ரூ.7000, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் துக்காரம் ரூ.5000,  விடுதலை', உண்மை' சந்தாக்களை திருப்பத்தூர் காளிதாஸ் ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர் (23.6.2018).

வரவேற்புக் குழு

வரவேற்பு குழு தலைவர்: வ.ஆறுமுகம் - மண்டல இளைஞரணி செயலாளர்

வரவேற்பு குழு செயலாளர்: சி.எ.சிற்றரசன்-மண்டல மாணவர் கழக செயலாளர்

வரவேற்பு குழு துணைத் தலைவர்கள்

தே.பழனிச்சாமி - திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவர், காமாலாபுரம் இரா.கிருஷ்ணன் -  தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர், இல.ஆறுமுகம் - கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி தலைவர்

வரவேற்பு குழு துணைச் செயலாளர்கள்

மு.வெற்றிகொண்டான் - திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர், தே.சத்தியராஜ்-  தருமபுரி மாவட்ட இளைஞரணி செயலாளர், கே.புகழேந்தி - கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர்

உறுப்பினர்கள்

த.யாழ்திலீபன் - மாநில மாணவர் கழக துணைச் செயலாளர், க.மதியழகன் - திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், பே.சின்னசாமி- தருமபுரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், தி.கதிரவன் -கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், இரா.கிருஷ்ணன் - தருமபுரி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர், பெ.செல்வேந்திரன் - கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர், அகிலன் - கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர், கு.தமிழ்குடிமகன் - மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர், நா.சிலம்பரசன் - ஒன்றிய இளைஞரணி, மு.சிலம்பரசன் - மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர், செ.சிவராஜ்-  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், அ.சாமிநாதன்-  ஒன்றிய இளைஞரணி, கு.வினோத்குமார் -  இளை ஞரணி, மா.இரவிசந்திரன் - ஊத்தங்கரை ஒன்றிய இளைஞரணி தலைவர், சு.பிரபு - இளைஞரணி, கா.குமரேசன் - இளைஞரணி, இரா.கிருட்டினன் - மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர், சிங்கம் (எ) பெரியண்ணன் - இளைஞரணி அமைப்பாளர், ச.அரசுகுமார்-  மத்தூர் ஒன்றிய இளைஞரணி, மா.முனியப்பன் - தருமபுரி மாவட்ட மாணவரணி தலைவர், மா.செல்லதுரை - தருமபுரி மாவட்ட மாணவர் கழக செயலாளர், க.கா.வெற்றி - கிருட்டினகிரி மாவட்ட மாணவர் கழக தலைவர், அஜித்குமார் - கிருட்டினகிரி மாவட்ட மாணவர் கழக செயலாளர், மனோ.கதிரேசன்-  கிருட்டினகிரி மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர், சு.நாத்திகன்-  திருப்பத்தூர் மாவட்ட மாணவர் கழக தலைவர், மு.வீரமணி - திருப்பத்தூர் மாவட்ட மாணவர் கழக செயலாளர், கோ.சங்கர்-  மாணவரணி, க.இ.பரிதி- மாணவரணி

விளம்பர குழு:   மா.திராவிடராசன், அ.சுவாமிநாதன்

ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர்கள்: இரா.ஜெயக்குமார் -  பொதுச் செயலாளர் திராவிடர் கழகம், கே.சி.எழிலரசன் -பெரியார் அறக்கட்டளை உறுப்பினர், ஊமை.ஜெயராமன்-  கழக அமைப்பு செயலாளர், தகடூர் தமிழ்ச்செல்வி-  மாநில மகளிரணி மகளிர்பாறை அமைப்பாளர், த.சீ.இளந்திரையன் - மாநில இளைஞரணி செயலாளர், அண்ணா.சரவணன் - மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர், அ.சுரேஷ் - மாநில இளைஞரணி துணைச் செயலாளர், பெ.மதிமணியன் - மண்டலத் தலைவர், கரு.பாலன் - மண்டல செயலாளர்,

ஏற்பாட்டுக் குழுத் தலைவர்: எழில். அகிலா எழிலரசன் - திருப்பத்தூர் மாவட்ட தலைவர், செயலாளர்: வி.ஜி.இளங்கோ - திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், பொருளாளர்: அரங்க ரவி திருப்பத்தூர் - மாவட்ட துணைச் செயலாளர், துணைத் தலைவர்கள்: இ.மாதன்-  தருமபுரி மாவட்டத் தலைவர், மு.துக்காராம்-  கிருட்டினகிரி மாவட்டத் தலைவர்

துணைச் செயலாளர்கள்: கி.காமராசு - தருமபுரி மாவட்டச் செயலாளர், கோ.திராவிடமணி - கிருட்டினகிரி மாவட்ட செயலாளர்

உறுப்பினர்கள்

மா.சி.பாலன் - திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர், எம்.கே.எஸ். இளங்கோவன்-  மாவட்ட துணைச் செயலாளர், பழ.வெங்கடாசலம்-  ஊற்றங்கரை, தா.திருப்பதி - காவேரிப்பட்டினம், க.கதிர் -  தருமபுரி மாவட்ட துணைத் தலைவர், பெ.கோவிந்தராஜ்-  தருமபுரி மாவட்ட அமைப்பாளர், பா.முனுசாமி - கிருட்டினகிரி மாவட்ட அமைப்பாளர், க.அறிவரசன் - கிருட்டினகிரி மாவட்ட துணைத் தலைவர், சு.வனவேந்தன் - கிருட்டினகிரி மாவட்ட இணைச் செயலாளர், பழ.பிரபு - ஊற்றங்கரை, வி.சிவாஜி - தருமபுரி, கி.முருகேசன் - மத்தூர் ஒன்றியத் தலைவர், ம.கவிதா - திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவர், பீம.தமிழ்பிரபாகரன்  - தருமபுரி மாவட்டத் துணைத் தலைவர், இரா.வேட்ராயன் - பொதுக்குழு உறுப்பினர், விடுதலை அ.தமிழ்செல்வன் - பொதுக்குழு உறுப்பினர், அ.தீர்த்தகிரி -  பொதுக்குழு உறுப்பினர்,  தா.சுப்ரமணியன் - பொதுக்குழு உறுப்பினர், என்.எஸ்.பிரபாவதி - பொதுக்குழு உறுப்பினர், அ.செ.செல்வம் -   -கிருட்டினகிரி மாவட்ட துணைச்செயலாளர், கு. சரவணன்-  மாவட்ட துணைச் செயலாளர், தங்க. அசோகன் - மாவட்ட துணைத் தலைவர், கே.சி.கமலாம்பாள் -பொதுக்குழு உறுப்பினர், கதிர்.செந்தில்குமார் -  தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர், சி.தமிழ்செல்வன்-  திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர், ஈலூயிஸ்ராசு -  கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர், இரா.பழனி -திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர், இர.கிருட்டினமுர்த்தி -  தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர், க.சின்னராசு - மாடர்ன் ரேசனலிஸ்ட் வாசகர் வட்ட தலைவர், மாரி.கருணாநிதி- தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர், தி.அன்பு செழியன்-  கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர், சித.வீரமணி-  திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர், மு.வேடியப்பன் - கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர், கோ.திருப்பதி - கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்,  கே.ஜானகிராமன்-  திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர், வி.திருமாறன் - மாத்தூர் ஒன்றியச் செயலாளர், மா.ரவிச்சந்திரன் ஊத்தங்கரை ஒன்றியத்  தலைவர், சித.அருள் - ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர், இரா.அன்பு - ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர், இராம.சகாதேவன் - ஊத்தங்கரை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர், மு.இந்திராகாந்தி -  மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்,  சி.முனியம்மாள் - மாவட்ட மகளிர் பாசறை தலைவர், மு.காந்தி -  மாவட்ட மகளிர் பாசறை செயலாளர், ம.லதா - மாவட்ட மகளிரணி தலைவர், செ.செல்வி - கிருட்டினகிரி மாவட்ட மகளிரணி தலைவர், கி.சங்கீதா -  தருமபுரி மாவட்ட மகளிரணி தலைவர், த.முருகம்மாள் - தருமபுரி மாவட்ட மகளிரணி செயலாளர், வெ.அழகுமணி - பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர்,  மு.சிசுபாலன் - மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்,  அ.இராதாகிருஷ்ணன் - மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர், இரு.கிருட்டினன் - மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர், திரு.வெங்கடேசன், அண்ணா. அப்பாசாமி, இரா.வேங்கடம், க.வசந்தி - பொதுக்குழு உறுப்பினர், முனி.வெங்கடேசன் - நகரச் செயலாளர், மணிவேல் - மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர், பெரு.முல்லைராசு - மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர், செ.ப.மூர்த்தி - மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர், தீ.சிவாஜி - மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner