எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 29 24.6.2018 அன்று பெங்களூரு பெரியார்நகரில் சுயமரி யாதை சுடரொளிகள் அண்ணாமலை - நாகம்மாள் கல்வி நிறுவனத்தில், வட மண்டலச் செயலாளர் சி.வரதராசன் ஏற்பாட்டில், கருநாடக மாநில திராவிடர் கழக தலைவர் மு.ஜானகிராமன் தலைமையில் கருநாடக மாநில திராவிட மாணவர்கள் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.

மாநில செயலாளர் முல்லைகோ அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், பெரியார் பெருந்தொண்டர்கள் முத்துசெல்வம், மாநில துணைத் தலைவர்கள் வீ.மு. வேலு, புர.கஜபதி, தென் மண்டல தலைவர் வி.இரத்தினம், தங்க இராமசந் திரன், பரம சிவம், தென்னவன், இரா.இராசாராமன், புவனகிரிபாபு, சபரிவேல், கிருட்டிணகிரி மாவட்ட கழக இணைச் செயலாளர் சு.வனவேந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முதலாவதாக மாநில மாணவர் கழக செயலாளர்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர் களிடம் தந்தை பெரியாரை அறிமுகம் செய்தல் போன்று தனது பேச்சை துவக்கி கிடைத்த நேரத்தில் மாணவர் மனதில் தந்தை பெரியாரையும், அவரது உழைப்பையும், அதனால் விளைந்த பயன்களையும் பதியச் செய்யும் விதமாக தமிழ் -  ஆங்கிலம் கலந்து உரையாடினார். அதனை தொடர்ந்து மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், கருநாடக மாநில கழக பொறுப்பாளர்கள் மற்றும் அண்ணாமலை -  நாகம்மாள் அவர்களது குடும்பத்தினர் இயக்கத்திற் கும், இப் பகுதியில் உள்ள பிள்ளை களுக்கு கல்வி யில் ஆற்றிவரும் பெரும் பணி குறித்தும், அதனால் இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் மாணவர்கள் பற்றியும், ஆற்றிவரும் பணிகள் குறித்தும், குடந்தையில் ஜூன் 8இல் நடைபெற உள்ள மாநாட்டிற்கு நீங்கள் எல்லாம் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும், கருத்துகளை பெற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மாநாட்டிற்கு நன்கொடை வழங்கல்

தொடர்ந்து குடந்தையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு முதல் தவணையாக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரனிடம் மாநாட்டு நிதியாக கருநாடக மாநில தலைவர் மு.ஜானகிராமன்

ரூ. 500, முத்துசெல்வன் ரூ. 500, கோ.சண் முகம் ரூ. 500, தஞ்சை இமயவரம்பன் ரூ. 1000, இரத்தினம் ரூ. 500, பெரியார் பிஞ்சு அறி வழகன் ரூ. 500, பேராசிரியர் சுந்தரேசன் ரூ. 500, வீ.மு.வேலு ரூ. 500 நன்கொடை வழங்கினர். இறுதியாக அண்ணாமலை -  நாகம்மாள் கல்வி நிறுவன தாளாளர் வெண்மலர் வரதராசன் தம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பெரியார் -- அம்பேத்கர் கருத்துகளை வாய்ப்பு உள்ள போதெல்லாம் சொல்லித் தருவதுடன் அவர்கள் சமுதாயத்தில் சிறந்த மாணவர் களாக உருவாக்க நினைத்து செயல்படு கிறோம். இந்த மாணவர்கள் ஜாதி தீண் டாமை போன்ற செயல்கள் தெரியாமல் இருப்பது சிறப்பு என்று பேசினார்.

சிறப்பு விருந்தினர் உட்பட பெரியார் பெருந்தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்தின் சிறப்பு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக தோழர்களும், ஆசிரியர்களும், 40 மாணவர்களும் கலந்து கொண்டனர்.  மாநில திராவிடர் கழக பொருளாளர் ஜெய்கணேசு நன்றி தெரிவித்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner