எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, ஜூலை 1 கும்பகோணத்தில் திராவிட மாண வர் கழகத்தின் பவளவிழா மாநில மாநாடு 8.7.2018 அன்று நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதுமிருந்து கருஞ்சட்டைப் பட்டாள மாக மாணவர் கழகத்தினர் பங்கேற்கின்றனர்.

திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநில மாநாட்டில் பகுத்தறிவு இசை, பகுத்தறிவு கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், அணிவகுப்புப் பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் காலை தொடங்கி மாலை வரை நடைபெறுகின்றன.

8.7.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி முடிய கும்பகோணம் செக்காங்கன்னி சாலையில் அமைந்துள்ள காஞ்சி சங்கரா திருமண மண்டபத்தில் அரியலூர் அனிதா நினைவரங்கம், பெரு வளூர் பிரதிபா, திருச்சி சுபசிறீ நினைவு மேடையில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இசைநிகழ்ச்சி

காலை 9 மணிக்கு திராவிடக் கலைச்சுடர் திருத்தணி டாக்டர் த.பன்னீர்செல்வம் குழுவினரின்  பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது. திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் த.யாழ்திலீபன் தொடக்க உரையாற்றுகிறார்.

கருத்தரங்கம்

காலை 10 மணிக்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் திராவிட மாண வர்களின் கல்வி உரிமையும் - கடமையும் எனும் தலைப் பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

முனைவர்அதிரடிக.அன்பழகன்குருகுலக்கல்வி யும், குலக்கல்வியும் என்ற தலைப்பிலும், இரா.பெரியார் செல்வன்  ‘நீட்’டும், சட்டமன்றமும் என்ற தலைப்பிலும், பூவை.புலிகேசி, ‘நீட்’டும் நீதிமன்றமும் என்ற தலைப்பிலும், தகடூர் தமிழ்ச்செல்வி ‘நீட்’டும் மக்கள் மன்றமும் என்ற தலைப்பிலும்  கருத்தரங்கில் உரையாற்றுகிறார்கள்.

வை.இளங்கோவன், த.ஜில்ராஜ், கோவி.மகாலிங்கம், பீ.இரமேசு, ந.காமராசு, மருத்துவர் பி.எஸ்.திருவருள் ஆகி யோர் முன்னிலையில் இராம.அன்பழகன் கொள்கைப் பாடல்கள் பாடி இணைப்புரை வழங்குகிறார்.

முற்பகல் 11 மணிக்கு ‘இனமான ஏடுகளின் நோக்க மும் தாக்கமும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடை பெறுகிறது.

ஆடிட்டர் சு.சண்முகம் அறிமுகவுரையாற்றுகிறார். கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கருத்துரையாற்று கிறார்.

வழக்குரைஞர் கு.நிம்மதி, வ.அழகுவேல், க.குருசாமி, தி.மில்லர், சு.கலியமூர்த்தி, தங்க.பூவானந்தம், நா.சந்திர சேகரன், க.பவானிசங்கர் ஆகியோர் முன்னிலை வகி கின்றனர்.

கவியரங்கம்

முற்பகல் 11.45 மணிக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு தலைமையில் ‘பெரியாரைச் சுவாசிப்போம்’  எனும் தலைப்பில் கவியரங்கம் நடை பெறுகிறது.

கவிஞர்கள் பா.திவ்யபாரதி, ம.ஜ.சந்தீப், இர.க.தமிழருவி ஆகியோர் கவியரங்கில் பங்கேற்கின்றனர்.

வலங்கை வெ.கோவிந்தன், அரு.ரெங்கநாதன், எம்.என்.கணேசன், க.சிவக்குமார், நா.கலியபெருமாள், ந.முருகானந்தம், க.திராவிடன் கார்த்திக், பட்டம் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழர் தலைவர் சிறப்புரை

பகல் 12.15 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு சிறப்புரையாற்றுகிறார்.

பேரணி அணிவகுப்பு

மாலை 4 மணிக்கு திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் கோவை ஆ.பிரபாகரன் தலை மையில், மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் திராவிட மாணவர்களின்  அணிவகுப்புப் பேரணியைத் தொடங்கிவைக்கிறார்.

திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் சென்னை நா.பார்த்திபன், திருவாரூர் நா.பொன்முடி,தஞ்சை அண்ணா.மாதவன், ஈரோடு ப.வெற்றிவேல், கடலூர் ச.வீரமணி, அரியலூர் கா.பெரியார்செல்வன், மதுரைசு.சித்தார்த்தன், தஞ்சை வே.தமிழ்ச்செல்வன், தஞ்சை ந.காவியன், குடந்தை அ.அரவிந்தன், பட்டுக்கோட்டை பி.செல்வேந்திரன், பட்டுக்கோட்டை ப.பரமசிவம், தென்காசி நோ.மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

அணிவகுப்பு பேரணி பாதை

காஞ்சி சங்கரா திருமண மண்டபத்தில் தொடங்கி சி.ஆர்.சி. நியூ ரயில்வே ஸ்டேஷன் சாலை, காமராஜர் சாலை, தலைமை அஞ்சல் நிலைய சாலை, நாகேஸ்வரன் தெற்கு வீதி வழியாக கடலங்குடி சாலையில் அமைந் துள்ள மாநாட்டு அரங்கத்தில் அணிவகுப்பு பேரணி நிறைவடைகிறது.

திராவிட மாணவர் கழக

பவளவிழா மாநில மாநாடு

‘‘பெரியாரை சுவாசிப்போம், பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்'' எனும் தலைப்பில் நடைபெறுகின்ற திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு கும்பகோணம் கடலங்குடி சாலையில் ரோகித் வெமுலா நினைவரங்கம், சேலம் முத்துக்கிருஷ்ணன், திருப்பூர் சரவணன் நினைவு மேடையில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடை பெறுகின்றன.

பகுத்தறிவு கலை நிகழ்ச்சி

மாலை 5.05 மணிக்கு முரசொலி முகிலன் குழுவினரின் ஈரோட்டுப் பூகம்பம் பகுத்தறிவு கலைநிகழ்ச்சி நடை பெறுகின்றது.

மாலை 6.30 மணிக்கு திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ச.அஜிதன் வரவேற்புரையாற்று கிறார்.

காஞ்சிபுரம் அ.அர்ஜூன் மாநாட்டின் தலைவரை முன்மொழிகிறார். சென்னை எஸ்.பிரவீன்குமார் வழி மொழிகிறார். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மதுரை தி.இலக்கியா கழகக் கொடி யேற்றிவைக்கிறார்.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மாநாட்டுக்கு தலைமையேற்று உரையாற்றுகிறார்.

உரைக்களம்

மாலை 7 மணிக்கு திராவிட மாணவர் கழக கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றுகிறார். தே.அ.ஓவியா ‘தமிழனே இது கேளாய்’ எனும் தலைப்பிலும். க.இ.இளம்பரிதி ‘கல்விக்கண்ணைப் பறிக்காதே’ எனும் தலைப்பிலும், இரா.சி.பிரபாகரன் ‘இந்து என்று சொல்லாதே’ எனும் தலைப்பிலும், பா.மணியம்மை ‘மதம் பிடியாதிருக்கட்டும்’ எனும் தலைப்பிலும்,அய்.கங்காதேவி ‘ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே’ எனும் தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.

முன்னிலை

திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி, பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனத் தலைவர் க.சண்முகம், துணைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு, பொதுச்செயலாளர் இரா.செயக்குமார், மாநில அமைப்பாளர்உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர்கள் த.சண்முகம், ஊமை செயராமன், வே.செல்வம், வி.பன்னீர்செல்வம், மாநில வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், மகளிரணி மாநிலச் செயலாளர் அ.கலைச்செல்வி, மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, இளைஞரணி மாநிலச் செயலாளர் த.சீ.இளந்திரையன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி,  தென்மாவட்டப் பிரச்சாரக்குழுத் தலைவர் தே.எடிசன்ராஜா, சட்டத்துறை மாநிலத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், செய லாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன், பெரியார் மருத்துவ அணி தலைவர் மருத்துவர் இரா.கவுதமன், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநிலத் தலைவர் ப.சுப்பிரமணியம், மாநில செயலாளர் நா.இராமகிருட்டினன், திராவிட விவசாய தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் வீ.மோகன், திராவிட தொழிலாளர் கழக மாநிலத் தலைவர் அ.மோகன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், தஞ்சை மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன், செயலாளர் மு.அய்யனார், குடந்தை மாவட்டத் தலைவர் கு.கவுதமன்,  குடந்தை மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், பெரியார் பகுத் தறிவு கலை இலக்கிய அணி மாநிலச் செயலாளர் மஞ்சை வசந்தன்,  மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், பெரியார் வீதிநாடக  கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன், பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் கோபு.பழனிவேல், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநிலச் செயலாளர் சி.இரமேசு, பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர்கள் வா.தமிழ்பிரபாகரன், எஸ்.அருள்செல்வன், பேரா.இரா.கலைச்செல்வன், புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மும்பை மாநில திராவிடர் கழகத் தலைவர் பி.கணேசன், கருநாடக மாநில திரா விடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன், செயலாளர் இரா.முல்லைக்கோ பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வி.மோகன், பகுத்தறிவாளர் கழக  மேனாள் தலைவர் தி.இராஜப்பா, மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக்குமார்,  குடந்தை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லெனின் பாஸ்கர், நாச்சியார்கோயில் நகர திராவிடர் கழகத் தலைவர் சி.முத்துக்குமாரசாமி, பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தீர்மான அரங்கம்

மாலை 7 மணிக்கு கே.சி.எ.அ. சிற்றரசு, தா.தம்பி பிரபாகரன், செ.தி«சு பாபு, சு.மணிபாரதி, அ.சவுந்தர பாண்டியன், பொன்.அருண்குமார், இ.தமிழர் தலைவர், இரா.குமார், ப.சேக்முகமது, மா.செல்லத்துரை, கோ.விக் னேசுவரி, பு.க.கனிமொழி, த.சங்கவி தர்மா, எம்.முனியன் ஆகியோர் மாநாட்டின் வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்மானங்களை வாசித்து முன்மொழிகிறார்கள்.

சுயமரியாதைச் சுடரொளிகள்

படத்திறப்பு

இரவு 8 மணிக்கு திராவிட மாணவர் கழகத்தைத் தொடங்கிய சுயமரியாதைச் சுடரொளிகள் செ.தவ மணிராசன், கவிஞர் கருணானந்தம், குடந்தை செங் குட்டுவன்(பூண்டி இரா.கோபால்சாமி), கோ.இலட்சுமணன் (மக்களவை மேனாள் துணைத் தலைவர்) ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றுகிறார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

இரவு 8.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டின் நிறைவுரையாற்றுகிறார்.

மாநாட்டின் முடிவில் திராவிட மாணவர் கழக குடந்தை மாவட்டத் தலைவர் நாக.செந்தமிழன் நன்றி கூறுகிறார். மாநாட்டு விழாக் குழுவினர், அனைத்து மாவட்டங்களின் திராவிட மாணவர் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் ஒன்றிணைந்து மாநாட்டுக்கான பணி களை ஆற்றிவருகின்றனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிட மாணவர்கழகமாநாட்டுக்கானஅறிவிப்பைவெளி யிட்டநாளிலிருந்து கழகப் பொறுப்பாளர்கள்  மாநிலம்முழுவதும்மாணவர்களிடையே பரப்புரை பயணத்தை மேற்கொண்டு, மாநாடு குறித்து பரப்புரை, வசூல் பணிகளில் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றி வரு கிறார்கள். சுவரெழுத்துப் பிரச்சாரப் பணிகள், தெரு முனைக்கூட்டங்கள், மாநாடு  விளக்கப் பொதுக் கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றன. தமிழகமெங்கும் எந்நாளும் ஓய்வின்றி இயங்கிவருகின்ற ஒரே இயக்கமாக திராவிடர் கழகமும், ஓய்வில்லாத் தலைவராக தமிழர் தலைவர் மட்டுமே உள்ளார் என்பதை பொதுமக்கள் நன்குணர்ந்து, திராவிடர் கழகத்தின் அத்துணை செயல்பாடுகளுக்கும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 8 இல் கும்பகோணத்தில் நடைபெறுகின்ற திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாடு தமிழகம் மட்டுமல்லாமல், நாடுமுழுவதும் மாணவர்களின் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பில் ஒரு மைல்கல் என்பதை சரித்திரமாக்கி வருகிறது.

விழாக் குழுவினர்

சோழபுரம் கலியன், நெய்வேலி க.தியாகராசன், கலைச்செல்வி, செயமணி குமார், எம்.திரிபுரசுந்தரி, இராணி குருசாமி, கு.அறிவொளி, வலங்கை தினேசு, வலங்கை நவீன், அசூர் செல்வம், செ.பாரத், ஓவியர் விஜி, கு.அறிவுவிழி, ராஜேசுவரி நாகராசன், காட்டுக்கருப்பூர் இராமநாதன், ப.மனோகரன், இரா.அழகிய மணவாளன், திலீபன்ராஜ்.

வரவேற்பாளர்கள்-மாவட்டக் கழகங்களின் மாணவர் கழக தலைவர்கள், செயலாளர்கள்:

வடசென்னை மாணவர் கழகத் தலைவர் வ.கலைச்செல்வன், செயலாளர் க.வெண்ணிலா, தென் சென்னை ச.அருண்குமார், ஆர்கவுதம், தாம்பரம் மு.மணிமாறன், ர.எழிலரசி, குமமிடிப்பூண்டி சு.எழில், நீ.ஞானசேகரன், ஆவடி செ.பெ.தொண்டறம், உவிஜய், திருவள்ளூர் மு.வானவராயன், ப.பெரியார் செல்வம், அரக்கோணம் சூ.வீரமணி, லோ.மணியம்மை, காஞ்சிபுரம் அ.அரவிந்தன், இர.கோபிநாத், வேலூர் அ.ஓவியா, ச.செந்தமிழ் இன்மொழி, திருவண்ணாமலை மு.க.ராம்குமார், மு.இராகுல், செய்யாறு எஸ்.தினேசு, பி.கவுதமன், கிருட்டிணகிரி க.கா.வெற்றி, சி.அஜித்குமார், திருப்பத்தூர் சு.நாத்திகன், மு.வீரமணி,  விழுப்புரம் ச.எடிசன், கோ.இலக்கியா, திண்டிவனம் வே.ப.மாரிமுத்து, இரா.விஜய், கடலூர் க.தாயன்பன்,  தா.பெரியார்செல்வன், விருத்தாசலம் த.தமிழ்ச்செல்வம், செ.இராமராசன், சிதம்பரம் க.கனிவண்ணன், எஸ்.உன்னிகிருட்டிணன், ஆத்தூர் து.தமிழ்ச்செல்வம், மெ.சக்திவேல், மேட்டூர் ஆர்.குமார், டி.சத்யா, ஈரோடு பா.செயசூர்யா, பெ.மதி வாணன், கோபி மு.சந்தோஷ், க.திவ்யா, நாமக்கல் சி.சந்தோசுகுமார், ச.கிசோர்குமார், கோவை ம.சக்தி பழனியப்பன் கா.சி.இனியா, மேட்டுப்பாளையம் இரா.அறிவுமணி, இரா.விக்னேஷ், நீலமலை இரா.இராம்குமார், நா.புஷ்பலதா, திருப்பூர் கு.திலீபன், டி.சூர்யா, தாராபுரம் சி.இளந்தென்றல், த.திலீபன், திருச்சி ம.விஜய், ப.சாமுவேல், இலால்குடி சு.முரளிதரன், த.இரஞ்சித் குமார், கரூர் பெ.பெரியார்செல்வம்,  க.கவி யரசு, பெரம்பலூர் தொ.முத்துக்கிருட்டிணன்,  ப.சுபாசு வளவன், அரியலூர் ப.சித்திரைக் கண்ணன், ம.சிந்தனைச் செல்வன், மயிலாடுதுறை மு.முகில்வேந்தன், ச.மதி யழகன், நாகப்பட்டினம் சே.பாக்கியராசு, க.கும ரேசன், திருவாரூர் சு.தீனதயாளன், வீ.வினோத், திருத் துறைப்பூண்டி அ.உமாநாத், மா.பெரியார்தாசன், புதுக் கோட்டை பெ.அன்பரசன், அ.பாலசந்தர், அறந் தாங்கி ப.சதீஸ், எஸ்.சரவணன் மா.அ., காரைக்குடி இர.முத்துக்கிருட்டிணன், மு.க.பிரகாசு, இராமநாதபுரம் கா.முகேசுபாபு, சே.கண்ணதாசன், திண்டுக்கல் செ.அன்புச்செல்வி, ஜி.விக்னேசு , பழனி க.சந்துரு, த.சண்முகப்பிரியா, தேனி நா.ஜீவா, ம.பூவரசன், மதுரை மாநகர் சே.கலைச்செல்வி, எம்.முகேசு குமார், மதுரை புறநகர் ச.சாதி ஒழிப்பு வீரன், பெ.தமிழ்மணி, விருதுநகர் இரா.இளம்பருதி, சு.தமிழ்மணி, நெல்லை பா.மணிகண்டன், இர.கவுசல்யா, தூத்துக்குடி மா.தென் னவன், ஆ.கலைமணி, கன்னியாகுமரிஇர.சாஜின், பொன்.பாண்டியன்

மாணவர் கழகப்

பொறுப்பாளர்கள்

காரைக்கால் மண்டலத் தலைவர் மு.பெரியார் கணபதி, மண்டலச் செயலாளர் இரா.ராஜ்கிரண், புதுச் சேரி மண்டலச் செயலாளர் செ.ஏழுமலை, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ம.தமிழ்தென்றல், அமைப்பாளர் சு.விக்ரம், தருமபுரி மாவட்டத் தலைவர் ம.முனியப்பன், தருமபுரி சட்டக்கல்லூரி மாணவர் கழகத் தலைவர் காசி.பாஸ்கர், தென்காசி மாவட்டச் செயலாளர் மு.திராவிட மணி, சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் கா.கவுசிக், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக திராவிட மாணவர் கழகத் தலைவர் க.சங்கர், செயலாளர் கி.லதா, மற்றும் அனைத்துப் பள்ளி, கல்லூரி திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner