எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திண்டுக்கல், ஜூலை 3 திண்டுக்கல் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 28.6.2018 அன்று மாலை 5 மணியளவில் திண்டுக்கல் நாகல்நகர் தனலெட்சுமி கூட்டரங்கில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் இரா.வீரபாண்டியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மண்டலச் செயலாளர் கருப்புச்சட்டை சு.நடராசன், தென் மாவட்ட பிரச்சாரக்குழு அமைப்பாளர் தே.எடிசன்ராஜா, தேனி மாவட்ட தலைவர் ரெகுநாகநாதன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி, பழநி மாவட்ட தலைவர் பெரியார் இரணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.

பொதுச்செயலாளர் உரை

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் உரை யாற்றும்போது, திராவிடர் கழக வரலாற்றில் "பெரியார் பிஞ்சு"க்கு என தனியாக மாநாடு நடத்துவது இதுதான் முதல் முறை. பெரியார் பிஞ்சுகளின் முதல் மாநாடு நடத்து வதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்ந்தெடுத்தது திண்டுக்கல்லைத்தான். திண்டுக்கல் மாவட்ட பொறுப் பாளர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவார்கள் என்று கூறினார். நான் கழகத்தில் பொறுப்பாளராக பொறுப்பு ஏற்றபின், முதன்முதலாக திண்டுக்கலில் நடை பெற்ற நிகழ்ச்சியில்தான் கலந்து கொண்டேன். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சார்பில் நடைபெற்ற வாகை சூட வாரீர்'' நிகழ்ச்சிக்காக திண்டுக்கல்லில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல இந்த மாநாடும் மிகவும் சிறப்பாக நடக்கவேண்டும் என்று கூறி மேலும் மாநாடு சிறப்பாக நடைபெற பயனுள்ள ஆலோ சனைகளை வழங்கினார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர்  தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் அ.மோகன், வழக்குரைஞர் கெ.சுப்ரமணியம், திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் பழ.இராஜேந்திரன், பழநி மாவட்ட செயலாளர் நா.நல்லதம்பி, பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன், மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.நாகராசன், செயலாளர் பெ.அறிவுடைநம்பி, சி.மெர்சி ஆஞ்சலா மேரி, வி.ராமசாமி, வி.கணேசன், போடி ம.சுருளிராசு, பி.கண்ணன், தி.தொ.சங்கம் எம்.செல்வம், மாணவர் கழகம் எஸ்.விக்னேஷ், செபாஸ்டின் சின்னப்பன், பழனி ஜே.ஜோசப், ஆண்டிப்பட்டி செ.கண்ணன், பெரியார் பெருந்தொண்டர் வீர.கலாவதி, சு.அழகர்சாமி, கோரிக்கடவு ச.திராவிடச் செல்வன், தஞ்சை இரா.கதிரவன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு நன்கொடை அறிவித்த தோழர்கள்

பழனி மாவட்ட ப.க. சார்பில்  - ரூ. 15,000, வழக்குரைஞர் கொ.சுப்ரமணியம் -  ரூ. 10,000, பெ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர், திண்டுக்கல்)-- -  ரூ. 10,000, மு.நாக ராசன் (மாவட்ட தலைவர், ப.க. திண்டுக்கல்)- --  ரூ. 10,000, திராவிடச் செல்வன் (பழனி) -- ரூ. 10,000, புலவர் வீர.கலாநிதி (ஒட்டன் சத்திரம்) --  ரூ. 10,000,சே.மெ.மதிவதனி மாணவர் கழகம் சார்பில் -  ரூ. 10,000, இளங்குமரன் (கணி யூர்) - ரூ. 10,000, மண்டல செயலாளர் கருப்புச்சட்டை சு.நடராசன் --  ரூ. 5,000, இரா.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்) -- ரூ. 5,000, அ.மோகன் (பேரவைத் தலைவர் தி.தொ.ச) --  ரூ. 5,000,ரெகுநாகநாதன் (தேனி) -  ரூ. 5,000, பழ.இராசேந்திரன் (மாவட்ட துணைச் செயலாளர்) -  ரூ. 5,000, திருநாவுக்கரசு (ஒட்டன் சத்திரம்) -  ரூ. 5,000, பெரியார் இரணியன் (பழநி மாவட்ட தலைவர்) -  ரூ. 2,000, நா.நல்ல தம்பி (மாவட்ட செயலாளர், பழநி) --  ரூ. 2,000, சுருளிராசன் (தேனி) --  ரூ. 2,000, கண்ணன் (நகரச் செயலாளர், போடி) -- ரூ. 2,000, கண்ணன் (ஆண்டிப்பட்டி) --  ரூ. 1,000, வி.ராமசாமி (நகரத் தலைவர், ப.க.) -- ரூ. 1,000, ஜே.ஜோசப் (பழநி)--  ரூ. 1,000, சு.அழகர்சாமி (பழநி)- -  ரூ. 1,000, செபாஸ் டின் சின்னப்பன் --  ரூ. 500, மதுரை தே.எடிசன்ராஜா வரவு -- ரூ. 6,000,

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1: திண்டுக்கல் பெரியார் பிஞ்சுகள் மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது. பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டை காலை முதல் மாலை வரை பெரியார் பிஞ்சுகளின் பேரணியுடன் பல்சுவை நிகழ்ச்சியாக மிகுந்த எழுச்சியுடன் நடத்துவது என்றும் மாநாட்டை விளக்கி சுவர் விளம்பரம், விளம்பர பதாகைகள் வைப்பது, மாநாட்டு நிதி வசூல் உள்பட அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2: ஜூலை 8 இல் கும்பகோணத்தில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் திண்டுக்கல், தேனி, பழநி, மாவட்டங்களின் சார்பில் பெருவாரியான மாணவர்களை பங்கேற்க செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: இளைய தலைமுறையை கொள்கைப் பூர்வமாக உருவாக்கும் பெரும் முயற்சியாக இயக்க வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் 18 அன்று திண்டுக்கல்லில் நடைபெறும் பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டில் ஆயிரக்கணக்கான பெரியார் பிஞ்சுகளை பங்கேற்க செய்ய வேண்டுமாறு கழக குடும்பத்தவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ஏற்பாட்டுக்குழு

ஒருங்கிணைப்பாளர்கள்: வீ.அன்புராஜ் -  பொதுச் செயலாளர், இரா.ஜெயக்குமார் -  பொதுச்செயலாளர், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் -  மாநில மாணவர் கழக செயலாளர், வே.செல்வம் -  அமைப்புச் செயலாளர், தே.எடிசன் ராசா - தென்மாவட்ட பிரச்சார செயலாளர், சுப.செகநாதன் -  மாவட்ட செயலாளர், மோகன் -  தொழி லாளர் பேரவை தலைவர், சுப்பிரமணியன் -  பொதுக்குழு உறுப்பினர், தலைவர்: வீரபாண்டியன் - மண்டலத் தலைவர்

செயலாளர்: கிருஷ்ணமூர்த்தி - திண்டுக்கல் மாவட்ட செயலாளர்

பொருளாளர்: நாகராசன் -  திண்டுக்கல் மாவட்ட தலைவர்

துணைத் தலைவர்கள்

கருப்புச்சட்டை நாகராசன் - பொதுக்குழு உறுப்பினர், ரெகுநாகநாதன் -  தேனி மாவட்ட தலைவர், இரணியன் -  பழனி மாவட்ட தலைவர், நாராயணன் -  பொதுக்குழு உறுப்பினர்

துணைச் செயலாளர்கள்

மணிகண்டன் -  தேனி மாவட்ட செயலாளர், நல்லதம்பி - பழனி மாவட்ட செயலாளர், கருணாநிதி -  திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர்

உறுப்பினர்கள்

வீரகலாநிதி - பொதுக்குழு உறுப்பினர், மாணிக்கம் -  திண்டுக்கல் நகரத் தலைவர், அழகர்சாமி - பழநி மாவட்ட அமைப்பாளர், சே.மெ.மதிவதனி -  மாநில மாணவர் கழக கூட்டு செயலாளர், திராவிடச்செல்வன் -  பழனிமாவட்ட ப.க. தலைவர், திருநாவுக்கரசர் -  ஓட்டன்சத்திரம், பொன் ராஜ் -  திண்டுக்கல் ஒன்றிய செயலாளர், பழ.இராஜேந்திரன் -  மாவட்ட துணைச் செயலாளர், இளமாறன் - மாணவர் கழகம், செ.அன்புச்செல்வி - மாவட்ட மாணவர் கழக தலைவர், சுரேஷ் -  மாவட்ட இளைஞரணி செயலாளர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner