திராவிடர் கழக மாநாடு என்றாலே அங்கே அடிமைத் தளையாம் தாலி அகற்றும் நிகழ்ச்சி கண்டிப்பாக இடம் பெறும். கடலூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர்
வி.திராவிடன், அவர் தம் வாழ்விணையர் ரேணுகா ஆகியோர் மாநாட்டு மேடையில் தோன்றினர். ரேணுகா அவர்களிடம் 'தங்களுடைய விருப்பப்படியே இந்தத் தாலி நீக்கம் நடைபெறுகிறதா?' என்று கழகத் தலைவர் கேட்டபோது, 'ஆம், நான் விரும்பியே இதனை ஏற்றுக் கொள்கிறேன்' என்று கூறினார். அதன் பின் தோழர் திராவிடன் பலத்த கரவொலிக்கிடையே அடிமைத்தளையாம் தாலியை அகற்றினார். அவர்களின் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்று தமிழர் தலைவர் பெயர் சூட்டினார். இதன் மகிழ்வாக தோழர் திராவிடன் ஓராண்டுக்கான 'விடுதலை' சந்தா அளித்தார்.