எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பத்தூர், ஜூலை 15, தர்மபுரி மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டலத்திற் குட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருப்பத்தூர் கே.கே.சி. எழிலரசன் இல்லத்தில் 11.7.2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்தின் நோக்கமான 28.7.2018 அன்று மத்தூரில் நடைபெற உள்ள மண்டல இளைஞரணி மாநாடு குறித்து இதுவரை நடந்துள்ள பணிகளையும் இனி செய்ய வேண்டிய பணிகளையும் கழக அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் எடுத்துக் கூறினார். தொடர்ந்து கிருட்டினகிரி மாவட்ட தலைவர் மு.துக்காராம், மண்டல தலைவர் பெ.மதி மணியன், மாநில மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்செல்வி, மண்டல மாணவர் கழக செயலாளர் சி.ஏ.சிற்றரசன், மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் மு.இந்திராகாந்தி, மாவட்ட துணைச் செய லாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் அகிலா எழிலரசன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பிரபு மற்றும் பலரின் கருத்துகளை கேட்டபின் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநாடு வெற்றிகரமாக நடத்திட சில ஆலோசனைகளை வழங்கி வசூல் செய்வதற்கு முன் விளம்பரம் மிக முக்கியம் சுவர் விளம்பரம், துண்டறிக்கை விநியோகம் போன்றவற்றை மக்கள் நன்கு அறியும் வண்ணம் முன்னதாக செய்திட்டால் மாநாடு பெற்றி பெறும். அதன்படி அனை வரையும் செயல்பட வேண்டுமாய் கேட்டு கொண்டார்.

சந்தா வழங்கல்

மாநில ப.க.துணைத் தலைவர் அண்ணா சரவணன் அவர்கள் மூலம் வருகை தந்திருந்த கல்லூரி மாணவர்கள், விமல்ராஜ், அன்புசெழியன் ஆகியோர் இயக்க ஏடான உண்மை 3 ஆண்டு சந்தாவிற்கான தொகையை கழக துணைத் தலைவரிடம் வழங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஊமை செயராமன் மாநாட்டிற்கு அறிவித்திருந்த மீதித்தொகை ஆயிரத்தை கழக துணைத் தலைவரிடம் வழங்கினார்.

திருப்பத்தூர் நகர செயலாளர் காளிதாஸ் மாநாட்டிற்கு நன்கொடை ரூ. 10,000 தருவதாகவும் 15 உண்மை சந்தாக்களை முடித்து தருவதாக உறுதியளித்தார். இதே போன்று கிருட்டிணன் ரூ. 10,000 மாநாட்டிற்கு தருவதாக அறிவித்தார். மேனாள் மாவட்ட செயலாளர் ஊற்றங்கரை பழ.பிரபு, 100 உண்மை சந்தாக்களுக்கு பொறுப்பேற்று கொண்டார்.

ஆம்பூர் வெற்றி 10 உண்மை சந்தா தருவ தாகவும், கிருட்டினகிரி மாவட்ட துணைத் தலைவர் த.அறிவரசன் 15 சந்தாவுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுவதாக அறிவித்தார்.

புதிய பொறுப்பாளர்கள்

ஊற்றங்கரை ஒன்றிய கழகத்திற்கு கீழ்கண்டவாறு புதிய பொறுப்பாளர்களை கழக துணைத் தலைவர் அறிவித்தார்.

ஒன்றிய தலைவர்: செ.பொன்முடி, ஒன் றிய செயலாளர்: செ.சிவராஜ், ஒன்றிய அமைப்பாளர் அண்ணா அப்பாசாமி, ஊற்றங்கரை நகர தலைவர்: இரா.வேங்கடம், நகர செயலாளர்: முனி வெங்கடேசன்.

இந்நிகழ்ச்சியில் கே.சி.கமலம்மாள், பா. சுதா, த.அறிவரசன், கிருட்டினகிரி மாவட்ட துணைத் தலைவர் மா.திராவிடராசன், சு.சாமிநாதன், கு.ராசேந்திரன், என்.நரசிம்மன், ச.ஜனசெயன், புலவர் அண்ணாமலை, சபிதா திருப்பத்தூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தை கே.கே.சி. எழிலரசன் ஒருங்கிணைத்து நடத்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner