எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, ஜூலை 15, தூத்துக் குடி உண்மை வாசகர் வட்டம் 8ஆவது கூட்டமானது பெரியார் மய்யம், அன்னை மணியம்மை யார் அரங்கில் 23.6.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

வாசகர் வட்டச் செயலாளர் சு.காசி தலைமையில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரி யாரடியான், இளைஞரணி மாவட்டத் தலைவர் ஆ.கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி அவர்களின் 79ஆவது பிறந்த நாள் நிகழ்வு தொடங்கியது.

தூத்துக்குடி சு.காசி பொன் னாடை அணிவித்தும், நெல்லை மாவட்டச் செயலாளர் ச.இரா சேந்திரன், தூத்துக்குடி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி, நெல்லை மாநகரத் தலை வர் பி.இரத்தினசாமி, மாவட்ட ப.க. செயலாளர் தெ.பீட்டர், பேராசிரியர் தி.ப.பெரியாரடியான், மண்டலத் தலைவர் மா.பால் ராசேந்திரம் ஆகியோர் பய னாடை, புத்தகம் வழங்கி பிறந்த நாள் பாராட்டைத் தெரிவித்துப் பெருமைப் படுத்தினார்கள்.

இரா.காசி அவர்கள், தந்தை பெரியாரை இளமையில் தான் நெல்லையிலும், மும்பையிலும் கண்டதை நினைவு கூர்ந்தார். அன்று முதல் இன்று தமிழர் தலைவர் காலம் வரை அய் யாவின் கருத்தின் வழியே தாமும் தம் குடும்பத்தாரும் வாழ்ந்து கொண்டு, கழகப்பணியும் ஆற்றி வருவதாகக் கூறி, பாராட்டியோர் அனைவருக்கும் நன்றி கூறி ஏற்புரையை நிறைவு செய்தார்.

அடுத்து, பெரியார் பிஞ்சு மு.சிவசந்திரபோஸ் ‘புரட்சியாளர் பெரியார்’ என்ற தலைப்பில் எழுச்சியுரை யாற்றி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.

இறுதியாக தந்தை பெரியாரின் ‘கடவுள் மறுப்புத் தத்துவம்‘ என்ற நூல் அறிமுகவுரை தொடங் கியது. வாசகர் வட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் தம் உரை யைப் புத்தக முன்னுரையுடன் தொடங்கினார். தம் உரையில், உலக நாத்திகர்களில் கடவுள் மறுப்பை ஓர் இயக்கமாக்கி நிலை நிறுத்தியவர் தந்தை பெரி யார் ஒருவரே. ஜெர்மானிய ரொருவர் கேட்ட வினாவிற்கு, “நீங்களே என்னது என்று தெரியாத கடவுளை நான் ஏன் நம்ப வேண்டும்?” என்றவர் பெரியார். பயத்தால் ஆதி மனித ரிடம் ஏற்பட்டக் கருத்தினைக் கற்பனைக் கடவுளாக்கிச் சில சுயநலக்காரர்கள் ஏய்த்துப் பிழைப்பு நடத்திய செய்திகள்தாம் கடவுள் வரலாறு என்றார் பெரியார். கடவுள் இருப்பதாக எண்ணியவன் முட்டாள். அவ னைத் திருத்தலாம். இல்லை யென்று தெரிந்தும் இருப்பதாகப் பொய் கூறிப் பிழைப்பு நடத்துபவன் அயோக்கியன். அவனை மன்னிக்கவே முடியாது என்றவர் பெரியார். காட்டுமிராண் டியாய் இருந்த வேளையில் கடைப்பிடித்ததை இன்றும் நம்பிச் சீரழிவோரைக் காட்டு மிராண்டி என்று சொல்வதில் வேதனை கொள்வது ஏன்? என்றார் பெரியார். ஆத்திகர்கள், கடவுளுக்குக் கூறும் இலக்கணங் களின் படிகடவுளொன்றோ, பல வோ இருந்தால் இத்தனை யாண்டுகால வணக்கத்தால் உலகமே பசி, பட்டினி, வறுமை, மேல் கீழ் என்ற பிளவு, பெரு வெள்ளம், பூகம்பம், சுனாமி என்ற நிலையில்லாது ஆரோக்கி யமாய், ஒழுக்கத்துடன் உயர்ந்த மனித இனம் ஆகியிருக்குமே! அப்படியில்லாத சூழலில் இல்லைதான் கடவுள் என்றார் பெரியார். என் பிரச்சாரம் அவ ரைத் தாக்கிப் பொறாது வருவாரே யானால் ‘இதோ கடவுள்’ என்று சொல்லிவிட்டு போவதில் ஒரு தயக்கமும் எனக்கில்லை என்றவர் பெரியார் என்று விளக்க வுரையாற்றினார். மாநகரப் ப.க. தலைவர் ப.பழனிச்சாமி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அனைவருக்கும் தேநீரும், இரவுச் சிற்றுண்டியும் நெல்லை ச.இரா சேந்திரன் வழங்கினார். இந்நிகழ் வில் மாநகரப் ப.க. செயலாளர் சு.சுப்புராஜ், மாவட்டத் துணைத் தலைவர் பொ.செல்வராஜ், பெரி யார் மய்யக்காப்பாளர் பொ. போஸ், ப.க.தோழர்கள் க.கும ரேசன், சொ.பிரபாகரன், நூலகர் இசக்கி, கழக தோழர்கள் சி.முருகராசா, சீ.மனோகரன், செ.ஜனார்த்தனன், மாவட்டத் துணைச் செயலாளர் இரா.ஆழ் வார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner