எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிவகங்கை

சிவகங்கை மற்றும் காரைக்குடி கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிவகங்கை வழக்குரைஞர் இன்ப லாதன், சிவகங்கை மாவட்ட தலைவர் பெரு.ராசாராமன்,மாவட்ட செயலாளர் ச.அனந்த வேல், காரைக்குடி மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி,மாவட்ட செய லாளர் கு.வைகறை,பொதுக்குழு உறுப் பினர்  உ.சுப்பையா,செ.தனபாலன், தலை மை கழக பேச்சாளர் தி.என்னாரசு பிராட் லா,பெரியகோட்டை சந்திரன், வெ. அக்கினி, கோவிந்தன்,வைகை தங்கராசா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஒக்கூர் தெய்வேந்திரன், சிவகங்கை நகர தலைவர் வெ.புகழேந்தி,வேம்பத்தூர் செய ராமன், ஓவியர் முத்துக் கிருட்டினன், மாணவர் கழகம் அறிவழகன் உள்ளிட்ட பல்வேறு தோழர் களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தீர்மானங்கள்

நாகர்கோவில் முதல் சென்னை வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பரப்புரை பயண வரவேற்பு பொதுக் கூட்டத்தை 25.07.2018 அன்று சிவகங்கையில்  மிக எழுச்சியோடு நடத்துவது. பொதுக் கூட்டத்தை விளக்கி பிளக்ஸ்,சுவரெழுத்து,

விளம்பரம் செய்வது,நிதிவசூல் உட் பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் கழகத் தோழர்கள்,பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

3.விழிப்புணர்வு பரப்புரை பெரும் பயணம் மேற்கொண்டு 25.07.2018 அன்று சிவகங்கை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இராம நாதபுரம் மாவட்ட தி.க.சார்பில்சிறப்பான வரவேற்பளிப்பது என முடிவு செய்யப் படுகிறது.

3. ஆகஸ்ட் 2,3,4,5 ஆகிய நாட்களில் குற்றாலத்தில் நடைபெறவுள்ள பெரி யாரியல் பயிற்சி முகாமில் சிவகங்கை மற்றும் காரைக்குடி மாவட்டங்களின் சார்பில் மாணவர்களை பெருமளவில் பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்படுகிறது.

நன்கொடை அறிவித்தோர்

உ.சுப்பையா ரூ.10000

அ.மகேந்திரராசன் ரூ.5000 பெரியகோட்டை சந்திரன் ரூ. 5000

ச.அனந்தவேல் ரூ.1000 தி.என்னாரசு பிராட்லா ரூ.1000 ச.பிரின்சு என்னாரசு பெரியார் ரூ.1000 தி.புரூனோ என்னாரசு ரூ.1000

தங்கராசன் ரூ.1000 வேம்பத்தூர் செயராமன் ரூ.500

வெ.அக்கினி ரூ.500 ஒக்கூர் தெய்வேந்திரன் ரூ.500

புதிய பொறுப்பாளர்கள்

சிவகங்கை மாவட்ட து.செயலாளர் ஆ.தங்கராசா

மானாமதுரை ஒன்றிய அமைப்பாளர் பெரியகோட்டை சந்திரன்

திருப்புவனம் ஒன்றிய அமைப்பாளர் வெ.அக்கினி

சிவகங்கை நகர தலைவர் வெ.புகழேந்தி

முடிவில் நகர தலைவர் புகழேந்தி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner