எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருநெல்வேலி தச்சநல்லூரில் நெல்லை மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.காசி தலைமையில் நடைபெற்றது.

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பயணத்தின் நோக்கம், சிறப்பாக நடத்திட வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

மண்டலத் தலைவர் பால்.இராசேந்திரம், மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்டச் செயலாளர் ச.இராசேந்திரன், தென்காசி மாவட்டச் செயலாளர் பி.பொன்ராசு, மாநகர தலைவர் பி.ரெத்தினசாமி, மாவட்ட ப.க. தலைவர் இரா.வேல்முருகன், மாவட்ட ப.க. செயலாளர் தெ.பீட்டர், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் பி.பாண்டியன், வள்ளியூர் இரமேசு, தி.பன்னீர்செல்வம் கருத்துரை வழங்கினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. தமிழக மக்களின் கல்வி, வேலை வாய்ப்பினைப் பாதுகாக்கவும், மூடநம்பிக் கையினை முற்றாக ஒழித்திடும் துணி வினைப் பெற்றிடவும், இனமானம், தன்மானம், பகுத்தறிவு உணர்வினை ஊட்டிடவும் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பெரும் பயணத்தினை மேற்கொண்டு திருநெல்வேலிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை உற்சாகமாக வரவேற்று, தச்சநல்லூர் விழிப்புணர்வுப் பிரச்சாரக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்தித் தருவதென இக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

2. சி.ரமேஷ் வள்ளியூர் நகர திராவிடர் கழகச் செயலாளராக இன்று முதல் பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்.

3. தோழர்களுக்கு இரவு உணவினை வழங்கிட ஒப்புதல் வழங்கிய மாவட்ட ப.க.தலைவர் இரா.வேல்முருகன் அவர் களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner