எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி உண்மை வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு எழுச்சியுரை!

ஆவடி, ஜூலை 22 உண்மை வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் செயல வைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் கலந்து கொண்டு, “காமராஜரின் கல்வியும்! மோடியின் கல்வியும்!” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கல்வி வள்ளல் காமராஜரின் 116 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் வகை யில் ஆவடி உண்மை வாசகர் வட்டம் சார்பில், 15.07.2018 அன்று காலை 11 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் இந்த மாதத்திற்கான அரங்கக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் உண்மை வாசகர் வட்டத்தின் செயலாளர் தோழர் இ.தமிழ்மணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதைத்தொடர்ந்து உண்மை வாசகர் வட்டத்தின் தலைவர் க.வனிதா தலைமையேற்று இந்த நிகழ்ச்சி யின் முக்கியத்துவத்தை விளக்கிப்பேசினார். வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் தோழர் சி.ஜெயந்தி, துணைச்செயலாளர் க.கலைமணி, வாசகர் வட்டத்தின் புரவ லர்கள் கோ.முருகன், பூவை செல்வி, மாவட்டத் தலைவர் பா. தென்னரசு, செய லாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காமராஜரின் சகாப்தம்!

இவ்விழாவில் பங்கேற்று பேசிய கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, காமராஜரை ஏன் கல்வி வள்ளல் என்று சொல்கிறோம் என்பதை விளக்க ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வியிலிருந்து தொடங்கினார். “எதையும் சட்டமன்றத் திலோ நாடாளுமன்றத்திலோ விவாதத்திற்கே கொண்டு வராமல், தானடித்த மூப்பு என் றொரு பழமொழி சொல்வார்களே அது போல, ராஜாஜி குலக்கல்வியை கொண்டு வந்தார். அப்போது சட்டமன்றத்திலே ‘யாரைக்கேட்டு இந்தக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்?’ என்று கேள்வி கேட் கப்பட்டது. கேட்டவர் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர். அதற்கு ராஜாஜி சொன்ன பதில் என்ன தெரியுமா? ஆதிசங்கரனும், இராமனுஜமும் யாரைக்கேட்டு சமூக சீர் திருத்தத்தைக் கொண்டு வந்தனர்? ஆதிசங் கரனும், இராமானுஜரும் கொண்டு வந்தது எந்த சமூகத்திற்கான சீர்திருத்தம்? என்றொரு கேள்வியிலேயே பதிலையும் குறிப்பாலு ணர்த்திவிட்டு, “தோழர்களே பெட்ரோலை யும் தீப்பந்தத்தையும் வைத்துக் கொள்ளுங் கள்! நான் நாள் குறித்துச் சொல்கிறேன்! அன்றைக்கு அக்ரகாரத்தைக் கொளுத்துங் கள்!” என்று தந்தை பெரியார் அதற்காற்றிய எதிர்வினையைச் சொன்னார். பெரியாரைப் பற்றி நன்குணர்ந்த ராஜாஜி, பயந்துபோய் உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தைக் கூறிவிட்டு பதவியை ராஜினாமா செய்தார். அதற்குப்பிறகுதான் தோழர்களே காம ராஜரின் சகாப்தம் தொடங்குகிறது என்றதும் பார்வையாளர்கள் தன்னை மறந்து கைத்தட்டினர். ஒத்துக்கொண்ட கூட்டத்தை தள்ளிவைத்தறியாத தந்தை பெரியார், வரதராஜூலு நாயுடு அவசரப்பணியாக அழைத்தார் என்பதற்காக சிதம்பரம் கூட் டத்தை தள்ளிவைத்துவிட்டு வந்து, காம ராஜரை சந்தித்தார். காமராஜரை முதலமைச் சராக இருக்கும்படி சம்மதிக்க வைத்தார். அதற்குப்பிறகுதான் தமிழகத்தில் புரட்சிகர மான மாற்றங்கள் நடைபெற்றது என்று கூறி அதை பட்டியலிட்டார்.

பாசிஸ்ட்டுகளை

அப்புறப்படுத்த வேண்டும்!

மோடியின் குருகுலக் கல்வியைப்பற்றி சொல்லவந்தவர், குருகுலத்தில் சந்திரன் குருபத்தினியிடம் நடந்து கொண்ட புரா ணக்கதையை நினைவூட்டி, அந்தக்கல்வி மீண்டும் வருமென்று சொன்னால் உலக ளாவிய கல்வியாக நமது கல்வியை உரு வாக்க முடியுமா? அரசியல் சட்டத்தின்படி அறிவியல் மனப்பான்மையை வளர்க்காமல் இதுபோன்ற முட்டாள் தனங்களை வளர்க்க வேண்டுமா? என்று  கேள்விகளாகக் கேட்டு, காமராசரின் கல்வி மக்களின் அறிவை வளர்க்கும் கல்வியாக, மக்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துகிற கல் வியாக, உருப்படியான ஒரு கல்வியாக இருந்தது. ஆனால் இன்றைக்கிருக்கிற அரசாங்கத்தின் கல்வி முறை கற்காலத்திற்கு, பழங்காலத்திற்கு, காட்டுமிராண்டிக்காலத் திற்கே நம்மை அழைத்துச் செல்கிற கல்வி யாக இருக்கிறது. ஆகவே இப்படிப்பட்ட பிற்போக்கு சக்திகள், பாசிஸ்ட்டுகளை அப்புறப்படுத்த வேண்டும். அதற்குத் துணைபோகிற தமிழ்நாட்டிலே ஆட்சி நடத்துகிற அடிமைகள் அகற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சூளுரையை நாம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக செயலவைத் தலைவருக்கு உண்மை வாசகர் வட்டத்தின் சார்பாக பயனாடைபோர்த்தியும், மாவட்ட அமைப் பாளர் உடுமலை வடிவேல் சார்பாக புத்தகம் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட பெரி யார் விருது பெற்ற, தன்னம்பிக்கை பேச் சாளரான இன்ஸ்பைரிங் இளங்கோ மற்றும் அவர் குடும்பத்தினருக்கு செயலவைத் தலைவர் ஆடைபோர்த்தி மரியாதை செய்தார். இறுதியில் உண்மை வாசகர் வட்டத்தின் பொருளாளர் தோழர் சோபன் பாபு நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்...

நிகழ்ச்சியில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும் பொன் செந்தில்குமாரி, மகளிரணித் தோழர் கள் மணிமேகலை, செ.பெ.தொண்டறம், பாக்யா, ராதிகா மற்றும் கொரட்டூர் கோபால், வஜ்ரவேலு, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ராமதுரை,  பூவை வெங் கடேசன், பெரியார் மாணாக்கன், இரணியன், நாகராஜன், வடசென்னை மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் வெங்கடேசன் இவர்களோடு ஆவடி மாவட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner