எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓசூர், ஜூலை 22 ஓசூரில் நகர திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு "எங்கே செல்கிறது இந்தியா" என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஓசூர் ஆந்திரா சமிதியில் 15.7.2018 அன்று காலை 11 மணிக்கு நடைபெற் றது.

கருத்தரங்கிற்கு மாவட்ட துணைத் தலைவர் அ.செ.செல் வம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தி.பாலகிருட்டிணன் அனைவரையும் வரவேற்று பேசினார். பெரியார் பிஞ்சு ல.ம.நன்மதி கடவுள் மறுப்பு கூறி "அவர்தான் பெரியார்" என்ற புரட்சி கவிஞர் வரிகளை தன் மழலை பேச்சில் பேசி அனைவர் கரவொலியை பெற் றார். தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் அ.செ.செல்வம் தலைமையுரையாற்றி னார். அவரை தொடர்ந்து மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன், மாவட்ட செய லாளர் கோ.திராவிடமணி, மாவட்ட தலைவர் மு.துக்காராம் ஆகியோர் உரையாற்றினர்.

வே.மதிமாறன் உரை

இறுதியாக "எங்கே செல் கிறது இந்தியா" என்ற தலைப் பில் எழுத்தாளர் வே.மதிமாறன் உரையாற்றினார். அவரது உரை யில் தந்தை பெரியார் கருத்தே தற்போது நாட்டில் உள்ள பிரச்சினைக்கு எல்லாம் ஒரே தீர்வு. இந்தியாவை தற்போது ஆளும் ஆட்சியாளர்கள் வேத காலத்திற்கு அழைத்து செல்கி றார்கள். அப்படி வேத காலத் திற்கு மீண்டு செல்வோமா னால்& குலக்கல்வி திட்டம் மீண்டும் வரும். அப்பன் தொழிலை மகன் செய்ய வேண் டிய நிலை ஏற்படுத்தவே முயற்சிக்கிறார்கள். இந்த நிலை யில் இருந்து நம்மை மீட்டு கொண்டு வந்தவர்கள் புத்தர், புரட்சியாளர் அம்பேத்கர், தலை வர் தந்தை பெரியார், காமராஜர்...

எனவே மக்களுக்காக போரா டுபவர்களை கைது செய்வதும் அவர்களை அடக்குவதுமாக செயல்பட்டு நம்மை அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டு செல் லுவதற்கே முயற்சிக்கிறார்கள். இதில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் அரசு மாற்றம் ஏற்படுத்த வேண்டும். தேர்தல் என்று வரும்போது மூன்றாவது அணி என்பதெல் லாம் பி.ஜே.பி.க்கே வாய்ப்பாக அமையும். இதையெல்லாம் விடுத்து மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக ஆட்சியை அமைப்பதன் மூலம்தான் வேத காலத்திற்கு இட்டு செல்லும் இந்தியாவை தடுத்து நிறுத்த முடியும் என பல்வேறு கருத் துகளை பேசினார். இந்து "எங்கே செல்கிறது இந்தியா" என்ற தலைப்பை எனக்கு தந்த திராவிடர் கழக துணைத் தலை வர் கலி.பூங்குன்றன் அவர்க ளுக்கு நன்றி. அவருக்கு இன்று 50ஆவது இணையேற்பு நாள், நான் சென்னையில் இருந்திருந் தால் நேரில் சென்று எனது அன்பை தெரிவித்திருப்பேன். எந்த பிரதிபலனும் எதிர்பார்க் காமல் பெரியார் தொண்டு செய்யும் அவருக்கும் அவரது வாழ்விணையர்க்கும் நாம் அனைவரும் கரவொலி மூலம் நம் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம் என பேசி முடித் தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் ப.முனுசாமி, மாவட்ட மகளிர் அணி தலைவர் செ.செல்வி, மாவட்ட செய லாளர் லதா & மணி, மாவட்ட அமைப்பாளர் பா.கண்மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஈ.லூயிஸ்ராஜ், மாவட்ட இளைஞரணி தலை வர் இல.ஆறுமுகம், மாவட்ட மாணவர் கழக தலைவர் க.கா.வெற்றி, நகர காங்கிரஸ் தலைவர் நீலகண்டன், விடு தலை சிறுத்தை கட்சி ஓசூர் பகுதி செயலாளர், இரா.இராமச் சந்திரன், வள்ளுவர் இலக்கிய மன்றம் தலைவர் சிவந்தி அரு ணாசலம், தமிழ்தேசக்குடியரசு இயக்கம் க.இரா.தமிழரசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார், சிபிஅய் நகர செயலாளர் இராமசந்திரன், எஸ்.டி.பி.அயாஸ், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒருங்கிணைப் பாளர் ஒப்புரவாளன், மனித நேய மக்கள் கட்சி ஏஜாப்கான், கிருட்டிணகிரி நகர செயலாளர் க.மாணிக்கம், ஓசூர் ஒன்றிய செயலாளர் மா.சின்னசாமி, நகர மேனாள் செயலாளர் து.ரமேஷ், அரிஸ், மாணவர் கழகம் செந்தமிழ்பகுத்தறிவு மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந் தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner