எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் சென்ற 21.7.2018 அன்று காலை 11 மணியளவில் பெரியார் மய்யம், அன்னை மணியம் மையார் அரங்கில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் தலைமை யேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். பெரியார் மய்யப் பொறுப்பாளர் சு.காசி, இளைஞரணித் தலைவர் ஆ. கந்தசாமி, செயலாளர் த.செல்வராசு ஆகியோரின் உரைகளுக்குப் பின் தோழர்கள் அனைவரும் விழிப்புணர் வுப் பிரச்சாரம் பற்றித் தம் கருத் துக்களை வழங்கினார்கள். அடுத்து மண்டலத் தலைவர் மா.பால் ராசேந்திரம் தம் உரையில், தமிழர் தலைவரின் ஓய்வறியாப் பணிகள் பற்றியும், குடந்தை மாணவர் கழகத் தின் சிறப்பினையும், தமிழ்ச் சமுதா யத்தின் முன் நிற்கும் கேடுகளை உட னடியாகக் களைந்திட முதல் குரல் எழுப்பிப் பணி செய்திடும், அனைத் துத் தலைவர்களையும் உசுப்பி எழுப் பிடும் தலைவராக விளங்கிடும் கழ கத் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் உறுதுணையாக நின்று பணியாற்றிட வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டார்.

அனைத்துக் கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்களையும் தூண்டி விட்டு, உறங்காது, ஒப்படைக்கப்பட் டப் பணியினை நன்முறையிலாற்றி, மாணவர்களை ஒருங்கிணைத்து, வட் டார மாநாடுகளை நடத்தி எழுச்சியை உருவாக்கி, இறுதியாக மாணவர் கழக மாநில மாநாட்டினை உலகோ ரும், கழகத்தோரும் வியந்திட வீறு கொண்ட பேரணியுடன் பல்லாயிரம் மாணவர்களைக் கூட்டி ஒன்றிணைத்த மாநில அமைப்பாளர் என்ற பொறுப் பினைச் சிறப்பாகச் செய்து காட்டிய, தமிழர் தலைவரையும் மகிழ்வுறச் செய்த உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களை உளப்பூர்வமாகப் பாராட் டிப் பேசினார்.

இறுதியாக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தமிழர் தலைவர் அவர்களையும், மற்றுமுள்ள உரை யாளர்கள், கழகத் தோழர்களையும் எவ்வாறு வரவேற்பது என்றும், பொதுக்கூட்ட மேடை, ஒலிபெருக்கி, விளம்பரப் பதாகைகள், ஒளியமைப்பு, கழகக்கொடிகள் கட்டுதல் என்று படி நிலைகளில் வகுத்துத் திட்டமிட்டுத் தோழர்களுக்கு விளக்கவுரையாற் றினார்.

குடந்தைக்கு வந்தோர்க்கு நன்றி கூறியும், திண்டுக்கல்லுக்கு வர வேண்டுமென அழைத்தும் உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக விளாத்திக்குளம் ஒன்றி யச் செயலாளர் மு.பாலமுருகன் நன்றி கூறினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்கள் பங்குபெறும் மாபெரும் விழிப்புணர்வுப் பெரும் பயணம், பொதுக்கூட்டம் 23.8.2018 அன்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடியில் நடைபெறுகிறது. அதனை மிகச் சிறப்புடன் நடத்தித் தருவதென இக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

2) உலகத் தலைவர் தந்தை பெரி யாரின் தத்துவங்களை அனைத்து மக் களின் உள்ளங்களிலும் பதிவு செய்யும் வகையில் பெரியாரியல் பயிற்சிப்பட் டறை, இளைஞரணி மாநாடு, மாண வர் கழக மாநாடு, பகுத்தறிவாளர்களின் மாநாடு, பெரியார் பிஞ்சுகளின் மாநாடு, விழிப்புணர்வுப் பரவிடும் பெரும்பயணம் எனத்தொடர் பிரச்சா ரப் பணிகளில் ஈடுபட்டு உழைத்திடும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்களை இக்கூட்டம் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

நன்கொடை வழங்கியோர்

காலை உணவு: மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம், மதிய உணவு: மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி, பணம் ரூ. 3000 வழங் கியவர்: மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம்.

பணம் அறிவித்தோர்

மு.பாலமுருகன் (விளாத்திக்குளம் ஒன்றியச் செயலாளர்) & ரூ. 1000, நாலுமூலைக்கிணறு இரெ.சேகர் & ரூ. 1000, அழகுமணி செல்வராசு & ரூ. 1000, உ.சக்திவேல் & ரூ. 1000,  மேல் மாத்தை காலாடி & ரூ. 500, புதூர் ஒன் றியத் தலைவர் முத்துராசு & ரூ. 500.

கேபிள் டி.வி.விளம்பரம்

மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ.கந்தசாமி, செயலாளர் த.செல்வராசு

புதிய பொறுப்பாளர்கள் விளாத்திகுளம் ஒன்றியம்

லைவர் & த.நகாராசன், செயலா ளர் & மு.பாலமுருகன்

புதூர் ஒன்றியம்

தலைவர் & சா.முத்துராசு, செயலா ளர் & வெ.பாலமுருகன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner