எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விருதுநகர் லட்சுமி காலனி அகிலகத்தில், 21.7.2018 அன்று மாலை 6 மணிக்கு, மாவட்ட தலைவர் இல. திருப்பதி தலைமையில் மண்டல தலைவர் மா.பவுன்ராசா, மாவட்ட புரவலர் ந.ஆனந்தம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தி.க.,ப.க. கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.

மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன் கடவுள் மறுப்புக் கூறி, தலைவரை முன்மொழிந்தார். மாவட்ட துணைச் செயலாளர் சு.சண்முகசுந்தரம் வழிமொழிந்தார். மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி அனைவரையும் வரவேற்று உரையாற் றினார். மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் வருகை தரும் விழிப் புணர்வுப் பிரச்சாரப் பெரும் பயணம் குறித்தும், வரவேற்புக் கூட்ட ஏற்பாடு கள் குறித்தும், கழக செயல்பாடுகளை விளக்கியும் கருத்துரையாற்றினார்.

பொதுக் குழு உறுப்பினர் வான வில் வ.மணி, மாவட்ட ப.க. தலை வர் பெ.த.சண்முகசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் வெ.முரளி, மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.கோவிந் தன், இராசை நகர தலைவர் பூ.சிவகுமார், செயலாளர் இரா.பாண்டி முருகன், சிவகாசி நகர தலைவர் மா. முருகன், அமைப்பாளர் பெ.கண்ணன், ஒன்றிய அமைப்பாளர் கா.காளிராசன், மாவட்ட ப.க. துணை அமைப்பாளர் மா.பாரத்,அருப்புக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் இரா.முத்தையா, நகர  செயலாளர் பா.இராசேந்திரன், இளை ஞரணித் தலைவர் க.திருtள்ளுவர், தஞ்சை அரவிந்த், மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பங் கேற்றனர்.

மண்டல இளைஞரணிச் செயலா ளர் இரா.அழகர் நன்றி கூறினார். மாநில ப.க. துணைத் தலைவர் கா. நல்லதம்பி - பொன்மேனி ராஜயோகம் இணையர் அனைவருக்கும் இரவுச் சிற்றுண்டி வழங்கி உபசரித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner