எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நல்லத்துக்குடி, ஜூலை 23, மயிலாடுதுறை கழக மாவட்டம் நல்லத்துக்குடி திமுக முன் னாள் கிளைக்கழக செயலாளர் சி.செல்வராஜ் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 15.7.2018 அன்று காலை 11 மணியளவில் நல்லத்துக்குடி பெரியார் தெரு சி.மாரியப்பன் இல்லத்தில் நடைபெற்றது.

திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப் பாளர் நிவேதா எம்.முருகன் தலைமையேற்க கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ஆ.ச.குண சேகரன்,நாகை மாவட்ட தலைவர்  விஎஸ்டிஏ நெப்போலியன் ஆகியோரின் நினைவேந்தல் உரைக்குப் பின்  கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். நல்லத்துக்குடி பகுதி சுயமரியாதைக் கோட்டையாக விளங்கி யதையும் இந்தப் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து மறைந்த பெருமாள் போன்ற பல தோழர்கள் சட்ட எரிப்பில் கலந்துகொண்டதையும் நினைவு கூர்ந்தார். 1970 களுக்கு முன்னால் மயிலாடுதுறையில் வசித்தபோது நடைபெற்ற பல்வேறு இயக்க செய்திகளைச் சொல்லி இதே மயிலாடு துறையில் தந்தை பெரியார் அவர்கள் நான்கு மணி நேரம் தொடர்ந்து ஒரு கூட்டத்தில் உரையாற்றியதையும், தந்தை பெரியார் அவர்கள் வயது முதிர்வு காரணமாக முதல் முதலாக  இருக்கையில் அமர்ந்து பேசியதும் இதே மயிலாடுதுறையை அடுத்த செம்பனார் கோவிலில் தான் என்ற வரலாற்று செய்தி யையும் எடுத்துரைத்தார்.

பொறியாளர் இ.சிந்தன் நன்றி கூறினார். மறைந்த செல்வராஜின் சகோதரர் நல்லத் துக்குடி சி.மாரியப்பன், ஜோதி மாரியப்பன், மற்றும் செல்வராஜின் துணைவியார் தேவகி செல்வராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நாகை மாவட்ட துணைத்தலைவர் இரா ஜேந்திரன், அமைப்பாளர் இராஜ.முருகையன், மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன்,   மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் அரங்க.நாகரெத்தினம், ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அருள் தாஸ், மாவட்ட ப.க. செயலாளர் அ.சாமிதுரை, சித்தர்க்காடு செல்வராஜ், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரெங்கன், கொள்ளிடம் ப.க அமைப்பாளர் பாக்கியராஜ், நாகை நகர செயலாளர் செந்தில். திருமருகல் ஒன்றிய தலைவர் பொன்.செல்வராஜ், இரெ.புத்தன், மற்றும் திராவிடர் கழக, திராவிட முன்னேற்ற கழக தோழர்கள், நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்ட திரா விடர் கழக செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner