எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விளக்குடி, ஜூலை 23 திருத் துறைப்பூண்டி கழக மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் விளக்குடி கடைதெருவில் 19.7.2018  அன்று மாலை 6 மணி அளவில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணை தலைவர் கு.காந்தீஸ்வரன் தலைமையிலும் மாவட்ட தலைவர் கி. முருகை யன், மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் ச.பொன்முடி, ஒன்றிய அமைப்பாளர் மலர்க்கொடி, நகர தலைவர் தி.குணசேகரன், பெரியார் பெருந்தொண்டர் ஆகி யோர் முன்னிலையிலும் நடை பெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் என்.செல்வம் வரவேற்புரையாற்றினார்.

சிறப்புரையாற்றிய பெரியார் செல்வன் அவரது உரையில்:-

காமராஜர் முதல்வர் ஆவதற்கு தந்தை பெரியார் அவர்கள் பக்க பலமாக துணையாக இருந்தார். ராஜாஜி முதல்வராக இருந்த போது மூடப்பட்ட பள்ளிக் கூடங்களை திறந்தவர் காமராஜர்.

மதிய உணவு திட்டம் கொண்டு வருவதற்கு நிதி நெருக் கடி ஏற்பட்ட போது மாண வர்களுக்கு மடிப்பிச்சை எடுத் தாவது மதிய உணவு திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று சொன் னவர் காமராஜர்.

தஞ்சாவூரில் மருத்துவ கல்லூரி, திருச்சி பெல் தொழிற் சாலை, ஆவடி ராணுவ டேங்க் தொழிற் சாலை, பெரம்பூர்

ரயில் பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், நீர்நிலை தேக்கங்கள் கட்டியது பெரியார் அண்ணா, ஜீவா, கலை ஞர் போன்றவர்களிடம் நட்போடு ஆக்க பூர்வமான செயல் திட் டங்களுக்கு சொல்லுரை யோச னையை கேட்டுக் மற்றவர்களுக் கும் அரசியல் கட்சிகளுக்கும், தோழர்களுக்கும் மதிப்பு கொடுத்த விவரத்தையும் விளக்கி சிறப்பாக உரையாற்றினார்.

அனைத்து பொதுமக்கள், அனைத்து கட்சி நண்பர்கள் நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சித்தார்த்தன், நகர செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் அறிவழகன், திருக்குவளை ரங்கநாதன், எட்டுக்குடி முரு கேசன், கோட்டூர் ஒன்றிய தலைவர் புஷ்பநாதன், களப்பாள் சம்பத், விளக்குடி திமுக ஊராட்சி செயலாளர் செல்வம், விளக்குடி  கட்சி தோழர்கள் உலகநாதன், சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட பகுத்தறிவாளர் செயலாளர் புகழேந்தி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner