எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடக்குத்து, ஜூலை 23 வடக்குத்து அண்ணாகிராமம் பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் சார்பில் மாதாந்திர தொடர் சொற்பொழிவு 45 ஆவது நிகழ்வாக காமராசர் பிறந்த நாள் விழா மண்டல இளைஞரணி செய லாளர் வி.திராவிடன் தலை மையில் நடைபெற்றது.

வடக்குத்து மாணவர் கழக பொறுப்பாளர் இரா.தமிழ்மணி வரவேற்புரை ஆற்ற மாவட்ட தலைவர் தென்.சிவக்குமார், மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், மாவட்ட அமைப் பாளர் சி.மணிவேல் ஆகியோர் முன்னிலையிலும் வடலூர் நகர தலைவர் புலவர் இராவணன், நெய்வேலி விசயலட்சுமி பாவேந்தர். மாவட்ட மாணவர் கழக தலைவர் தாயன்பன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக தலைமை கழகப் பேச்சாளர் யாழ்திலீபன் காம ராசரின் அருமை பெருமை களையும் அவர் ஆற்றிய சமூகநீதி பணிகளையும், காம ராசர், அண்ணா, கலைஞர் ஆகியோர் பெரியார் வழியில் ஆட்சி செய்தனர் என பதிவு செய்தார். இந்நிகழ்வில் இந்திரா நகர் விசயா கனகராசு, பத்மாவதி ராமநாதன், மாணிக்கவேல், அப் பியம்பேட்டை வேல், பெரியார் பெருந்தொண்டர் பழனியாண்டி, அண்ணாமலை பல்கலை கழக மாணவிகள், ஆசிரியர் பரமேஸ் வரன் மற்றும் பலர் பங்கேற் றனர்.

நிறைவாக நூலகர் இரா.கண் ணன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner