எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

ஜெயங்கொண்டம், ஜூலை 28 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப்பல்கலைக் கழகம் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், சமூகப்பணித்துறை, பெரியார் மருத்துவகுழுமம் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹர்சமித்ரா மருத்துவமனை, செயங்கொண்டம் சோழன் சிட்டி அரிமா சங்கமும் இணைந்து செயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 22.07.2018 ஞாயிறு காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை இலவச பொதுமருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் மருத்துவமுகாம் நடைபெற்றது.

சிறப்பு அம்சமாக கண் மருத்துவமும் நடைபெற்றது. பெரியார் மணியம்மை மருத்துவமனை மருத்துவக்குழுவுடன் மருத்துவமுகாமிற்கு 40 க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள், மருத்துவர்கள் மருத்துவ சேவை வழங்கினார்கள் இந்த ஆண்டு நடைபெற்ற ஆறாவது பெரிய மருத்துவமுகாம் ஆகும். இந்த மருத்துவ முகாமில் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் என 180 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் மார்பக புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிறப்பு அம்சமாக கண் மருத்துவமும் நடைபெற்றது. இதில் மார்பக புற்றுநோய் கண்டறியும் மருத்துவ சோதனையில் 40 பேர் கலந்துகொண்டு பரிசோதனை செய்துக் கொண்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்த மருத்துவ முகாமில் பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.கவுதமன் கூறும் போது இந்த மக்களை நாடி மருத்துவத்தின் பயன்கள் பற்றியும் மிகவும் தெளிவாகவும் விபரமாகவும் எடுத்துக்கூறினார்.

மருத்துவர் ஆர்.கவுதமன்

இந்த மருத்துவ குழுவில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத் துவர் ஆர்.கவுதமன், மருத்துவர் ஆர்.தமிழ்மணி செந்துறை, மருத்துவர் ஆர்.அனுசா செயங்கொண்டம், மருத் துவர் ஆர்.புகழேந்தி நீலகிரி மருத்துவர் பி.மஞ்சுளாவாணி திருச்சி, மருத்துவர் ஜி.எஸ்.குமார் கள்ளக்குறிச்சி, முனைவர் ஆர்.செந்தாமரை (முதல்வர் பெரியார் மருந்தியியல் கல்லூரி திருச்சி), மருத்துவர் ஜெ.ருகி பானு, மருத்துவர் எம்.ரபியா (ஹர்சமித்ரா மருத்துவமனை திருச்சி) மற்றும் மருத்துவர், பாண்டியன் (செயங்கொண்டம்), பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவ, மாணவிகள், பணி யாளர்கள் செவிலியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பான மருத்துவ சேவை வழங்கினர்.

பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் பேராசிரியர் முனைவர் த.ஜானகி இந்த மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற பெரும் பங்காற்றிய செயங் கொண்டம் சோழன்சிட்டி அரிமா சங்கம் மண்டல தலைவர் சி.காமராஜ் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைசெல்வன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், அகர்சந்த் மருத்துவ மனை பணியாளர்கள் பெரியார் மெட்ரி குலேசன் பள்ளி ஒருங்கிணைப்பாளர்  கோவிந்தராஜுலு, பெரியார் மெட்ரிக் குலேசன் பள்ளி ஆசிரியர்கள், பணி யாளர்கள், செவிலியர்கள், ஹர்சமித்ரா மருத்துவமனை மருத்துவர்கள், பணி யாளர்கள், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தின் சமூகப்பணித்துறை மாணவ மாணவிகள், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் எ.முகம்மது இஸ்மாயில் மற்றும் பெரியார் புரா திட்ட ஒருங் கிணைப்பாளர் க.முருகேசன் அவர் களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண் டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner