எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருச்சி, ஜூலை 28 பெரியார் மருந்தியல் கல்லூரி யின் திராவிட மாணவர் கழகத் துவக்க விழா  26.07.2018 அன்று மாலை 4.30 மணியள வில் நடைபெற்றது. திராவிடர் கழக பொதுச் செயலாளர்  வீ. அன்பு ராஜ் அவர்கள் இக் கழகத்தை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

அவர் தமது உரையில்: ஜாதி, தீண்டாமை, பெண்ண டிமை, கல்வி, வேலை வாய்ப் புக்களில் உரிமைகள் பறிக்கப் படுதல் போன்றவற்றை எதிர்த்து சமத்துவ சமுதாயம் உருவாக ஏற்படுத்தப்பட்டதுதான் திராவிட மாணவர் கழகம் என்றும் அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆரியக் கூட்டத்தை அதிர வைக்கும் அளவிற்கு  உருவானதுதான் திராவிட மாணவர் கழகம் என்றும் உரையாற்றினார்.

மேலும் இதில் இணைந் துள்ள மாணவர்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார் கற் பித்த சுய ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் பின்பற்றி மற்ற கல்லூரி மாணவர்களுக் கெல்லாம் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் முன் மாதிரியாகவும், எடுத்துக் காட்டாகவும் திகழ வேண்டும் என்றும் உரையாற்றினார். இம் மாணவர் கழகம் நூறு வயதைக் கடந்த பெரியார் பெருந் தொண்டர், இளைய சமுதாயத் தின் முன்னோடி, பழைய வாலிபர் என்று சொல்லக்கூடிய பெரியார் மருந்தியல் கல்லூரி யின் தாளாளர் ஞான செபஸ் தியான் அவர்களின் முன்னிலை யில் இணைந்திருப்பது எங் களுக்கெல்லாம் பெருமகிழ்ச் சியை தருகின்றது என்றும் அவர்களைப் போன்றோர், தமிழர் தலைவர் போன்றோர் நமக்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்கிறார்கள், அவர்கள் காட்டிய வழியில் பெரியார் காண விரும்பிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல் படுவோம் என்று உரையாற்றி,   திராவிட மாணவர் கழக உறுதி மொழிகள் குறித்தும், குடந்தை மாநாட்டு தீர்மானம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். பொதுச் செயலாளர் அவர்களிடம் பெரியார் மருந் தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக ரூ.10,000 நன்கொடை வழங்கப் பட்டது. முன்னதாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந் தாமரை  வாழ்த்துரை வழங் கினார். பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பேரா சிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்  திராவிட மாணவர் கழக தலைவர் ச. பிரியதர்ஷினி செயலாக்க உரை நிகழ்த்தினார். செயலாளர் எம். வெங்கடேஷ் குமார் வரவேற் புரையாற்றினார். துணைத் தலைவர் ச. குணசேகரன் நன்றி யுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியை திராவிட மாணவர் கழக உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner