எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'மலர் நேரம்' பகுதியில் குழந்தைகள் பாரதிதாசன் கவிதைகளை பாடிய காட்சி

சிகாகோ, ஜூலை 28 அமெரிக்காவின் சிகாகோ மாநகரில்  'இன்றைய தலைமுறைக்கான திராவிடம்' - திராவிடம் 2.0 - கருத்தரங்கம் மிக சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. விழா அரங்கத்திற்கு 'மருத்துவர் அனிதா அரங்கம்' என பெயர் சூட்டப் பட்டிருந்தது விழாவிற்கு வந்திருந்த உணர் வாளர்களையும் இளைய தலைமுறையினரையும் நெகிழ வைத்தது.

இந்நிகழ்ச்சியில் ஜெர்மானிய தமிழ் பேராசிரியர் உல்ரிக் நிக்கோலஸ் 'பெரியாரை உலகமயமாக்குவோம்' என்ற தலைப்பிலும் திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் 'பெரியாரின் இன்றைய தேவை' என்ற தலைப்பிலும்,  திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா சிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் 'திராவிடத்தின் இன்றைய பொருத்தப்பாடு' என்ற தலைப்பிலும் தங்கள் கருத்துரைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் இன்ப அதிர்ச்சியாக கும்பகோணம் திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் அவர்கள் வருகை புரிந்து விழா ஏற்பாட்டாளர்களையே ஆச்சர்யப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் 'மலர் நேரம்' பகுதியில் குழந்தைகள் பாரதிதாசன் கவிதைகளை பாடியது மிக சிறப்பாக அமைந்தது. தோழர் வினோப்பிரியா குழந்தைகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். விழாவின் இறுதியில் கலந்துரையாடல் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த பல்வேறு மக்கள் தங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் கேட்டனர். சுப.வீ. அவர்கள் தனக்கே உரிய பாணியில் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார்.

திராவிடம் வளர்த்த நம் தமிழ் மண்ணிலிருந்து திராவிட இயக்க முன்னோடிகளும், ஆளுமைகளும் வாழ்த்து செய்திகள் அனுப்பி இருந்தனர். முத்தாய்ப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் வாழ்த்து செய்தியுடன் கூடிய காணொலி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட சிந்தனையாளர் சிவசங்கர் அவர்கள் அனுப்பிய கல்வி உரிமை குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டது. கவிஞர் சல்மா அவர்களும் தனது வாழ்த்து செய்தியை அனுப்பி இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் அருகமை மாநிலங்களான மிச்சிகன், விஸ்கான்சின், இந்தியானா பகுதிகளிலிருந்து தோழர்கள் பயணம் செய்து வந்து பங்குகொண்டனர். தோழர் சரோஜா இளங்கோவன் விழா அறிமுக உரை வழங்கினார். தோழர்கள் அகிலா, கோகிலா மற்றும் ஜீவிதா கருத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். தோழர் ரவிக்குமார் நன்றியுரை வழங்கினார். தோழர் சுதாகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிகாகோ திராவிட இயக்க உணர் வாளர்கள் தோழர்கள் சோம.இளங்கோவன், அருள்செல்வி, வீரசேகர், தமிழ்மணி, ரவிக்குமார், வினோப்பிரியா, சரவண குமார், பிரியா, ரஜினிகாந்த், கோகிலா மற்றும் சுதாகர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பெரும்பான்மையாக இளைஞர்களே இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர். மருத்துவர் அனிதா அரங்கம் நிரம்பி வழிந்தது, ஒரு கட்டத்தில் தோழர்கள் தரையில் அமர்ந்து கருத்தரங்கை கண்டது திராவிட இயக்கத்தின் தொடக்க கால கூட்டங்களை நம் முன்னே கொண்டு வந்தது. கடல் கடந்து வந்தும் திராவிட இயக்கத்தின் எழுச்சியை காணமுடிகிறது என்றால், அந்த இயக்கத்தின் கருத்துகளும், கொள்கைகளும் அவ்வளவு ஆழமாக வேரூன்றி இருப்பதை உணர முடிகிறது. திராவிடத்தை வீழ்த்த அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பல சக்திகள் தொடர்ச்சியாக சூழ்ச்சிகள் செய்து கொண் டிருக்கும் இந்த வேளையிலும், இது போன்ற நிகழ்ச்சிகள் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

ஆரியத்தால் வீழ்ந்தோம்!

திராவிடத்தால் எழுந்தோம்!!

தமிழியத்தால் வெல்வோம் !!!

செய்தி: அருள்பாலு

 

திராவிடம் 2.0 -& கருத்தரங்கத்தில் பங்கேற்றோர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner