எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரியலூர், ஜூலை 30 அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 24.7.2018 அன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையேற்க மண்டல தலைவர் சி.காமராஜ், மண்டல செயலாளர் ச.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்துறை தா.மதியழகன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் வரவேற்புரையாற்றி னார். கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றிய பின்னர் கழகப் பொறுப் பாளர்கள் மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், மாவட்ட துணைச் செய லாளர் சோ.க.சேகர், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கலியமூர்த்தி, மண்டல இ.அ.செய லாளர் மு.ராஜா, மாவட்ட இ.அ.தலைவர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இ.அ. செயலாளர் க.கார்த்திகேயன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய  செயலாளர் மு.கோபாலகிருட்டிணன், நகர தலைவர் பொறியாளர் கோவிந்தராஜன், செந்துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், ஒன்றிய செயலாளர் மு.முத்தமிழ்செல்வன், அமைப்பாளர் வெ.இளவரசன், செயங் கொண்டம் ஒன்றிய செயலாளர் துரை.பிரபாகரன், தா.பழுர் ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சு.அறிவன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன். இ.அ. தலைவர் க.செந்தில், பொன்பரப்பி சுந்தர வடிவேல், தா.பழுர் ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன், வெங்கடகிருஷ்ணாபுரம் மு.மருதமுத்து, பாரதி, இரா.கதிரவன், செந் துறை சி.கருப்புசாமி, நந்தியன் குடிக்காடு ஆ.இளவழகன், செந்துறை கலைவாணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் தங்க.சிவமூர்த்தி, ஓட்டக்கோவில் செந்தில் உள்ளிட்டவர்கள் கருத்துகளைக் கூறி கூட் டத்திற்கு நிதி உதவியினை அறிவித்தார்கள்.

தீர்மானங்கள்

1) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நாகர்கோயில் முதல் சென்னை வரையிலான விழிப்புணர்வு பரப் புரை பெரும்பயண தொடக்க விழா நிகழ்ச்சியினை இரண்டாவது கட்டமாக 1.9.2018 அன்று அரியலூரில் மிகுந்த எழுச்சியோடும், சிறப்போடும் நடத்திடுவதென ஒரு மனதாக முடிவு செய்யப்படுகிறது.

2) பொதுக்கூட்டத்தை விளம்பரப்படுத் திடும் வகையில் சுவரெழுத்து, பிளக்ஸ் விளம்பரம் உள்ளிட்ட எல்லா வகையிலும் விளம்பரப் படுத்துவதெனவும், நிதி வசூல் உட்பட அனைத்து நிலைகளிலும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் முழு ஒத் துழைப்பை வழங்குவதெனவும் தீர்மானிக்கப் படுகிறது.

3) விழிப்புணர்வு பிரச்சார பெரும்பயண தொடக்க விழாவிற்கு அரியலூர் வருகை தரும் தமிழர் தலைவருக்கு உற்சாக வர வேற்பளிப்பதெனவும் ஆகஸ்ட் 2,3,4,5 ஆகிய நாட்களில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிபட்டறையில் புதிய இளைஞர்கள், மாணவர்களை பெருமளவில் பங்கேற்க செய்வதென முடிவு செய்யப்படு கிறது.

அரியலூர் கூட்டத்திற்கு நிதி அறிவித்தவர்கள்

விடுதலை நீலமேகன் ரூ. 10,000, பொறி. இரா.கோவிந்தராஜன் ரூ. 10,000, செந்துறை மா.சங்கர் ரூ. 5,000, தா.பழுர் ஒன்றியம் ரூ. 5,000, க.சிந்தனைச்செல்வன் ரூ. 2,000, தங்க.சிவமூர்த்தி ரூ. 2,000, பொன்.செந்தில்குமார் ரூ. 2,000, க.கார்த்திகேயன் ரூ. 2,000, செந்துறை தா.மதியழகன் ரூ. 2,000, இரத்தின.இராமச்சந்திரன் ரூ. 2,000, சு.மணிவண்ணன் ரூ. 2,000, மு.கோபாலகிருட்டிணன் ரூ. 2,000, சி.சிவக்கொழுந்து ரூ. 2,000, துரை.பிரபாகரன் ரூ. 1,000, சு.அறிவன் ரூ. 1,000, மு.மருதமுத்து ரூ. 1,000, மு.ராஜா ரூ. 1,000, வெ.இளவரசன் ரூ. 1,000,  ஆ.இளவழகன் ரூ. 500, மு.முத் தமிழ்செல்வன் ரூ. 500, சி.தமிழ்சேகரன் ரூ. 500, வை.சுந்தரவடிவேல் ரூ. 500, சோ.க.சேகர் ரூ. 500.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner