எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்க்கிய நாடுகள் சபையின் உலகளாவிய இளம் தலைவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்ட பெருமையைப் பெற்ற துபாய் வாழ் இந்தியரான சாரா இக்பால் அன்சாரி, மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் பிறந்தவர். சமீபத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் துபாயிலும் பல்வேறு நாடுகளிலும் நடந்த மாதிரி அய்க்கிய நாடுகள் சபைக் கருத்தரங்குகளிலும் பங்குபெற்றிருக்கிறார்.

சிக்கலான கணிதப் புதிர்களை விடுவிக்கும் மனக் கணிதத் திறன் மேம்பாட்டு தேர்வான அபாகசை முடித்த பட்டதாரி என்ற சிறப்பையும் இந்தச் சிறுவயதிலேயே பெற்றுள்ளார். இந்தப் பயிற்சியை மலேசியாவில் உள்ள யூ.சி.மாஸ் நடத்துகிறது. குழந்தைகளின் நினைவுத் திறன், வேகமான சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குக் கொடுக்கப்படும் பயிற்சி இது.

ஓவியம் வரைவதும் விவாதங்களில் கலந்துகொள்வதும் இயற்பி யலும் எனக்கு விருப்பமானவை என்று கூறும் சாரா தற்போது துபாயில் உள்ள மில்லெனியம் பள்ளியில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஓவியப் பாடங்களைப் பிரதானமாகப் படித்து வருகிறார். குவாண்டம் இயற்பியலாளராகும் விருப்பம் இவருக்கு உள்ளது. ஆனாலும், காலப்போக்கில் எது தன்னை ஈர்க்கிறதோ, அதில் பணியாற்ற விரும்புவதாகக் கூறுகிறார். அவரது கனவுகள், லட்சியங்கள் குறித்து மேலும் கேட்டபோது, குழந்தைத்தனமும் சேர்ந்தே வெளிப்படுகிறது. ஓவியர், பேராசிரியர், அவ்வளவு ஏன் அய்.நா. தூதுவராககூட ஆகலாம் என்கிறார்.

பல்வேறு ஓவியத் தொழில்நுட்பங்களில் திறன் பெற்றிருக்கும் சாரா, எம்பிராய்டரி, தாள் வடிவமைப்புக் கலையில் ஈடுபாடு மிக்கவர். தனது திறன்களைக் கொண்டு இலங்கை, இந்தியா, அய்க்கிய அராபிய எமிரேட் நாடுகளுக்குச் சென்று வசதி வாய்ப்பற்றவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். நீச்சலிலும் வல்லவர்.

சர்வதேசியம், ஜனநாயகம், சுற்றுச்சூழலியல், சாகசம், தலைமைத் துவம், சமூகச் சேவை என ஆறு அம்சங்களை வைத்து உலகப் பள்ளிகளை இணைக்கும் இங்கிலாந்து அமைப்பான ரவுண்ட் ஸ்கொயர் அமைப்பின் உறுப்பினர் இவர். 15 வயதுக்குள் அவர் வாங்கிய விருதுகளும் பெற்ற வெற்றிகளும் நீளமானவை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner