எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 1- பெரியார் பேருரையாளரும், பகுத்தறிவா ளரும், தமிழ் அறிஞருமான மறைந்த டாக்டர் மா.நன்னன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா, ந.அண்ணல் நினைவு பரிசளிப்பு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் 30.8.2018 அன்று மாலை நடைபெற்றது. விழாவில் மா.நன்னனின் மூத்த மகள் வேண்மாள் வர வேற்புரையாற்றினார். இளைய மகள் அவ்வை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழா வுக்கு திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமை தாங் கினார்.

இதில் டாக்டர் ந.அண்ணல் நினைவு பரிசளிப்பு விழா 2018-ஆம் ஆண்டு தமிழ் வழியில் பயின்று தமிழ் மொழிப் பாடத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 16 மாணவ, -மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசும், சான் றிதழ்களும் வழங்கப்பட்டன. சுயமரியாதை முறையில் திரு மணம் செய்து கொண்ட 5 குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை நன்னனின் மனைவி பார்வதி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து மா.நன் னன் எழுதிய மணிமேகலை, இவர்தாம் பெரியார் (வரலாறு, இதழ்கள்) ஆகிய நூல்களை கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வெளியிட, நன்னனின் மனைவி பார்வதி பெற்றுக் கொண்டார். இதில் செம்மொழி உயராய்வு மத்திய நிறுவனம் முன்னாள் பதிவாளர் முகிலை ராஜபாண்டியன், செந்தலை ந.கவுதமன், எழிலினி பதிப்பக பதிப்பாளர் கோ.ஒளிவண் ணன், குடும்ப உறுப்பினர்கள் செம்மல், தமிழ்ச்செல்வன், வினோத், அணிமலர், துர்க்கா, அறிவன், கவின், வினையன், அகில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner