எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவண்ணாமலை, ஆக. 3- திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையா டல் கூட்டம், மண்டல திரா விடர் கழக தலைவர் சடகோ பன் தலைமையில் 28.7.2018 அன்று காலை 11 மணிக்கு நூர் பில்டிங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் பங் கேற்று தமிழர் தலைவர் சிறப் புரையாற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தின் நோக் கம்,சிறப்பாக நடத்த வேண்டிய அவசியத்தினை விளக்கி உரை யாற்றினார். மாவட்ட செயலா ளர் பெ.அண்ணாதாசன், பொதுக் குழு உறுப்பினர் முனு.ஜானகி ராமன், போளூர் ஒன்றிய தலை வர் பலராமன், கச்சிராப்பட்டு கிளைக்கழக தலைவர் தேவ ராசு, ஆசிரியர் இராமஜெயம், மாவட்ட மாணவர் கழக தலை வர் மு.க.ராம்குமார் சாலினி, நகர செயலாளர் மு.காமராசு, திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர் சற்குணம், மண்டலக்கோட்டை இரா.அரவிந்த் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

சென்னை பெரியார் திட லில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட திருவண்ணா மலை மாவட்ட மாணவர் கழக தலைவர் இராம்குமார் அவரது வாழ்விணையர் சாலினிக்கும் பாராட்டு தெரிவித்து  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நன்கொடை அறிவித்தவர்கள்

நகர செயலாளர் மு.காம ராசு ரூ. 30,000, மாவட்ட செய லாளர் ப.அண்ணாதாசன் ரூ. 10,000, மண்டல தலைவர் சட கோபன் ரூ. 5,000, பொதுக்குழு உறுப்பினர் முனு.ஜானகிராமன் ரூ. 1,000, போளூர் ஒன்றிய தலைவர் பலராமன் ரூ. 2,000, மாவட்ட மாணவர் கழகத் தலை வர் இராம்குமார் அழைப்பிதழ் (நன்கொடை), கச்சிராப்பட்டு தலைவர் தேவராசு பகல்உணவு (வழங்குதல்), திருவண்ணா மலை நகர பகுத்தறிவு ஆசிரிய ரணி அமைப்பாளராக ஆசிரியர் இராமசெயம் அறிவிக்கப்பட் டார். இறுதியாக சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

1) தமிழின இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அறிவி யல் மனப்பான்மையை பரப்ப வும்,

2) தமிழின பெருமக்களின் உரிமைகளுக்கும், உணர்வுக ளுக்கும் எதிராக செயல்படும் மத்திய மாநில அரசுகளின் போக் கினை விளக்கியும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள திரு வண்ணாமலை வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பது எனவும்.

9.9.2018 அன்று தொடங்கும் மூன்றாம் கட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தை மிகுந்த எழுச்சி யோடு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

விழிப்புணர்வு பிரச்சாரக் குழுவினருக்கு

காஞ்சிபுரத்தில் உற்சாக வரவேற்பளிக்க முடிவு

காஞ்சிபுரம், ஆக. 3 காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 29.7.2018 அன்று மாலை 5 மணிக்கு டி.ஏ.ஜி.அசோகன் அரிசி ஆலை யில் உற்சாகமாக நடைபெற்றது.

காஞ்சி மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் பகுத்தறிவுப் பக லவன் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு கிடைத்துள்ள வெற்றிகளையும், நாள்தோறும் அப்பணியை மேற்கொண்டு ஓய் வின்றி உழைத்துவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது பேருழைப்பையும், விழிப்பு ணர்வு பரப்புரை பெரும் பய ணத்தை எழுச்சியோடு நடத்திட வேண்டிய அவசியத்தையும் விளக்கியும் தெளிவுரையாற்றி னார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மாணவர் கழக மாநில அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல தலைவர் பு.எல்லப்பன், அரக்கோணம் மாவட்டத் தலை வர் சு.லோகநாதன், மாவட்ட செயலாளர் செ.கோபி, மாவட்ட அமைப்பாளர் சொ.ஜீவன்ராசு, மண்டல மாணவர் கழகச் செயலாளர் அ.அர்சூன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கோவிந்தராசு, நாத்திகராசு, அறி வரசன், முகிலன், இ.இரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் இளைய வேல், அருண்குமார் உள்ளிட்ட தோழர்கள் கருத்துரை வழங்கி னார்கள்.

காஞ்சி மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் வி.கோவிந் தராசு & சரசுவதி இணையரின் இரண்டாவது மகளுக்கு இன்ப நிலா என்று பெயர் சூட்டியதின் மகிழ்வாக விழிப்புணர்வு பிரச் சார பயணத்திற்கு ரூ. 200 நன் கொடை வழங்கினர்.

விழிப்புணர்வு பயணம் சிறப்புற நடைபெற நன்கொடை

அறிவித்தோர்

அரக்கோணம் மாவட்ட அமைப்பாளர் சொ.சீவன்தாசு ரூ. 10,000, காஞ்சி மாவட்ட இளை ஞரணி தலைவர் அருண்குமார் ரூ. 2,000.

நன்கொடை வழங்கியோர்

பொதுக்குழு உறுப்பினர் இளையவேல் ரூ.1,000, காஞ்சி மாவட்ட இளைஞரணி செயலா ளர் கார்த்திக் ராசா ரூ. 1,000.

பாராட்டு

காஞ்சிபுரம் மண்டல திரா விட மாணவர் கழக செயலாளர் அ.அர்சூன் வழக்குரைஞராக பட்டம் பெற்றார். 18.7.2018 அன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் பட்டம் பெற்றதன் மகிழ்வாக ரூ. 1,000, விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கினார். கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தோழர்களின் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்து பயனாடை அணிவித்து சிறப் பித்தார்.

தீர்மானம்

ஆகஸ்டு 22ஆம் தேதி நாகர் கோவிலில் தொடங்கி, மாவட்ட தலைநகரங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு 10.9.2018 அன்று காஞ்சிபுரத்திற்கு வருகை தரும் விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயண குழுவினருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிப்ப தெனவும். பிரச்சார கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது என வும் முடிவு செய்யப்பட்டது.

 

இளைஞர் எழுச்சி மாநாடு

விளக்க பிரச்சார பொதுக்கூட்டம்

அய்யனார்குளம், ஆக. 3- கடந்த 24.7.2018 அன்று மாலை புற நகர் மாவட்டம் உசிலம்பட்டி அருகில் அய்யனார் குளத்தில் திருவில்லிபுத்தூரில் மதுரை மண்டல திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி பொதுக்கூட்டம் நடை பெற்றது.

அய்யனார்குளம் கிளை தலைவர் து.சேகர் தலைமை வகுத்தார். மாவட்டத் தலைவர் ச.தனபாலன், மண்டலச் செய லாளர் சா.முருகேசன், மாவட்ட ப.க. செயலாளர் ஆசிரியர் சுப் பிரமணியன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் உரையாற்றி யவர்கள் மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மாவட் டச் செயலாளர் த.ம.எரிமலை, மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர்மன்னன், ஆட்டோ செல்வம், கா.சிவா, மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் அ.வேல்முருகன் நிறை வாக கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.

இப்பொதுக்கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் அ.முருகானந்தம், உசிலம்பட்டி ஒன்றிய செய லாளர் பெரியசாமி, மதுரை சுப்பையா, மாவட்ட இளைஞ ரணி தலைவர் பா.முத்து கருப் பன், மாவட்ட ப.க. அமைப் பாளர் பா.பாண்டி, மாவட்ட அமைப்பாளர் ரோ. கணேசன், வாடிப்பட்டி கவிஞர் கலைதா சன், அய்யனார் குளம் ச.சந்தி ரன், இன்பம், ச.பால்ராசு, மாயி உள்ளிட்டவர் கள் கலந்து கொண்டனர். நிறைவாக கிளை செயலாளர் த.பண ராசா நன்றி கூறினார்.

 

திருவள்ளூர் மாவட்டத்தில்

கிராம பகுத்தறிவுப் பிரச்சாரம்

திருவள்ளூர், ஆக. 3- திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் மணவாளநகர் செயலெட்சுமி தங்கும் விடுதி யில் உற்சாகமாக நடைபெற்றது.

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தலைமை வகித்து விழிப்புணர்வு பிரச்சாரப் பய ணத்தின் நோக்கத்தினையும், தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பினையும் எடுத்துரைத்து உரையாற்றினார்.

அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிடர் மாணவர் கழக மாநில அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டி யன், மண்டல தலைவர் பு.எல்லப்பன், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி, மாவட்ட செயலாளர் ந.அறி வுச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டாலின், மாவட்ட அமைப்பாளர் கல் பாக்கம் பெருமாள், பெரியார் பெருந்தொண்டர் ஆர்.எம்.கணே சன், மாவட்ட இளைஞரணி தலைவர் எழில், செந்துறை சா. இராசேந்திரன், கழகப்பாடகர் முனைவர் பன்னீர்செல்வம், க.தேசய்யா, ஒன்றிய கழக செயலாளர் இரா.டில்லிபாபு, ஏ.ஜி.யுவராசு, சி.நீ.வீரமணி, திருத்தணி நகர தலைவர் சோ.கிருட்டிணமூர்த்தி, தஞ்சை மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர் சற்குணம், பெரியார் திடல் யுவராசு, வட சென்னை மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் த.பரிதீன் ஆகியோர் கருத்துரை வழங் கினார்கள். நிறைவாக சொற் பொழிவாளர் பொதட்டூர் புவி யரசன் சிறப்புரையாற்றினார்.

நன்கொடை அறிவித்தோர்: செந்துறை இராசேந்திரன் ரூ. 10,000, கி.எழில் ரூ. 5,000, பி. எல்லப்பன் ரூ. 5,000, ஆர்.எம். கணேசன் ரூ. 500, பெருமாள் ரூ. 100, தேசய்யா ரூ. 2,000, டில்லிபாபு ரூ. 1,000, வீரமணி ரூ. 1,000,

தீர்மானங்கள்: தமிழின மாண வர்கள், இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை விளக்கி, நாகர்கோ வில் முதல் சென்னை வரை விழிப்புணர்வு பிரச்சார பய ணம் மேற்கொண்டு 10.9.2018 அன்று திருவள்ளூர் நகருக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும், விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயண பொதுக் கூட்டத்தினை எழுச்சியோடு நடத்துவதெனவும் முடிவு செய் யப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம பகுத்தறிவு பிரச்சார கூட் டத்தினை தொடங்குவது என வும், அப்பிரச்சாரக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு ஒருங் கிணைப்பாளராக ஆர்.எம்.கணே சன் மற்றும் க.மு.மோகனவேலு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner