எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர், ஆக. 4 நாகர்கோவில் முதல் சென்னை வரை தமிழர் தலைவர் பங் கேற்கும் விழிப்புணர்வு பரப்புரை பெரும் பயணம் வேலூரில் 09.09.2018 அன்று நடைபெறுவதையொட்டி மாவட்ட கலந் துரையாடல் கூட்டம் 29.07.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 7.00 மணியளவில் சுயமரியாதைச் சுடரொளி ஊற்றங்கரை பழனியப்பன் நினைவரங்கத்தில் (புன்னகை மருத்துவமனை) நடைபெற்றது.

வேலூர் மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார் தலைமை தாங்கினார், மாவட்ட அமைப்பாளர் ச.கி செல்வநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந. கண்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் மருத்துவர் தி.அனிதா ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநில அமைப்பு செயலாளர் உரத்த நாடு இரா. குணசேகரன் சிறப்புரையாற்றினார். பெரியார் மருத்துவரணி செயலாளர் மருத் துவர் பழ.ஜெகன்பாபு, அமைப்பு செய லாளர் வி.பன்னீர் செல்வம், மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூரபாண் டியன், வேலூர் மண்டல தலைவர் வி.சட கோபன் ஆகியோர் தமிழர் தலைவர் கலந்துகொள்ளும் பரப்புரை பெரும் பயண கூட்டம் சிறப்பாக நடைபெறுவதிற்கு ஆலோசனை வழங்கினார்கள்.

வேலூர் மாநகர மாணவர் கழக அமைப் பாளர் அ.ஜெ. ஓவியாவின் 15ஆவது பிறந்த நாள் விழா இக்கூட்டத்தில் கொண்டாடப் பட்டது. வேலூர் மாவட்ட மாணவர் கழக தலைவராக வி.சி.தமிழ்நேசன், துணைத் தலைவராக இர.கமலேஷ்குமார் ஆகியோ ருக்கு மாநில அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கினார். பொதுக்கூட்டத்திற்கு இயக்க தோழர்கள் தானாகவே முன்வந்து நிதியினை வழங்கினார்கள்.

ந.கண்ணன், வி.இரவிக்குமார், வி.இ. சிவக்குமார் -ரூ. 30,000, மரு.பழ,ஜெகன்பாபு குடும்பத்தின் சார்பில் - ரூ. 15,000, வி.சடகோபன் (மண்டல தலைவர்) ரூ. 5,000, இரா.அன்பரசன், ந. தேன்மொழி, ஓவியா அன்புமொழி (உணவு ஏற்பாடு), காங்க வீராசாமி (பகுத்தறிவாளர் கழகம்) ரூ. 3,000, குருநாதன் (மாவட்ட துணைத் தலைவர்) ரூ. 2,000, சுமதி, காவ்யா வேலூர் 2,000, வி.மோகன் (குடியாத்தம் நகர தலைவர்) 1,000, ப.பொ.இரவீந்திரன் (இளைஞரணி) 1,000, வே.பெ.குமார் (மாநகர செயலாளர்) ரூ. 500, த.தனிஷா (பெரியார் பிஞ்சு, கழிஞ்சூர்) ரூ. 500, அ.க.தனுஷா (பெரியார் பிஞ்சு, கழிஞ்சூர்) ரூ. 500

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கள் தா. நாகம்மாள், க. சிகாமணி, மாவட்ட மகளிரணி செயலாளர் ச.கலைமணி பழனி யப்பன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ச. கலைவாணி, சத்துவாச்சாரி நகர தலைவர் ச.கி.தாண்டவமூர்த்தி, குடியாத்தம் நகர செயலாளர் இ.ராமு, மாவட்ட ப.க. துணை தலைவர் ஆ. துரைசாமி, மாநகர ப.க செயலாளர் அ.மொ.வீரமணி, பெரியார் பெருந்தொண்டர் செந்தமிழ்கோ , மாநகர ப.க. துணைத்தலைவர் உ.விஸ்வநாதன், பகுத்தறிவாளர் கழகம் தி.க.சின்னதுரை, மாவட்ட மகளிர் பாசறை துணை தலைவர் இ. கயல்விழி, குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர் சி.லதா, வேலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொ.தயாளன், உரத்தநாடு த.பரிதின், மு. மன்னார், தஞ்சை மாவட்ட மாணவர் கழக இணை செயலாளர் ச.சற்குணன், குடியாத்தம் இளைஞரணி க.ச.ரேவதி, மாணவர் கழக இர. ஹேம்நாத், வி.சி.சங்கநிதி, கே.அறிவானந்தம், மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் மாநகர அமைப்பாளர் ந.சந் திரசேகர் நன்றி கூறினார். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மருத்துவர் பழ ஜெகன்பாபு குடும்பத்தின் சார்பில் சிறப் பான உணவு வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner