எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, ஆக. 7- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 4.8.2018 அன்று மாலை 6 மணி யளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் கழக அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில் நடை பெற்றது.

கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தலைவர் இ.மாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் பெ. கோவிந்தராஜ் கடவுள் மறுப்பு  கூறி வரவேற்புரையாற் றினார்.

கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் உரையில் குறிப்பிட்டபோது:& விழிப்புணர்வு பிரச்சார பெரும்பயணம் பற்றிய நோக்கம் பற்றியும் பொன்னேரி மாநாடு, கணியூர் மாநாடு, பட்டுக்கோட்டை மாநாடு, கும்பகோணம் மாநாடு, என கழக மாநாடுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதை தொடர்ந்து மத்தூர் மாநாடு பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதற்கு காரணம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொடர் இயக்கப்பணி.

அதை தொடர்நது ஆக. 18இல் பெரியார் பிஞ்சுகள் மாநாடும், பெருந்தொண்டர்கள் மாநாடும் நடத்துவது திராவிடர் கழகம் மட்டுமே. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்பு-தந்தை பெரியார் நிறை வேற்ற கலைஞர் அவர்களால் 1969இல் கொண்டுவந்த தீர்மானம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. 69 சத விகித இடஒதுக்கீடு நிலைக்க காரணம் ஆசிரியர். இனி 69 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு போட முடியாது. கோடானுகோடி மக்கள் தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள். தாழ்த்தப்பட்ட  பெண் என்பதால் பாப்பம்மாள் சமையலர் பணியிடம் மாற்றப்பட்டார். ஆனால் ஆசிரியரின் அறிக் கையால் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்பட்டார். குடியரசு தலைவரை கோயிலுக்குள் விடாமல் வெளியே நிறுத்தினார்கள். குடியரசு தலைவர் ஆர்எஸ்எஸ் காரராக இருந்தாலும் கூட அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க அறிக்கை விட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை நடத் தியவர் ஆசிரியர். ஆக சொல்லுவதை செயலிலும், செய் வதை சொல்லியும் வருபவர் நமது தலைவர், அத்தகைய தலைவர் விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயணத்தை மேற்கொள்கிறார். அதில் ஒவ்வொருவரும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) குடந்தையில் நடைபெற்ற திராவிடர் கழக மாண வர் மாநாடு, மத்தூரில் நடைபெற்ற மண்டல மாநாடு ஆகிய இருபெரும் மாநாடுகளில் கலந்து கொண்டும், உண்மை சந்தாக்களை வழங்கியும் சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

2) ஜாதி ஒழிப்பின் மிக முக்கிய அங்கமாக அனைத்து ஜாதியினர்க்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்கிற தந்தை பெரியாரின் பெரும் விருப்பத்தை நிறைவேற்று வதற்கு இடைவிடாது போராடி வெற்றியைத் தேடித் தந்துள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக் கூட்டம் பாராட்டையும் தமிழ்சமூகத்தின் சார்பாக நன் றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

3) தமிழின இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை விளக்கி யும், விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயணம் குறித்து தருமபுரிக்கு செப். 15இல் வருகை தரும் தமிழர் தலைவர்  அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும், விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயணத்தை எழுச்சியோடு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

4) செப். 5இல் தமிழர் தலைவர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயண பொதுக்கூட்ட நிகழ்வுகளை சிறப்பாக நடத்திட கீழ்க்கண்டவர்கள் வரவேற்புக்குழு பொறுப்பாளர்களாக அறிவிக்கப்படு கிறார்கள். தலைவர் இ.மாதன் (மாவட்ட தலைவர்), செய லாளர் அ.தமிழ்ச்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்), பொருளாளர் கதிர்செந்தில் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) ஆகியோர் நியமிக்கப்படுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிதி, உதவி அளித்தோர்

மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத் தில் செப். 5ஆம் தேதி தருமபுரியில் நடைபெறும் விழிப் புணர்வு பிரச்சார பெரும்பயணத்திற்காக நிதி உதவிகளை அளித்திட்ட கழக பொறுப்பாளர்கள்.

ஊமை.ஜெயராமன் & இ.மாதன் இணைந்து மேடை ஒலி, ஒளி அமைப்பு, தகடூர் தமிழ்ச்செல்வி சுவரெழுத்து (ரூ. 10 ஆயிரம் அளவிற்கு), வீ.சிவாஜி 30 பேர் கொண்ட குழுவினருக்கு தங்குமிடம், 3 வேளை உணவு, கதிர் செந்தில் சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை, அ.தமிழ் செல்வன் ரூ. 1,000, கோவிந்தராஜ் ரூ. 1,000, சேட்டு ரூ. 1,000, சுந்தரம் ரூ. 500, காரல்மார்க்ஸ் ரூ. 500 மற்றும் உண்மை சந்தா, சந்தோஷ் 500, மருத்துவர் கனிமொழி ரூ. 1,000, சுதா ரூ. 500, தவமணி ரூ. 500 என அறிவித்த னர்.

கலந்து கொண்டோர்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட நிர்வாகிகள் க.கதிர், அ.தமிழ்ச்செல்வன், சின்னராஜ், வீ.சிவாஜி, கதிர்செந்தில், சின்னராஜ், செல்லதுரை, சுதா, பகத்சிங், சிங்கம் (எ) பெரியண்ணன், சென்றாயன், மார்க்ஸ், அறிவழகன், இராமசாமி, கனி மொழி, தவமணி ஆகியோர் கலந்துக் கொண்டனர். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் சேட்டு நன்றி கூறினார்.

கிருட்டினகிரி

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் 4.8.2018 அன்று காலை 11 மணியளவில் கிருட் டினகிரி புதுப்பேட்டை வெல்கம் மகாலில் கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.

கூட்டத்திற்கு திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமை வகித்து தமிழர் தலைவரின் விழிப்புணர்வுப் பிரச்சார பெரும் பயணம் சிறப்பாக அமைய முன் ஏற்பாடுகள் குறித்து சிறப்புரை யாற்றினார்.

மாவட்டத் தலைவர் மு.துக்காராம், மண்டல தலைவர் பெ.மதிமணியன், மாவட்டத் துணைத் தலை வர் த.அறிவரசன், மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கோ.திராவிட மணி அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாணவர் கழகம் இரா.மணிமேகலை கடவுள் மறுப்பு கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.கதிரவன், மாவட்ட இ¬ளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம், இளைஞரணி மாவட்ட துணைச் செயலர் அ.கோ.இராசா, காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் த.மாது, கிருட்டினகிரி நகரச் செயலர் கா.மாணிக்கம், நகர அமைப்பாளர் கோ.தங்கராசன், மாவட்ட ப.க.தலைவர் ஈ.லூயிசுராசு, மாவட்ட ப.க. அமைப்பாளர் மு.வேடியப்பன், கிருட்டினகிரி நகர தோழர்கள் சா.நாகராஜ், சி.வடிவேல், கீழ்குப்பம் நா. அகிலன், மாணவர் கழக இரா.மணிமேகலை, ஜி.மேனகா உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன் கிருட்டினகிரியில் தமிழர் தலைவரின் பிரச்சார பெரும் பயணப் பொதுக்கூட்டம் சிறப்பாக ஏற்பாடு பல்வேறு கருத்துக்களை எடுத்து கூறி சிறப்புரையாற்றினார்.

(கடந்த 8.7.2018 அன்று மத்தூரில் நடைபெற்ற திரா விடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாட்டினை பார்த்த கிருட்டினகிரி தோழர் சி.வடிவேல் 4.8.2018 கலந்து ரையாடல் கூட்டத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார். அவருக்கு கழக மாநில அமைப்பாளர் பயனாடை அணிவித்து வரவேற்றார்.

கிருட்டினகிரியில் வருகின்ற செப். 6ஆம் தேதி அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று இருக்கின்ற விழிப்புணர்வுப் பிரச்சார பெரும் பயண பொதுக்கூட்டத்தை மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக நடத்த கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் குழு வாக இணைந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணிகளை பொறுப்பேற்று சிறப்பாக செய்வதாக உறுதியளித்து உள்ளனர்.

மாவட்ட துணைத் தலைவர் த.அறிவரசன் மற்றும் அரசம்பட்டி தோழர்கள் தமிழர் தலைவர் மற்றும் பிரச்சார குழுவினரின் வழிச்செலவு தொகையினை வழங்குவதாக அறிவித்துள்ளார். கிருட்டினகிரி நகரச் செயலாளர் கா.மாணிக்கம், நகர அமைப்பாளர் கோ.தங்கராசன் மற்றும் நகர தோழர்கள் இணைந்து மேடை ஒலி,ஒளி அமைப்பு செலவினங்களை வழங்குவதாக அறிவித்துள்ளனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.கதிரவன் மற்றும் காவேரிப்பட்டணம் தோழர்கள் இணைந்து துண்டறிக்கை மற்றும் பொதுக்கூட்டம் அழைப்பிதழ் செலவினங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம் மற்றும் இளைஞரணி தோழர்கள் இணைந்து சுவரொட்டி செலவினங்களை ஏற்று கொள்வதாக அறிவித்துள்ளார். காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது இணைந்து ரூ. 20,000 வழங்குவதாக அறிவித்துள்ளனர். தருமபுரி மண்டலத் தலைவர் பெ.மதிமணியன் தனிப்பட்ட வகையில் ரூ. 10,000 வழங்குவதாக அறிவித்துள்ளார். மாவட்ட தலைவர் மு.துக்காராம் ரூ. 5,000 வழங்குவ தாகவும், கழகப்பொதுக்குழு உறுப்பினர் காவேரிப் பட்டணம் தா.சுப்பிரமணியம் ரூ. 5,000 வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர். திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.செயராமன், மாவட்ட கழக பொறுப்பாளர்களுடன் நான்கு நாட்கள் வசூல் பணிக்காக வருவதாக உறுதியளித்துள்ளார்.

கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டினை மிகுந்த எழுச்சியோடு வெகு சிறப்பாக ஒருங்கிணைந்து நடத்திய மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனுக்கும், மத்தூரில் திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாட்டினை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.செயராமனுக்கும் மாவட்ட மற்றும் மண்டல கழகம் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

இறுதியாக கிருட்டினகிரி நகர கழகச் செயலாளர் கா.மாணிக்கம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட

தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம் 1: பென்னாகரம் சுயமரியாதைச் சுடரொளி எம்.என்.நஞ்சையா அவர்களின் உறவினர் கிருட்டினகிரி இராஜாஜி நகர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மருத்துவர் வி.வி.வெங்கட்ராமன் கடந்த 7.7.2018 மறைவுற்றார். அவரது மறைவிற்கு மாவட்ட கழகம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாடு, மத்தூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாடு ஆகிய இரு மாநாடுகளிலும் பங்கேற்றதுடன் உண்மை சந்தாக்களை அளித்து சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3: ஜாதி ஒழிப்பின் மிக முக்கிய அங்கமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகவேண்டும் என்ற தந்தை பெரியாரின் பெருவிருப்பத்தை நிறை வேற்றியதற்கு இடைவிடாது போராடி வெற்றி தேடித் தந்துள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக் கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 4: தமிழின இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை விளக்கியும் விழிப்புணர்வு பிரச்சார பெரும் பயணம் மேற்கொண்டு கிருட்டினகிரிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும் 6.9.2018 அன்று விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5: உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று கிருட்டினகிரி மாவட்டம் முழுவதும் பட்டித்தொட்டி எங்கும் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுசிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner