எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சேலம், ஆக. 7- சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 5.8.2018 அன்று காலை 11 மணிக்கு அம்மாப் பேட்டை தமிழாசிரியர் மன்றத்தில் நடைபெற்றது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் தலைமை யேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேராற்றலை விளக்கி கருத்துரை வழங்கினார்.

திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தின் நோக்கம், அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் சுரேசு, மண்டல கழகத் தலைவர் கவிஞர் சிந் தாமணியூர் சுப்ரமணியன், மண்டல செயலாளர் அ.ச.இளவழகன், மண் டல இளைஞரணி செயலாளர் செல் வம், மண்டல மாணவர் கழக செயலா ளர் தமிழர் தலைவர், மேட்டூர் மாவட்ட தலைவர் கிருட்டிணமூர்த்தி, மாவட் டச் செயலாளர் எடப்பாடி கா.நா.பாலு, ஆத்தூர் மாவட்ட ப.க. தலை வர் முருகானந்தம், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் பு.வீரமணி, சேலம் மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம், சேலம் மாவட்ட அமைப்பாளர் இராவண பூபதி, மேட்டூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் குமார், மேட்டூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கலைவாணன், வாழப்பாடி இராசா, வேல்முருகன், மாவட்ட மகளிரணி தலைவர் சு. சுஜாதா, பா.வெற்றிக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கருத்துரை வழங்கினார்கள். மாவட்ட ப.க. செயலாளர் ஆசிரியர் பெரியசாமி நன்றி கூறினார்.

நன்கொடை அறிவிப்பு

வழிச்செலவு ரூ. 30,000 மேட்டூர் மாவட்டம், மேடை, ஒலி, ஒளி ரூ. 30,000 ஆத்தூர் மாவட்டம், தங்கும் விடுதி மற்றும் ரூ. 1,000 பண்ருட்டி பரமசிவம், ஆத்தூர் மாவட்ட செய லாளர் நீ.சேகர் நன்கொடை ரூ. 1,000, மண்டல இளைஞரணி செயலாளர் செல்வம் நன்கொடை ரூ. 1,000, கடை வீதி நன்கொடை திரட்டுதல்: மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு, மாவட்ட மகளிரணி தலை வர் த.சுஜாதா நன்கொடை ரூ. 300

நன்கொடை வழங்கியவர்

இரண்டு வேளை உணவுக்காக ரூ. 5,000 பெரியார் சுயமரியாதை பிரச்சார நினைவு அறக்கட்டளை உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) தமிழின இளைஞர்கள், மாண வர்கள் மத்தியில்அறிவியல் மனப் பான்மையை வளர்க்கவும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை விளக்கியும், விழிப் புணர்வு பிரச்சாரப் பெரும் பயணம் மேற் கொண்டு 5.9.2018 அன்று சேலத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வர வேற்பு அளிப்பதெனவும் விழிப்பு ணர்வு பிரச்சாரக் கூட்டத்தை எழுச்சி யோடு நடத்துவது என தீர்மானிக் கப்படுகிறது.

2) சாதி ஒழிப்பின் மிக முக்கிய அங்கமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற தந்தை பெரியாரின் பெருவிருப்பத்தை நிறை வேற்றுவதற்கு இடைவிடாது போராடி வெற்றி தேடித்தந்துள்ள தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட் டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

3) உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி தமிழர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படி 16.8.2018 அன்று சேலத் தில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப் பாட்டத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner