எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாமக்கல், ஆக. 10 நாமக்கல் எஸ்.ஆர்.ஜி. பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் சந்திப் புக் கூட்டம் 5.8.2018 அன்று மாலை 5 மணிக்கு பெரியார் மன்றத்தின் அமைப்புச் செயலாளர் த.சண்முகம் தலைமை யில் நடைபெற்றது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இலட்சியங்களை உள்ளத்தில் ஏந்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை யில் மாணவர்கள் செயலாற்ற வேண்டிய அவசியத்தை விளக்கி திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் கருத்துரை வழங்கினார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர் கள் எஸ்.ஆர்.ஜி. பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பினை தொடங்கி வைத்து அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் கட்டளையை ஏற்று 1944ஆம் ஆண்டு திருச்சியில் திராவிட மாணவர் கழகம் தொடங்கினோம் என்றும், 1948 ஆண்டு திராவிடர் கழக இலட்சியக் கொடியினை எனது இல்லத்தில் ஏற்றினோம் என்று கூறி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையினை ஏற்று செயலாற்ற வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.

அமைப்புச் செயலாளர்  த.சண்முகம் கல்லூரி மாணவர் விடுதிக்கு விடுதலை', உண்மை' ஏட்டினை ஓராண்டு சந்தாவுக்காக ரூ. 2,000 மாண வர்களிடம் வழங்கினார்.

புதிய பொறுப்பாளர்கள்

தலைவர்: தி.அருள்செல்வன், துணைத் தலைவர்: சே.இளம் பிறையன், செயலாளர்: விசய், துணைச் செயலாளர்: கோ.சத் தியசீலன், அமைப்பாளர்: வி. வினோத்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner