எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஆக. 11 புதுச்சேரி மண்டல பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் 5.8.2018 அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை உயர் கல்வியில் இன்றைய சவால்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுச்சேரி மண்டல பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர் பெரியார் பெருந் தொண்டர் கே.வி.இராஜன் வரவேற்புரையாற் றினார். புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, புதுச்சேரி மண்டல பொதுக்குழு உறுப்பினர் தழுதாளி லோ.பழனி, விலாசினி இராசு, புதுச்சேரி மண்டல மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன், மண்டல இளைஞரணி தலைவர் திராவிட.இராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மண்டல பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன் சிறப்பு பேச்சாளர் பற்றி அறிமுகவுரையாற்றினார்.

கருத்தரங்கில் புதுச்சேரி மாநில மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இராஜாங்கம், லோக் ஜனசக்தியின் புதுச்சேரி மாநில தலைவர் தோழர் புரட்சி வேந்தன், புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் தோழர் பஷீர் அகமது, புதுச்சேரி மாநில எஸ்டிபிஅய் மாநில அமைப்பாளர் எஸ்.அப்துல்லா, எஅய்எம்அய்எம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.சம்சுதீன், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர், தலைவர் கீ.வ.சாமிநாதன், இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்த், திமுக மாணவர் அணி மாநில அமைப்பாளர் எஸ்.பி.மணிமாறன், பிற் படுத்தப்பட்டோருக்கானமாணவர் அமைப்பு பொறுப்பாளர் தோழர் தமிழ்வாணன், புதுச்சேரி அறிவியல் சங்க பொறுப்பாளர் ஏமாவதி, புதுவை சிவம் இலக்கிய பேரவை தலைவர் முனைவர் சிவ.இளங்கோ, பெரி யார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப் பாளர் தோழர் ச.தீனா, முற்போக்கு எழுத் தாளர் சங்கம் தோழர் இராமச்சந்திரன், புதுச் சேரி நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் தோழர் பி.பிரகாசு, அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு மய்யம் ஒருங்கி ணைப்பாளர் தோழர் இராம்ஜி, வீர.மோகன், புதுச்சேரி சமூகநீதி பேரவை தலைவர் தோழர் நவீன், தனராமன், மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் மங்கையர் செல்வம் ஆகியோர் கருத்துரைக்கு பின் கல் வியாளர், ஊடகங்களில் நீட்தேர்வு மற்றும் சமூகநீதிக்கான கருத்துக்களை திறமையாக எடுத்துக்கூறி எதிரிகளையும் நிலை குலைய வைக்கும் ஆற்றல் வாய்ந்த தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பெரியாருடன் அம்பேத்கருக் கான தொடர்புகள், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால் சிக்கி சீரழியும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர் களின் நிலை, இதற்காக பாஜக அல்லாத அனைத்து கட்சிகள் பெரியாரிய, அம்பேத் கரிய, பொதுவுடமை கட்சிகளின் ஒருங் கிணைந்து போராட வேண்டியதன் அவசரம் அவசியம் குறித்தும் பல்வேறு எடுத்துக்காட்டு களை ஆணித்தரமாக எடுத்துக்காட்டி நீண்ட தொரு ஆய்வுரையை உயர்கல்வியில் இன் றைய சவால்கள் என்ற தலைப்பில் சிறப் புரையாற்றினர். புதுச்சேரி தமிழ்ச்சங்கம் நிரம்பி வழிந்த நிலையில் அனைத்து அமைப்பினர், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். கருத்தரங்க நிறைவாக பகுத்தறிவு ஆசிரியரணி தோழர் ஆசிரியர் யாழ்தமிழன் என்கிற யேசுராஜா நன்றி கூறினார். உழவர்கரை நகராட்சி கழக தலை வர் சு.துளசிராமன், பெரியார் பெருந்தொண் டர் காரை பெரியார் முரசு, வாணரப்பேட்டை மோ.நெடுஞ்செழியன்,இளையரசன், டாக்டர் கு.இராஜ்குமார், கு.தில்லையம்மாள், புனித வதி இராஜ்குமார், எழுத்தாளர் அரிமா பாமகன், பைரவி, புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், கலைமாமணி வி.பி.மாணிக்கம், லாஸ்பேட்டை மணிகண் டன், புதுச்சேரி நகராட்சி கழக செயலாளர் த.கண்ணன், அமைப்பாளர் மு.குப்புசாமி, பழ பெருமாள், ஆர்.எம்.ராம்ஜி, எம்.பனி மலர், ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் செ.அ.ஆ.தேசிங்கு, சிவ.இள.கோவலன், பாவூர் பொ.தாமோதரன், த.நா.கோபிராமன், அரசு ஊழியர் சங்க சம்மேளன தொழிற்சங்க தலைவர் சி.எச்.பாலமோகனன், ந.கொளஞ்சியப்பன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன், மேனாள் கழக தலைவர் இரா.திருநாவுக்கரசு, புதிய வன், காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந் தரம், பேராசிரியர் இராச.குழந்தைவேலனார், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், ஹாஜா. புதுச்சேரி தன்னுரிமை இயக்க தலைவர் தூ.சடகோபன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடிட்டர் இரஞ்சித்குமார் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner