எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களது 13 ஆம் ஆண்டு நினைவு நாளன்று (12.8.2018) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களது தலைமையில் இறையனார் குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கப்பட்டது. (சென்னை பெரியார் திடல், 12.8.2018).

50 ஆம் ஆண்டு திருமண நாள் - 75 ஆம் ஆண்டு பிறந்த நாள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகர திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் தொண்டருமான பா.பழனி - உண்ணாமலை ஆகியோரின் 50 ஆம் ஆண்டு திருமண நாள், பழனி அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதன் மகிழ்வாக விடுதலை அரையாண்டு சந்தா ரூ.900, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.200, விடுதலை வளர்ச்சி நிதி ரூ.100/- மொத்தம் ரூ.1,400 கழகத் துணைத் தலைவரிடம் அளிக்கப்பட்டது. உடன்  அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, இறைவி, செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, பா.மணியம்மை, பா.தென்னரசு, பாலு, பெரியார் மாணாக்கன் மற்றும் அவரது குடும்பத்தினர் பா.அண்ணாதாசன், பா.பெரியார்தாசன் - புனிதா, பா.தமிழ்ச்செல்வி, சிறீதர், ரஷீல்லதி, ஏ.ஆர்.திலீபன், பேரளை, இராவணன் ஆகியோர் உடன் இருந்தனர் (பெரியார் திடல், 12..08.2018).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner